"யார் கெத்து?" திருப்பூரில் கம்பு, இரும்பு ராடுடன் நடுரோட்டில் அரசு பள்ளி மாணவர்கள் மோதல்!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூரில் இரு அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கம்பு மற்றும் இரும்பு கம்பிகளுடன் நடுரோட்டில் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் சமுதாயம் எதை நோக்கி செல்கிறது என்ற கேள்வி சமூகஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கொங்கு மெயின் ரோடு- ரயில் நிலைய பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே யார் கெத்து என்ற போட்டியில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

Thiruppur students

இந்த நிலையில் குமரன் சிலை சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த மாணவர்களை மற்றொரு தரப்பை சேர்ந்த மாணவர்கள் கம்பு, இரும்பு கம்பிகளுடன் விரட்டி விரட்டி தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக அங்கிருந்த பொதுமக்கள் எடுத்த வீடியோ வைரலான நிலையில் ஒரு மாணவனை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது போல் சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் , பாரிமுனை அருகே முக்கிய பேருந்து நிறுத்தத்தில் ரூட் தல போட்டியில் இரு வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கற்கள், மரக்கட்டைகள், கூர்மையான ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர்.

தாம்பரம்- செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் மின்சார ரயிலில் பயணிக்கும் மாணவர்கள் இடையே ரூட் தல பிரச்சினை காரணமாக ஓடும் ரயிலிலும் பிளாட்பாரத்திலும் மோதல் ஏற்பட்டது. அப்போது கத்தி, இரும்பு கம்பிகளுடன் ரயிலில் ஏறி பயணிகளை அச்சுறுத்திய மாணவர்கள் மீது ரயில்வே காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

அது போல் நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் மேல்நிலை பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கிடையே நடந்த தகராறு காரணமாக பள்ளி முடிந்து வெளியே வந்த மாணவர்கள் கும்பலாக சேர்ந்து சக மாணவர்களை கம்புகளால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதே போல் கோவை பேருந்து நிலையத்தில் இரு வேறு அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் குழுவாக பிரிந்து பேருந்தில் ஏறுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக நடுரோட்டில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

இன்றைய மாணவர்கள் நாளைய எதிர்காலம் என ஒவ்வொரு அரசியல்வாதிகளும் மேடைக்கு மேடை சொல்லி வருகிறார்கள்.வருங்கால இந்தியாவின் வளர்ச்சி மாணவர்களை முன்னிறுத்தியே இருப்பதாகவும் நம்பப்படுகிறது. ஆனால் தற்போது மாணவர்கள் பள்ளி பருவத்திலேயே மது, போதை, புகையிலை, கஞ்சா, அடிதடி, கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதிலும் சிலர் பாலியல் வன்கொடுமைகளிலும் ஈடுபடுகிறார்கள்.

பெற்றவர்கள் கஷ்டப்பட்டு கூலி வேலை செய்து படிக்க வைத்து வரும் நிலையில் இந்த மாணவர்கள் சிறிதும் பொறுப்பில்லாமல் இப்படி வன்முறைகளில் ஈடுபடுவதால் சட்டரீதியாக பிரச்சினைகளை சந்தித்து நாளை எதிர்காலமே பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் என தெரிந்தும் இவர்கள் இது போல் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொள்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. படிப்பில் போட்டி போட்டுக் கொண்டு படித்து நன்மதிப்பை பெறாமல் , யார் கெத்து, யார் ரூட்டு தல போன்ற சமூக முன்னேற்றத்திற்கு எதிரான விஷயங்களில் கவனம் செலுத்தி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளை எடுத்து மாணவர்களை நல்வழிப்படுத்தும் விஷயங்களை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+