மீண்டும்.. மீண்டுமா.. விருச்சிகம் ராசியை துரத்தும் ராகு கேது.. ஆனாலும் காத்திருக்கும் அதிர்ஷ்டம்
மே மாத ராசி பலன்கள்: ஆங்கில புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, சனிப்பெயர்ச்சி என்று 2025 ஆம் ஆண்டின் பல முக்கிய நிகழ்வுகளை கடந்துவிட்டோம். அதன் தொடர்ச்சியாக 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சி இருப்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது விருச்சிக ராசியில் ஏற்படுத்தும் தாக்கத்தை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
இந்த மாதம் குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. வருடக்கணக்கில் பெயர்ச்சி ஆகும் சனி, குரு, ராகு - கேது மட்டுமல்லாமல் மாத மாதம் பெயர்ச்சியாகும் கிரகங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி 7 கிரகங்களின் பெயர்ச்சி உள்ளது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

சித்திரை பிறந்துள்ளது. புதிய நிதியாண்டு பிறந்துள்ளது. விரைவில் புதிய கல்வியாண்டும் பிறக்கவுள்ளது. இதனால் பல திட்டங்களுடன் மே மாதத்தை எதிர்பார்த்து காத்திருப்போம். அந்த வகையில் மே மாதத்தில் விருச்சிக ராசியினர் பெறப் போகும் பலன்களை காணலாம்.
விருச்சிகம்
சாதனைகள், சோதனைகள் என்று நல்லது, கெட்டது என்று இரண்டு பலன்களும் கலந்திருக்கும். 11 ஆம் அதிபதி உச்சமாக உள்ளார். அதனால் லாப ஸ்தானம் நன்றாக வேலை செய்யும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். உத்யோகத்தில் மாற்றம் எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல மாற்றம் உண்டாகும். உத்யோகத்தில் முன்னேற்றம் உண்டு.
தொழில்
வாய்ப்புகள் தேடி வரும். பல நல்ல மனிதர்களின் ஆலோசனையால் ஆதாயம் உண்டு. தொழில் விருத்தியாகும். பத்தாம் அதிபதி உச்சமாக இருப்பதால் தொழில் ஸ்தானம் வலுவடைகிறது. தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
நிம்மதி
கடவுளின் ஆசியை பெறப் போகிறீர்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி கிடைக்கும். உடன் பணியாற்றுவோரின் உண்மை முகத்தை தெரிந்து கொள்வீர்கள். குரு பகவானால் மனதில் திருப்தி ஏற்படும். சஞ்சலங்கள் நீங்கி சற்று நிம்மதி பிறக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
லாபம்
ரசாயனம், ரியல் எஸ்டேட், பேக்கரி, உணவு டெலிவரி ஆகிய துறை சம்பந்தப்பட்டவர்கள் சிறந்த முன்னேற்றத்தை காண்பார்கள். லாபம் அதிகரிக்கும். முதலீட்டில் லாபம் கிடைக்கும். குரு பகவானால் முதல் 15 நாட்கள் நன்றாக இருக்கும். வாழ்க்கையில் ஆங்காங்கே சின்ன சின்ன மாற்றங்கள் ஏற்படும்.
வாழ்க்கை துணை
ராசிநாதன் நீட்சமாகியுள்ளார். மே 15 தேதிக்கு பிறகு அதிக கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் அதிகளவு கவனம் செலுத்த வேண்டும். உடல், மனம் இரண்டிலும் சோர்வு காணப்படும். 12 ஆம் அதிபதியும் உச்சம் ஆகிறார். செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கை துணை விவகாரத்தில் கவனம் அதிகம் வேண்டும்.
பிரச்னை
பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் மனக்கசப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. தூக்கத்தில் பாதிப்பு இருக்கும். உடன் பணியாற்றுவோரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ராகு, கேதுவால் சின்ன சின்ன பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கும். உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உடற்பயிற்சி மிகவும் அவசியம்.
ஆரோக்கியம்
காரியம் நிறைவேறும் வரை அதை ரகசியமாக கடைபிடிப்பது மிக மிக முக்கியம். குடும்பத்திலும் வேலைப்பளு அதிகரிக்கும். வார்த்தைகளில் கவனம் தேவை. பண பரிவர்த்தனையில் எச்சரிக்கை வேண்டும். முதியோர் ரத்த அழுத்தம், சர்க்கரை ஆகியவற்றில் எச்சரிக்கை தேவை. வாழ்க்கை துணை ஆரோக்கியத்திலும் கவனம் வேண்டும். கால பைரவர் வழிபாடு நன்மை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications