Rasi Palan This Week: மிதுன ராசிக்கு 7 நாட்களில் அடிக்கும் ஜாக்பாட்.. பண வரவு நிச்சயம்
வார ராசி பலன்: நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 1 முதல் 7 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் வயிறு தொடர்பான உறுப்பில் வரும் பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். எல்லா விஷயங்களிலும் வெற்றி பெறும் நல்ல யோகமான அமைப்பு உண்டு. பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். முதலீடுகளுக்கு எந்தவித குறைவும் இருக்காது. எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் ஏற்படும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம் நடக்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
தொழில்
மரண பயம் நீங்கும். தைரியத்துடன் செயல்படத் தொடங்குவீர்கள். யோக பலன்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் காணப்பட்டிருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நீங்கும் நல்ல காலகட்டம். மிதுன ராசியினருக்கு தொழில் மாற்றங்கள் பெரிய அளவு பலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். முருகரைப் பிடித்துக் கொள்ளக்கூடிய மிதுன ராசியினருக்கு பெரிய அளவிலான நம்பிக்கை கிடைக்கும்.
ஆரோக்கியம்
ரத்தத்தில் பரவும் தொற்று நோய்களில் கவனமாக இருக்க வேண்டும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் உச்சகதியில் இருக்கும் குரு வக்கிரமடைந்திருக்கிறார். திரிகோணத்தில் புதன் அமர்ந்திருக்கிறார். சூரியன், செவ்வாய் அமர்ந்திருக்கும்போது கோர்ட், கேஸ் என எல்லாவற்றிலும் ஜெயிக்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் சிறிய சிறிய அறுவை சிகிச்சை செய்வீர்கள்
சுக்கிர யோகம்
அரசுக்கு எதிராக கேஸ் போட்டாலும் ஜெயிப்பீர்கள். புதிய பொறுப்புகள் வந்து சேரும். வேலையில் எதிரிகளை துவம்சம் செய்வீர்கள். எந்த விஷயங்களை எடுத்தாலும் அதில் அதிர்ஷ்டம் ஏற்படும். பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பது யோகத்தை ஏற்படுத்தும். உங்களுடைய மனைவிக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படாது. காதல் கைகூடும்.
ஜெயம்
கணவன், மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். எடுத்த காரியங்ளில் ஜெயிக்கும் யோகம் உண்டாகும். வண்டி, வாகனம் வாங்குவது, வீடு வாங்குவது, வங்கியில் கடன் வாங்குவது போன்ற நல்ல அமைப்புகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மன அழுத்தம், டென்சன், கோவம் போன்றவற்றை விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.
பதவி உயர்வு
வராமல் இருந்த பதவி உயர்வுகள், பொறுப்புகள் வந்து சேரும். பெரிய பெரிய மாற்றங்கள் வரும் அற்புதமான மாதமாக இருக்கும். நவநீதகிருஷ்ணன் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தை கொடுக்கும். சந்தோஷம் ரீதியாக 80 சதவீதமும். பொருளாதாரம் ரீதியாக 100 சதவீதமும் அற்புதமான மாற்றம் நிகழும் காலகட்டமாக இருக்கும்.
-
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications