ஹனிமூன் பிளானே அவளோடதுதான்.. ரூ10 லட்சம் நகையுடன் கணவனுக்கு பக்கா ஸ்கெட்ச்.. ரகுவன்ஷியின் அம்மா ஷாக்
சில்லாங்: மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கில் மனைவியே கைது செய்யப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ஹனிமூன் திட்டமே சோனம் போட்டதுதான். அவனை ரூ.10 லட்சம் மதிப்பிலான நகை அணிந்து வர வைத்தாள் என்று கொலை செய்யப்பட்ட ராஜாவின் அம்மா கூறியுள்ளார்.
மத்தியப்பிரதேசம் மாநிலம், இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோனம் என்ற பெண்ணுடன் கடந்த மே மாதம் 11 ஆம் தேதி திருமணமானது. கடந்த மே 20 ஆம் தேதி இந்த தம்பதி மேகாலயா மாநிலத்துக்கு ஹனிமூன் சென்றனர். சில்லாங் அருகே உள்ள ஒரு ஹோம் ஸ்டே விடுதியில் தங்கியிருந்த அவர்கள், கடந்த மே 23 ஆம் தேதி அந்த ரூமை செக் அவுட் செய்து வெளியேறியுள்ளனர்.

சிறிது நேரத்திலேயே புதுமண தம்பதி மாயமாகிவிட்டனர். உறவினர்கள், நண்பர்கள் உள்பட யாராலும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. உறவினர்கள் அளித்தப் புகாரின் அடிப்படையில் மேகாலயா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கினார்கள். சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தம்பதியை தேடும் பணி நடந்தது.
இதனிடையே கடந்த ஜூன் 2 ஆம் தேதி ராஜா ரகுவன்ஷியின் உடல் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. உடல் முழுவதும் காயங்கள், அருகிலேயே ரத்தக்கறை இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதேநேரத்தில் அவரின் மனைவி சோனம் குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை. இதனால் இந்த வழக்கில் மர்மம் நீடித்துக் கொண்டே இருந்தது.
இந்நிலையில் உத்தரப்பிரதேசம் காசியாபூர் அருகே உள்ள தாபாவில் வைத்து சோனமை காவல்துறையினர் நேற்று இரவு கண்டறிந்தனர். யாரும் எதிர்பாராத வகையில் கணவனை கொலை செய்த குற்றச்சாட்டில் சோனம் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சோனமின் காதலன் ராஜ் குஷ்வஹா மற்றும் கூலிப்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோனம் கொலை செய்யவில்லை என்று அவரும், அவரின் குடும்பத்தினரும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் ராஜா ரகுவன்ஷி அம்மா உமா கூறுகையில், "என் மகன் பிசினஸ் செய்து வந்தான். இருவரின் விருப்பத்தின் அடிப்படையில் தான் திருமணம் நடைபெற்றது. சோனம் மகிழ்ச்சியாக தான் இருந்தாள். என்னையும் அவ்வப்போது கட்டிப் பிடித்து பாசத்தை வெளிப்படுத்துவாள்.
இந்த ஹனிமூனுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சோனம் தான் செய்தாள். பயண டிக்கெட், ரூம் ஆகியவற்றை அவள் தான் புக் செய்தாள். ஆனால் ரிட்டன் டிக்கெட் மட்டும் புக் செய்யவில்லை. இந்த டிரிப் குறித்து எந்த தகவலையும் சோனம் எங்கள் 2 குடும்பத்தாரிடமும் சொல்லவில்லை. பயணத்தை அவளே நீட்டித்திருக்க வேண்டும் என நினைக்கிறோம். என் மகனுக்கு அந்தப் பகுதியை பற்றி எதுவும் தெரியாது.
சோனம் கடந்த வருடம் கூட அங்கு சென்றிருப்பதால் அவளுக்கு மேகாலயா குறித்து நன்கு தெரியும். ஹனிமூனுக்கு சோனம் தன் வீட்டில் இருந்தே விமான நிலையம் வந்துவிட்டாள். ராஜா மட்டும் இங்கிருந்து புறப்பட்டான். அப்போது அவன் அதிகளவு நகை போட்டிருந்தான். இவ்வளவு நகை அவசியமா என நாங்கள் கேட்டதற்கு, சோனம் அணிந்து வர சொல்லியிருக்கிறாள் என்று கூறினான்.
டைமண்ட் மோதிரம், செயின், பிரேஸ்லைட் உள்பட ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகளை அணிந்திருந்தான். அதில் பல நகைகள் மாயமாகியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எந்த குற்றமும் செய்யாமல் ஒருவரை காவல்துறை எப்படி கைது செய்யும். சோனம் என் மகனை உண்மையாக காதலித்திருந்தால் அவனை கொலை செய்ய விட்டிருக்க மாட்டாள். இதில் தொடர்புடைய அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும்." என்றார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications