Rasi Palan This Week: மேஷ ராசிக்கு எடுத்த காரியத்தில் ஜெயம்.. பண வரவு சூப்பரோ சூப்பர்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: ஆகஸ்ட் 25 முதல் 31 ஆம் தேதி வரையிலான ஆவணி 9 முதல் ஆவணி 15 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Weekly rasi palan Mesham Lucky zodiac signs

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த மாதத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு

அந்த வகையில், ஆகஸ்ட் 25 முதல் 31 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்களுக்கு உத்தியோகம், வியாபாரம், தொழில், பயணம் தொடர்பான விஷயங்களில் அனுகூலம் காணப்படும். பண வரவுக்கு உத்தரவாதம் உண்டாகும். சோம்பலாக இருந்த மேஷ ராசியினர் இனி சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பிப்பீர்கள். உங்களுடைய குடும்பத்துக்கா நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். குடும்பத்திற்கு தேவையான விஷயங்களை தாங்கி பிடிப்பீர்கள்.

திட்டமிடல்

எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைத்து வாக்குறுதி கொடுத்து சிக்கிக் கொள்வீர்கள். அதெல்லாம் படிப்படியாக மாறும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர்கள். எடுத்த காரியங்களில் ஏற்றம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் தீரும். துணை, தாய் வழி உறவுகளில் மேன்மை அடையும்.

லாபங்கள் கூடும்

லாபங்கள் அபரிமிதமானதாக இருக்கும். நண்பர்கள், சமூகத்தில் பெரிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். பெரும் பொறுப்புகள் கிடைக்கும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். ஏற்றமும், அனுகூலமும் நிறைந்த காலகட்டம். எந்த விஷயத்தைப் பற்றியும் கவலைப்படாமல், முன்னேற்றத்தை நோக்கிச் செல்வது நல்லது.

தூக்கம் முக்கியம்

ஏதாவது சிந்தித்துக் கொண்டே இருக்காமல் இருப்பது நல்லது. நிம்மதியாக தூங்குவது கட்டாயம். மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் இருக்கின்ற காலத்தை இருப்பதை வைத்து சந்தோஷமாக அனுபவிப்பது உங்களுக்கு நன்மையைத் தரும். தொழில், வியாபாரத்தில் மாற்றங்கள் ஏற்படும். பணம் சார்ந்த விஷயங்களில் இருந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

வழிபாடு

நிறைய நல்லவைகள் நடக்க துர்க்கை வழிபாடு செய்வது நல்லது. சந்தோஷத்தையும், மன நிம்மதியையும் கொடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நிறைய நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்வது நல்லது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+