Yogasanam: பழனி ஐவர் மலையில் 275 படிக்கட்டுகளில் யோகாசனம்! 3 மாணவர்கள் சாதனை!
பழனி: பழனி அருகே ஐவர் மலையில் 275 படிக்கட்டுகளில் யோகாசனம் செய்து 3 பள்ளி மாணவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர். ஒவ்வொரு படிக்கட்டிலும் யோகாசனம் செய்தபடியே இந்த மூவரும் மலையேறினர்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள ஐவர் மலையில் 275 படிக்கட்டுகளிலும் யோகாசனம் செய்தபடி மலையேறி மூன்று பள்ளி மாணவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.

பழனியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களான நகுலன், மேகவர்ணிகா, ரெணுஷ்கா ஆகிய மூவரும் வித்தியாசமான முறையில் யோகாசனம் செய்து உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதற்காக பழனி அருகே உள்ள ஐவர் மலையின் அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை உள்ள 275 படிக்கட்டுகளிலும் ஒவ்வொரு படியாக யோகாசனம் செய்தபடி ஏறினர்.
சூரிய நமஸ்காரம், கோணாசனம், அர்த்த கோணாசனம், தடாசனம், வீராசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களை ஒவ்வொரு படிக்கட்டிலும் செய்து அசத்தினர்.

மாணவர்களின் இந்தச் சாதனை முயற்சியை குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனம் உலக சாதனையாகப் பதிவு செய்தது. 275 படிக்கட்டுகளிலும் யோகாசனம் செய்து உலக சாதனை படைத்த மூன்று பள்ளி மாணவர்களையும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

இயற்கை வளங்களை காப்போம் என்பதை வலியுறுத்தியும், யோகாசனத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், பள்ளி மாணவர்கள் மேற்கொண்ட இந்த வித்தியாசமான உலக சாதனை முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications
