பெங்களூர் வேண்டவே வேண்டாம்.. ‘குட்பை’ சொல்லி கோவா போன தம்பதி! ரூ.75,000ல் செட்டிலாயாச்சி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பரபரப்பான பெங்களூர் வாழ்க்கை வேண்டாம். அமைதியான வாழ்க்கை வேண்டும் என்று பெங்களூரில் வசித்து வந்த தம்பதி கோவாவிற்கு இடம்பெயர்ந்துள்ளது. அங்கு வீடு பார்த்து குடியேறியுள்ள இந்த தம்பதி கோவா வாழ்க்கை 'வொர்த்' என்றும், 5 நாள் சுற்றுலாவிற்கு கோவா சென்று வர ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் செலவாகும் நநிலையி்ல பெங்களூரில் இருந்து கோவா வந்து ரூ.75 ஆயிரம் செலவில் செட்டிலாயாச்சி என்று அந்த தம்பதி வெளியிட்ட வீடியோ கவனம் பெற்றுள்ளது.

bengaluru-couple-moves-to-goa-for-a-slower-life-after-7-years

பெங்களூரில் வசித்து வந்தவர் ராதிகா. இவரது கணவர் பெயர் ஏகன்ஸ். பெங்களூரை எடுத்து கொண்டால் எப்போதும் பரபரப்பாக இருக்கும். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். மக்கள் வேகவேமாக இயங்கி கொண்டிருப்பார்கள்.

இதனை ராதிகா - ஏகன்ஸ் தம்பதி விரும்பவில்லை. பரபரப்பான பெங்களூரை நகரை விட்டு வெளியேறி அமைதியான நகரில் வாழ வேண்டும் என்று இருவரும் ஓராண்டாக பேசி வந்தனர். மேலும் பெங்களூரை விட்டு எந்த நகருக்கு செல்லலாம்? என்பது பற்றி அவர்கள் விவாதித்தனர்.

இறுதியில் அவர்கள் தேர்வு செய்ய இடம் தான் கோவா. மிகவும் சிறிய நகரம். கடற்கரை உள்பட பொழுது போக்கிற்கு சிறந்த இடம். பல்வேறு கலாசாரத்தை பின்பற்றும் மக்கள் வந்து செல்வார்கள் என்பதால் கோவாவிற்கு செல்ல அவர்கள் முடிவெடுத்தனர். அதன்படி பெங்களூருவுக்கு 'குட்பை' சொல்லி கடந்த மாதம் கோவாவிற்கு இடம்பெயர்ந்தனர்.

இந்நிலையில் தான் கோவாவிற்கு இடம்பெயர்ந்தது ஏன்? எவ்வளவு செலவு ஆனது? என்பது தொடர்பாக ராதிகா வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ரதாிகா கூறியுள்ளதாவது: ''பெங்களூரில் தங்கியிருந்த வீட்டில் இருந்து பொருட்களை வெளியே கொண்டு வர ரூ.15 ஆயிரம் செலவானது. அங்கிருந்து அனைத்து பொருட்களையும் கோவாவிற்கு கொண்டு செல்ல ரூ.24 ஆயிரம் செலவானது. பெங்களூரில் இருந்து கோவாவிற்கு நாங்கள் காரில் பயணிக்க ரூ.10 ஆயிரம் செலவானது. இது தனிச்செலவாகும்.

அதன்பிறகு கோவாவில் தங்கி 3 வாரம் வீடு தேடினோம். அப்போது தங்குவதற்காக மட்டும் ரூ.45 ஆயிரம் செலவானது. பெட்ரோலுக்கு ரூ.5 ஆயிரம், மளிகை பொருட்களுக்கு ரூ.12 ஆயிரம் செலவானது. வீடு கிடைத்தவுடன் ஏசி, வாஷிங்மெஷின் இணைப்பு கொடுப்பதற்கும், தச்சு தொழிலாளிக்கும் ரூ.9,500 செலவானது. பெங்களூரில் இருந்து கோவாவிற்கு வந்த பிறகு கூடுதலாக ரூ.75 ஆயிரம் செலவானது.

பிறஇடங்களில் உள்ளவர்கள் 5 நாள் சுற்றுலா என்ற வகையில் கோவா வந்து செல்வற்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்வார்கள். ஆனால் நாங்கள் ரூ.75 ஆயிரம் செலவு செய்து கோவாவிலேயே வாழ ரெடியாகிவிட்டோம். உண்மையில் இது நல்லாயிருக்கு. நாங்கள் செய்த செலவிற்கு இது 'வொர்த்'தாக உள்ளது என கூறியுள்ளார்.இந்த வீடியோ தற்போது அதிக கவனம் பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+