Rasi Palan This Week: மீனம் ராசிக்கு நல்ல நேரம் ஸ்டார்ட்.. ஜென்ம சனி இருப்பதால் சில விஷயத்தில் கவனம்
வார ராசி பலன்: அக்டோபர் 1 முதல் 5 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 15 முதல் 19 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மீனம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நவராத்திரி ஆரம்பித்துள்ளது. அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமி வரை நவராத்திரி விசேஷம் நடைபெறும். செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும் காலகட்டம். ஜென்ம சனி இருப்பதால் உடற்பயிற்சி மிக மிக முக்கியம். கணவனாக இருந்தால் மனைவியின் உடல்நிலையிலும், மனைவியாக இருந்தால் கணவனின் உடல்நிலையிலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. சுப விரைய பிராப்தம் நிச்சயமாக ஏற்படும்.
பிரச்சனைகள் தீரும்
நிலம், வீடு, மண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் தீரும். ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் பயணத்தின்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒற்றுமையைக் குறைப்பதற்கு சிலரின் முயற்சி தேவையில்லாத சிக்கல்களையும், கஷ்டத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியை ஏற்படுத்தும்.
நம்பிக்கை
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள் பெரிய நம்பிக்கையையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும். ரத்த பந்த உறவுகளின் தேக ஆரோக்கியம், அவர்களுக்கும் உங்களுக்கும் வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சினிமா, கலைத் துறையில் மிகப்பெரிய நம்பிக்கை ஏற்படுத்தும்.
வழிபாடு
கோளார் பதிகத்தை சொல்லி வந்தால் புதிய தொழில் செய்யும் அமைப்பு ஏற்படும். குடும்பத்தில் அனுகூலம் காணப்படும். சுபகாரியத்தில் இருந்து வந்த தடைகள் நிவர்த்தியாகும். புது வரவுகள் குடும்பத்தில் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். ஞாயிற்றுக்கிழமையில் விநாயகர் வழிபாடு, பெருமாள் வழிபாடு, அனுமன் வழிபாடு செய்வது அற்புதமான ஏற்றத்தைக் கொடுக்கும். தொழில் ரீதியாக இருந்து வந்த சங்கடங்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications