வைகாசி மாத பலன்: மீன ராசிக்கு அடிச்சது லாட்டரி.. அதிர்ஷ்ட தேவதை பணத்தை வாரி இறைக்கும் யோகம்

Subscribe to Oneindia Tamil

வைகாசி மாத ராசி பலன்: சித்திரை மாதம் நிறைவடைந்து வைகாசி மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்றால் சூரியன் மேஷத்தில் இருக்கும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷபத்திற்கு வரும். 15.5.2025 முதல் 14.06.2025 வரையிலான வைகாசி மாதத்தில் மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். கிரகங்களின் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த இடமாற்றம் ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் ஏற்படுத்தும்.

meenam-rasi-palan-meenam-rasi-people-will-get-lots-of-money-in-this-vaikasi-month

தமிழ்ப் புத்தாண்டின் முதல் மாதமான சித்திரை மாதம் நிறைவடைந்து வைகாசி மாதம் பிறந்துள்ளது. சித்திரை என்றால் சூரியன் மேஷத்தில் இருக்கும். வைகாசி மாதத்தில் சூரியன் ரிஷபத்திற்கு வரும். 15.5.2025 முதல் 14.06.2025 வரையிலான வைகாசி மாதத்தில் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

அந்த வகையில், இந்த வைகாசி மாதத்தில் மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு குலதெய்வ வழிபாடு செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும். பரம்பரையாக இருக்கக்கூடிய நோய்களான ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு, தலை வலி, காது, மூக்கு, தொண்டை, கால் வலி, ஒற்றை தலைவலி, முதுகு தண்டுவடத்தில் பிரச்சனைகள் இருந்தால் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்லது.

ரத்த பந்த உறவுகளுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மனக் கஷ்டத்தை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பண வரவு அனுகூலத்தை ஏற்படுத்தும். உத்தியோகம், தொழில், வியாபாரம், படிப்பு ரீதியாக நல்ல ஏற்றத்தைக் கொடுக்கும். உத்தியோகம், வியாபாரம், தொழில், சுற்றுலா சம்பந்தப்பட்ட திடீர் பயணங்கள் அனுகூலத்தையும், ஏற்றத்தையும் ஏற்படுத்தி தரும்.

வேற்று மொழி மனிதர்களால் அதிக ஆதாயம் ஏற்படும். வேற்று மொழி மனிதர்களால் அதிக அளவிலான ஆதாயம் உண்டாகும். ஜென்மத்தில் சனி இருந்தாலும், அதிக அதிர்ஷ்டமும், அதிக சந்தோஷத்தையும் பெறுவீர்கள். திடீரென எடுக்கும் முடிவுகள் அனைத்தும் ஆச்சரியத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

உத்தியோகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இழுபறியாக இருந்து வந்த விஷயங்கள் அனைத்தும் பரிபூரணமாக நிவர்த்தியாகம். வியாபாரத்தில் சிறப்பான அமைப்பு உண்டாகும். லாபம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில், அதற்கான முயற்சிகளில் ஜெயம், நம்பிக்கை ஏற்படுவதை கண்கூடாகப் பார்ப்பீர்கள். உத்தியோகத்தில் எடுக்கக்கூடிய முடிவுகள் பலரால் பாராட்டப்படும்.

குடும்பத்திலும், சமுதாயத்திலும் செல்வாக்கு கூடும், அனுகூலமான காலகட்டமாக இருக்கும். புதிய முயற்சிகள் லாபத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தி தரும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயத்தில் மிகப்பெரிய அனுகூலமும் சந்தோஷத்தையும் பெறுவீர்கள். சுபவிரையங்கள் வரவுக்கு மேல் செலவுகள் இருந்தாலும் அதனை சமாளிப்பீர்கள்.

நீண்ட நாட்களாக தேக ஆரோக்கியத்தில் இருந்த குறைபாடுகள் நீங்கக்கூடிய அமைப்பு சந்தோஷத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். சுபிக்ஷத்துக்கு எந்தவித குறைவும் இல்லாத அருமையான காலகட்டமாக இருக்கும். உறவு முறையில் மட்டும் சிறிது கவனமாக இருந்தால் அபரிமிதமான ஏற்றத்தைப் பெறுவீர்கள். குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

புதிய வேலை, தொழில், வியாபாரம் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அமையும், பண வரவு உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு அருமையான வேலைவாய்ப்பு கிடைப்பதறகான வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+