Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடடா மழைடா பண மழைடா.. ரிஷபம் ராசிக்கு அள்ளி தரும் மாசி மாதம்

Subscribe to Oneindia Tamil

மாசி மாதம்: தமிழ் மாதங்களின் அடிப்படையில் நாம் தற்போது தை மாத இறுதியல் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் மாசி மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாசி மாதத்தில்(13.2.2025 தேதி முதல் 14.3.2025 தேதி வரை) கிரகங்களின் மாற்றம் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ரிஷபம் ராசியில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்களை காணலாம்.

குரு பகவான் உங்கள் ராசிக்குள்ளேயே இருக்கிறார். குருவின் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் குருவும் என்று குரு - சுக்கிரன் பரிவர்த்தனை நடக்க உள்ளது. ராசிக்கு இரண்டாம் இடத்தில் செவ்வாய் வக்கிர நிலையிலும் இருக்கிறார். ஐந்தாம் இடத்தில் கேது பகவான் இருக்கிறார். தொழில் கர்ம ஸ்தானமான பத்தாம் இடத்தில் சனி, புதன், சூரியன் ஆகிய 3 கிரகங்கள் உள்ளன. 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தில் சுக்கிரன் மற்றும் ராகு இணைகிறார்கள்.

masi month rasi palan rishabam

சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார். மாசி 1 ஆம் தேதி சூரியன் பெயர்ச்சி உள்ளது. மாதம் முழுவதும் சூரியன் திக் பலத்தில் இருந்து நல்ல பலன்களை கொடுக்க போகிறார். மாசி 12 ஆம் தேதி (24.2.2025) ராசிஅதிபதியான செவ்வாய் வக்கிர நிவர்த்தி அடைகிறார். மாசி 15 ஆம் தேதி (27.2.2025) புதன் பெயர்ச்சி உள்ளது. மீனம் ராசியில் புதன் நீசமாகப் போகிறார். நீட்ச பங்க பலனால் நீட்ச பங்க ராஜயோகம் கிடைக்க போகிறது.

சுக்கிரன் உங்கள் ராசிக்கு அதிபதி ஆவார். அவர் மாசி 17 ஆம் தேதி (1.3.2025) வக்கிரமாக போகிறார். உங்கள் ராசிக்கு நான்காம் அதிபதியான சூரியன் உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்துக்கு பெயர்ச்சி ஆவதால் சனியின் பலம் குறையும். இதனால் உடல்நலம், ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். ஏற்கனவே இருந்த நோய் நிவர்த்தியாகும்.

சொந்த வீடு கனவு நிறைவேறும். வீடு, நிலம், வாகனம் ஆகியவை நினைத்தபடி அமையும். உங்களின் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். அம்மாவின் ஆதரவு நன்றாக இருக்கும். பங்கு சந்தையில் லாபம் அதிகரிக்கும். வெள்ளி, தங்கம், மருத்துவம், எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட முதலீடுகள் நல்ல பலன்களை தரும். சூரிய பகவானால் காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும்.

தொட்டது துலங்கும். இறங்கிய காரியத்தில் எல்லாமே வெற்றிகள் குவியும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். அரசு, அரசியல் சார்ந்த விஷயத்தில் உதவிகள் தேடி வரும். வெளிநாடு, வெளிமாநில பயணங்கள் தள்ளிப் போகலாம். முடிந்தவரை இந்த காலகட்டத்தில் பயணத்தை தவிர்ப்பது நல்லது. செவ்வாய் வக்கிரத்துக்கு பிறகு கணவன் - மனைவி இடையே இருந்த கசப்புகள் நீங்கும்.

தொழிலில் உங்கள் பார்ட்னருடன் இருந்த சச்சரவுகளும் நீங்கும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். சமூகத்தில் உயர் பொறுப்பில் உள்ளவர்களின் நட்பு ஏற்படும். வருவாய் நன்கு அதிகரிக்கும். வீண் விரயம் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். மாதத்தின் தொடக்கத்தில் மட்டும் பேச்சில் சற்று கவனமாக இருக்க வேண்டும். நிதானத்தை விடாமல் இருந்தாலே பல பிரச்னைகளை தவிர்க்கலாம்.

நீட்ச பங்க ராஜயோகத்தால் உங்கள் குழந்தைகளுக்கு திருமணம் வாய்ப்புகள் உருவாகும். குழந்தைகள் கல்வி, வேலை வாய்ப்புக்காக வெளியூர் செல்வதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறுவதால் மனம் நிம்மதியடையும். ஆசிரியர், மார்க்கெட்டிங் பணியில் இருப்பவர்களுக்கு வருவாய் அதிகரிக்கும். பங்கு சந்தையில் நினைத்து பார்க்க முடியாத லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

சுக்கிரனால் பெயர், புகழ், அந்தஸ்து அதிகரிக்கும். சொகுசு வாழ்க்கையை நோக்கி பயணிப்பீர்கள். சுப செலவுகள் உருவாகும். மாசி நடுப்பகுதியில் வாழ்க்கை துணையுடன் சின்ன சின்ன சண்டைகள் வந்து செல்லும். உங்களின் அப்பா மற்றும் மாமியார் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நீங்களும் இந்த காலத்தில் வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. அருகில் உள்ள பைரவர் கோயில் சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+