Rasi Palan This Week: மேஷ ராசிக்கு தலைக்கு மேல் சுத்தும் கத்தி.. 7 நாட்களில் வரப்போகும் ஆபத்து
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு மேலதிகாரிகள் விஷயத்தில் வாக்குவாதங்கள் செய்யாமல் இருக்க வேண்டும். சட்டத்திற்குப் புறம்பானவர்களின் தொடர்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். கோபத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சிறிய வாக்குவாதங்கள் கூட பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதால் கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.
கவனம்
எல்லா விஷயங்களிலும் கவனமாக இருப்பது நல்லது. அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், அரசுத் துறைகளில் இருப்பவர்கள் அதீத கவனமாக இருப்பது நன்மையை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் நரம்பு, குறைந்த ரத்த அழுத்தம், ரத்த அழுத்தம், நடுக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
ஆரோக்கியம்
தேவையில்லாத குழப்பங்கள், பிரச்சனைகள், வாங்குவாதங்களுக்கு பஞ்சாயத்துகள் முடியும். அஷ்டமத்தில் சூரியன், செவ்வாய், புதன் வக்கிரமாக இருப்பதால் இடுப்பு வலி, அடிவயிறு, கழிவுப் பாதைகள் போன்றவற்றில் பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. முடியாத பஞ்சாயத்துகள், பிரச்சனைகள் தீர்வு கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.
வெற்றிகள் உண்டு
அரசு வேலைகள் கிடைக்கும். புதிய வீடுகள் வாங்கும் யோகம் ஏற்படும். சாக்கடை பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை போன்ற அடிப்படை பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். மாணவ, மாணவிகளுக்குப் புதிய முயற்சிகள் கைகூடும். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். நினைத்த காரியங்களில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். ஆண்கள் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை பயக்கும்.
வழிபாடு
இரவு நேர பயணங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. ஆண்கள் கண்டிப்பாக விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. ருத்ரன் வழிபாடு சந்தோஷத்தை ஏற்படுத்தும். சந்தோஷமும், பொருளாதாரமும் 75 சதவீதம் அற்புதமாக இருக்கும். அனுமன் சாலிஷா கேட்பது முன்னேற்றத்தை ஏற்படுத்தும். பெருமாள், தாயார், ஆஞ்சநேயர் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்வது நன்மையைத் தரும். சுவாமிக்கு பசுநெய் தீபம் ஏற்படுத்துவது மேன்மையை ஏற்படுத்தும்.
-
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications