ரீல்ஸில் மட்டுமே அரசியல் செய்யாதீங்க ப்ரோ.. தவெகவுக்கு வானதி சீனிவாசன் கிளாஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை: தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தவெகவை விமர்சனம் செய்து வருகிறார்கள். தவெக ரீல்ஸ் ஆட்சி நடத்துவதாக பல கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் என்பது சமூக வலைதள ரீல்ஸ்களில் மட்டுமே தெரிகிறது. நிர்வாக ரீதியான உண்மையான மாற்றம் இன்னும் ஏற்படவில்லை என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கோவை யில் பாஜக மூத்த நிர்வாகி வானதி சீனிவாசனின், மக்கள் சேவை மையம் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தந்தையை இழந்த தாயின் 150 பெண் குழந்தைகளுக்கு புத்தாடை, பட்டாசு, இனிப்புகள் உள்ளிட்ட தீபாவளிப் பரிசுப் பொருட்களை வானதி சீனிவாசன் வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "கோவை, சென்னை உள்ளிட்ட தொழில் நகரங்களில் கடந்த இரண்டு மாதங்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

reels-only-not-politics-vanathi-srinivasan-slams-tvk

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. தீபாவளி பண்டிகை காலத்தில் கடைவீதிகளிலேயே மின்தடை ஏற்படுவது சிறு வணிகர்களைப் பெருமளவில் முடக்கியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் விஐபிக்கள் தரிசனத்திற்கு வரும்போது கூட மின்தடை ஏற்படுகிறது. அதற்கு அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை. இதை அமைச்சரே கூறுவதும், அரசின் கட்டுப்பாடற்ற நிர்வாகத்தையே காட்டுகிறது.

கடந்த காலங்களில் திமுக ஆட்சி வீழ்ந்ததற்கே மின்வெட்டுதான் முக்கியக் காரணம் என்பதை அரசு நினைவில் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியைப் பெற்று மின் தட்டுப்பாட்டை முதலமைச்சர் உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். மாநிலத்தில் கடந்த 3 மாதங்களாக ஜிஎஸ்டி வரி வசூல் குறைந்து வருகிறது. பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வும் கள்ளச்சந்தை பதுக்கல்களும் அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்க மாநில அரசு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

சிறையிலிருந்து அடுத்தடுத்து கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் சட்டம் ஒழுங்கின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. தூய சக்தி, மாற்றம் என்றெல்லாம் முதல்வர் விஜய் பேசினால் மட்டும் போதாது. அந்த மாற்றங்கள் வெறும் செல்போன் ரீல்ஸ்களில் இல்லாமல், மக்களுக்குச் செய்யும் பணிகளிலும் நிர்வாக சீர்திருத்தங்களிலும் வெளிப்பட வேண்டும். முதல் முறை ஆட்சிப் பொறுப்புக்கு வருபவர்களுக்கு அனுபவமின்மை இருக்கலாம். ஆனால் மக்களுக்கான தீர்வைக் கொடுப்பதில்தான் வெற்றி அடங்கியுள்ளது.

நொய்யல் ஆற்றில் இன்றும் புட்டுவிக்கி உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கலப்பது தொடர்கதையாக உள்ளது. அரசு நிர்வாக மட்டத்தில் இன்னும் லஞ்சம் ஒழியவில்லை. அரசியல் களத்திற்கு நடிகர் தனுஷ் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் வரலாம். ஜனநாயகத்தில் அதற்கு உரிமையுண்டு. ஆனால், ஒரு குறிப்பிட்ட சித்தாந்தமும், மக்களுக்கான தீவிர அர்ப்பணிப்பும் இருக்கும்போதுதான் அவர்களால் நீண்ட காலம் நிலைத்து நிற்க முடியும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+