பேருக்குத்தான் ‘இந்தியா’ கூட்டணி.. நாளை டெல்லியில் நடக்கும் பிரமாண்ட பேரணியில் பங்கேற்காத விஜய்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் நாளை 'இந்தியா' கூட்டணி சார்பில் நடைபெறும் பிரமாண்ட பேரணியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கப்போவதில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா கூட்டணியில் தவெக இணைந்துள்ள நிலையில், கூட்டணி சார்பில் நடக்கும் பேரணியில் தவெக தலைவர் பங்கேற்காதது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) கண்டித்தும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் நாளை நவம்பர் 1 ஆம் தேதி பிரமாண்ட பேரணியை டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடத்த இந்தியா கூட்டணி தயாராகியுள்ளது.

TVK Chief Vijay to Skip INDIA Bloc s Delhi Rally Tomorrow Fueling Political Speculation

'வாக்கை காப்போம் - நாட்டை காப்போம்' என்ற முழக்கத்துடன் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது காங்கிரஸ் கட்சி. டெல்லியில் நாளை நடைபெறும் பேரணியில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், வணிகர்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அணி திரண்டு வரும்படி ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா கூட்டணி சார்பில் நடைபெறும் இந்தப் பேரணிக்கு ஆதரவு அளிப்பதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்தப் பேரணியில் பங்கேற்கின்றன. எனினும் தவெக இந்தப் பேரணியில் பங்கேற்பது பற்றிய தகவல்கள் இல்லை.

இந்தியா கூட்டணியில் தவெக இடம்பெற்றிருப்பதாக காங்கிரஸ் மற்றும் தவெக தலைவர்கள் ஏற்கனவே உறுதிப்படுத்தி உள்ளனர். அண்மையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் தவெக சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

அதைத்தொடர்ந்து, தவெக இந்தியா கூட்டணியில் இணைந்த பிறகு முதல்முறையாக இந்தியா கூட்டணி சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தவெக பங்கேற்றது. தவெக சார்பில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும், தவெக கொள்கை பரப்புச் செயலாளருமான ராஜ்மோகன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.

அந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது பாஜக, மோடி, ஞானேஷ் குமார், அமித் ஷா உள்ளிட்டோரின் பெயர்களையே பயன்படுத்தாமல் பேசி முடித்தார் அமைச்சர் ராஜ்மோகன். மேலும், ஆர்ப்பாட்டத்தின்போது, தவெக கட்சிக் கொடியே காணவில்லை. ஒரிருவர் மட்டுமே தவெக கொடியுடன் நின்றனர். தவெக சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்றிருந்தும், தவெக கொடியையே பெரிதாக பார்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தான், தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டை கண்டித்து இந்தியாவே திரும்பிப் பார்க்கின்ற வகையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பேரணி நடத்துவதாக இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இந்தப் பேரணியில் 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருக்கும் தவெக இந்தப் பேரணியில் பங்கேற்பது பற்றி இதுவரை தகவல்கள் இல்லை. தமிழக முதல்வரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் டெல்லி செல்லவில்லை என்றும் தெரிகிறது.

இந்தியா கூட்டணியில் தவெக இடம்பெற்றுள்ள நிலையில், கூட்டணி சார்பில் பாஜகவை கண்டித்து நடைபெறும் பேரணியில் தவெக பங்கேற்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வேறு முக்கிய நிகழ்ச்சி எதுவும் இல்லாத நிலையிலும் விஜய் டெல்லி செல்லவில்லை. பாஜகவுக்கு எதிராக குரல் கொடுக்க விஜய் விரும்பவில்லை என்ற விமர்சனங்கள் கடுமையாக எழுந்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+