Rasi Palan This Week: மேஷ ராசிக்கு 7 நாட்களில் அதிர்ஷ்டம் கொட்டும்.. புது தொழில் தொடங்கும் யோகம்
வார ராசி பலன்: நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 17 முதல் 22 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்கள் பெருமாள் தாயார், சிவன் பார்வதி, முருகர் வள்ளி தெய்வானை எனஜோடியாக இருக்கும் தெய்வங்களை வழிபாடு செய்வது நல்ல மேன்மையைத் தரும். ஆரோக்கியத்தில் சோம்பல், கை, கால், வலி, மன அழுத்தம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நன்மையைத் தரும். பெண்கள் மிகுந்த சோம்பலுடன் காணப்படுவார்கள்.
அனுகூலம்
பிள்ளைகளிடம் வாக்குவாதம், தகராறு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. அபிராமி அந்தாதியில் 40, 59, 75 ஆவது பாடல்களை படிப்பது, கேட்பது நன்மை பயக்கும். குடும்பத்தில் தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்க்க வேண்டும். தொழில் ரீதியாக அனுகூலம் காணப்படும். பயணங்கள் ஏற்றத்தை ஏற்படுத்தித் தரும். பயணங்களால் அனுகூலம் காணப்படும்.
பண வரவு
பெயர், புகழ் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல நம்பிக்கையும், மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
உடற்பயிற்சி
கூட்டுத் தொழில் செய்பவர்கள் சொந்தத் தொழில் தொடங்கக்கூடிய யோகம் ஏற்படும். சுபகாரியத்தில் அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் நல்ல மருத்துவர்களும், நல்ல மருத்துவ ஆலோசனைகளும் கிடைக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு உடற்பயிற்சியை செய்யத் தொடங்குவீர்கள். நீங்களா உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்று வீட்டில் உள்ளவர்களே ஆச்சரியப்படும் காலகட்டம்.
புது தொழில்
எந்தவிதமான சவால்கள் வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். நல்ல கெளரவம், பெயர், புகழ் கட்டாயம் உண்டாகும் அற்புதமான காலம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த அத்தனை விஷயங்களும் அடுத்தடுத்து நடக்கும். புதிய தொழிலைத் தொடங்குவீர்கள். யோகங்களை அள்ளிக் கொடுக்கும் வாரமாக இந்த வாரம் உங்களுக்கு கட்டாயம் அமையும்.












Click it and Unblock the Notifications