Rasi Palan This Week: திடீர் அதிர்ஷ்டத்தால் திக்குமுக்காடும் மீன ராசி.. ஒரு விஷயத்தில் மட்டும் கவனம்
வார ராசி பலன்: நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீன ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு தாய் வழி உறவு, தந்தை வழி உறவுகளில் அனுகூலங்கள் காணப்படும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. குலதெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும். உத்தரவாதத்துடன் நீங்கள் எடுக்கும் அத்தனை முடிவுகளிலும் வெற்றிகளைப் பெறுவீர்கள்.
வாக்குவாதம் வேண்டாம்
அண்டை அயலாரிடம் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பேச்சில் எப்போதும் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. உடற்பயிற்சி செய்யவில்லை எனில் சனியால் பாதிக்கப்படும் சூழல் உள்ளதால், தவறாமல் உடற்பயிற்சியைக் கடைப்பிடிப்பது நல்லது. தோப்புக்கரணம் போடுவது, ஸ்டிரெச்சிங் செய்வது, முதுகு, கை, கால், சுழுக்கு போன்றவற்றில் அதீத கவனமாக இருப்பது நன்மை பயக்கும். அதீத நீர் பருகுவது நல்லது.
ஆதாயம் நிச்சயம்
வாகனங்களில் செல்லும்போது தர்க்கங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. வேற்று மொழி மனிதர்களால் அதிகளவிலான ஆதாயத்தைப் பெறுவீர்கள். கடல் கடந்து தொழில் செய்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்களும், திடீர் ஏற்றமும், திடீர் பண வரவும் ஏற்படும் நல்ல காலகட்டமாக இருக்கும். யோகத்தையும், அனுகூலத்தையும் பெறக்கூடிய அற்புதமான காலகட்டம்.
அடுத்தடுத்து குட்நியூஸ்
இழுபறியாக இருந்த நிலைமைகள் அனைத்தும் படிப்படியாக மாறும். தொழில் அபிவிருத்தி, வியாபார அபிவிருத்தி, படிப்பு அபிவிருத்தி, உத்தியோக அபிவிருத்தி என அனைத்து விஷயங்களிலும் அபிவிருத்திகள் ஏற்படும். நல்ல ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். சிவன் கோயிலில் இருக்கும் பார்வதி தேவிக்கு வெண்மலர் கொடுத்து வழிபடுவது, பசுநெய் கொடுத்து வழிபடுவது மன நிம்மதியை ஏற்படுத்தும்.
தடைகள் நீங்கும்
இதுவரை இருந்து வந்த சிறு சிறு தடைகளும் நீங்கும். விநாயகரை வழிபாடு செய்து வருவது தடைகள் அனைத்தில் இருந்தும் விடுதலை பெறும் யோகம் ஏற்படும். விநாயகர், துர்க்கை வழிபாடு கால சர்ப்ப தோஷத்தில் இருக்கக்கூடிய பாதிப்புகளை நிவர்த்தி செய்யும். கோளார் பதிகத்தை சொல்ல சொல்ல 6 ஆம் இடத்தில் உள்ள கேதுவாலும், 12 ஆம் இடத்தில் இருக்கும் ராகுவாலும் ஏற்படக்கூடிய சங்கடத்தை எல்லாம் நிவர்த்தி செய்யும்












Click it and Unblock the Notifications