"சின்ராச இனி கையில புடிக்க முடியாது".. துலாம் ராசிக்கு ராஜயோகம்.. கொண்டாட்டமான காலகட்டம்
மே மாத ராசி பலன்கள்: ஆங்கில புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, சனிப்பெயர்ச்சி என்று 2025 ஆம் ஆண்டின் பல முக்கிய நிகழ்வுகளை கடந்துவிட்டோம். அதன் தொடர்ச்சியாக 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சி இருப்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது துலாம் ராசியில் ஏற்படுத்தும் தாக்கத்தை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
இந்த மாதம் குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. வருடக்கணக்கில் பெயர்ச்சி ஆகும் சனி, குரு, ராகு - கேது மட்டுமல்லாமல் மாத மாதம் பெயர்ச்சியாகும் கிரகங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி 7 கிரகங்களின் பெயர்ச்சி உள்ளது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

சித்திரை பிறந்துள்ளது. புதிய நிதியாண்டு பிறந்துள்ளது. விரைவில் புதிய கல்வியாண்டும் பிறக்கவுள்ளது. இதனால் பல திட்டங்களுடன் மே மாதத்தை எதிர்பார்த்து காத்திருப்போம். அந்த வகையில் மே மாதத்தில் துலாம் ராசியினர் பெறப் போகும் பலன்களை காணலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 12 ராசியில் மே மாதம் நல்ல நேரம் ஆரம்பிக்கப் போகிறது என்றால் அது உங்களுக்குத்தான். கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். இனி உங்களுக்கு அமோகமான காலகட்டாக இருக்கும். ராசிநாதன் உச்சமாக இருக்கிறார். பண வரவு அமோகமாக இருக்கும். ராசிநாதன் ராகு, சனியுடன் சேர்ந்து இருப்பதால் மகிழ்ச்சி பெருகும்.
பண வரவு அதிகரிக்கும்
இரண்டாம் வீட்டின் அதிபதி வலுவிலந்துள்ளதால் குடும்பத்தில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். பண வரவு அதிகளவில் இருக்கும், ஆனால் சிறிது சிரமப்பட்டு சம்பாதிக்க வேண்டியதாகியிருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி அடைவீர்கள். கண் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பணம் கொடுத்த இடங்களில் திரும்பி வராத தன்மை இருப்பதால் அலைச்சல் உண்டாகும். எதையோ பறிகொடுத்தது போன்ற நிலை உண்டாகும்.
கடன்கள் தீரும்
காதல் கைகூடும். திருமண யோகம் உண்டாகும். இதுவரையும் வராமல் இருந்த கடன்கள் அனைத்தும் வந்து சேரும். அடகு வைத்த நகைகளை மீட்டெடுப்பீர்கள். பெரிய தொகையை வாங்கி மற்ற கடன்களை எல்லாம் அடைத்து முடிப்பீர்கள். பெயர், புகழ் உண்டாகும் காலகட்டம். மாணவர்களுக்கு அமோகமான காலகட்டமாக இருக்கும். கூடுதல் மதிப்பெண்கள் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
மாற்றம், முன்னேற்றம்
எல்லா சுப கிரகங்களும் சாதகமான நிலையில் உள்ளதால், மே 15 ஆம் தேதிக்குப் பிறகு அமோகமான வாழ்க்கையைப் பெறுவீர்கள். இனி சின்ராச கையில புடிக்க முடியாது என்பது போன்ற காலகட்டமாக இருக்கும். முதலில் தான் நன்றாக இருப்பேன் என்ற நம்பிக்கை வைக்க வேண்டும். மனதார பிரபஞ்சத்திடம் உங்கள் கோரிக்கையை வைத்தால் நீங்கள் நினைத்தது நடக்கும் காலகட்டம்.
வெற்றி
சனி 6 இல் அமர்ந்திருக்கிறார். குரு உங்கள் ராசியை, மூன்றாம் இடத்தைப் பார்க்கப் போகிறார். ராகுவின் நிலையும் அமோகமாக உள்ளது. அதனால், அமோகமான மாற்றத்தைப் பெறுவீர்கள். கிடைக்கும் வாய்ப்புகளை பரிபூரணமாக பயன்படுத்திக் கொள்வது வெற்றியைத் தரும். கனவுகள் அனைத்தும் பலிக்கும்.
பதவி உயர்வு
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றம் உண்டாகும். தொழில் மாற்றம், வேலை மாற்றம், இடமாற்றம், வீடு மாற்றம் உண்டாகும். வீட்டை சீரமைப்பீர்கள். அருமையான காலகட்டமாக இருக்கும். புதிய முயற்சிகளை எடுத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இனி நீங்கள் பிஸியாக இருக்கும் சூழல் ஏற்படும். வேலைப் பளு அதிகரிக்கும். அமானுஷ்யமான எண்ணங்கள் தோன்றும். அதுதொடர்பான விஷயங்களைப் பார்ப்பது, கேட்பது போன்றவை ஏற்படும்.
ஆடை, ஆபரண சேர்க்கை
பிள்ளைகள் உங்களை பேச்சைக் கேட்காத சூழல் ஏற்படும். ஆனாலும், அவர்களால் பெருமை அடையும் மாதமாகவும் இருக்கும். சிந்தனை, செயல், பண வரவு, முருகன் அருள் கிடைக்கும். செவ்வாய் வலுப்பதால் அற்புதமான பாசிட்டிவான பலன்களைப் பெறுவீர்கள். முருகனின் பரிபூரண அருளைப் பெறுவீர்கள். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். ஆன்லைன் ஷாப்பிங் செய்வீர்கள். புதிய பரிசுகள் கிடைக்கும். பொருள் சேர்க்கை உண்டாகும்.












Click it and Unblock the Notifications