Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. ஆரோக்கியத்தில் ரொம்ப கவனம்

Subscribe to Oneindia Tamil

செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. அந்த வகையில், செப்டம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

நவக்கிரகங்களில் உள்ள ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், ஒரு சில ராசியினருக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய் மற்றும் சூரியன் ஆகிய 4 கிரகங்களும் தங்கள் நிலையை அடுத்தடுத்து மாற்றுகின்றன.

mesham-september-month-rasi-palan-mesham-rasi-people-will-get-good-benefits-during-this-month

செப்டம்பர் 13 ஆம் தேதி துலாம் ராசியில் செவ்வாய் பெயர்ச்சியாகிறார். செப்டம்பர் 14-ஆம் தேதி சிம்ம ராசியில் சுக்கிரனுன் பெயர்ச்சியாகி புதனுடன் இணைகிறார். இந்த இரண்டு கிரகங்களும் லட்சுமி நாராயண யோகத்தை உண்டாக்குகின்றன. செப்டம்பர் 15 ஆம் தேதி கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்களும் நிகழ்கின்றனர். செப்டம்பர் மாதம் நிகழும் இந்த கிரக மாற்றங்களால் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

மேஷம்

மனதில் நீங்களாகவே ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டே இருப்பீர்கள். அந்த குழப்பங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். தொழில், உத்தியோகம், படிப்பு, வியாபாரம், பண வரவு, முதலீடுகள் போன்ற அனைத்திலும் அனுகூலம் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளுடைய படிப்பு, தொழில் ரீதியாக மனம் விட்டுப் பேசுவது நன்மையை ஏற்படுத்தி தரும்.

ஆரோக்கியம்

தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகளில் மிகுந்த கவனம் தேவை. வண்டி, வாகனங்கள், ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். அதற்கு அனுகூலமான காலகட்டமாக இருக்கும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பண வரவு வந்து சேரும் திட்டமிட்டு எல்லா காரியங்களையும் செய்வீர்கள்.

தொழில் தொடங்கும் யோகம்

புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். புதிய வியாபாரம் செய்ய ஆரம்பிப்பீர்கள். புதிய முதலாளிகள் கிடைப்பார்கள். சுப காரியத் தடைகள் அனைத்தும் நீங்கும். முருகனை மனதார வழிபாடு செய்வது மன அழுத்தத்தை தீர்க்கும். நரசிம்மர் கவசத்தை கேட்டு வருவது அற்புதமான மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.

நிம்மதி கிடைக்கும்

எந்தவித பயணங்கள் வந்தாலும் அது தெய்வீகம் சார்ந்த பயணங்களாக அமையும். குடும்பத்தில் பிள்ளைகள், துணையுடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவர்களுக்கு வேண்டிய விஷயங்களை செய்து கொடுப்பது மன ரீதியிலான நிம்மதியைக் கொடுக்கும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். கூட்டாளிகள் பிரச்சனைகள் தீரும். எல்லா விதத்திலும் பொறுமைக் காத்து, செயல்களைச் செய்வது நன்மையைத் தரும்.

உறவுகளில் மேன்மை

தாய் வழி உறவு, தந்தை வழி உறவுகள் உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் இந்த காலகட்டத்தில் உங்களை மீண்டும் தேடி வரும் நல்ல காலகட்டமா இருக்கும். திருமண யோகம் உண்டு. பண வரவுகள் நன்றாக இருக்கும். பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+