“சதியில் ஈடுபட்ட விர்ச்சுவல் விஷமிகளை கண்டறியணும்”.. பேரா. கலையரசன் சந்திப்பை அடுத்து ஸ்டாலின் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: "சதியில் ஈடுபட்ட விர்ச்சுவல் விஷமிகளைக் கண்டறிவதோடு, அத்துமீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதும் அவசியம்" என பேராசிரியர் கலையரசனை சந்தித்ததை அடுத்து தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

தமிழகப் பொருளாதார நிலவரம் குறித்து கருத்துகளை முன்வைத்த பொருளாதார வல்லுநரான சென்னை வளர்ச்சி மையம் MIDS பேராசிரியர் கலையரசனை, அவரது வீட்டில் இருந்து அதிகாலையில் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

MK Stalin Demands Action Against Virtual Miscreants and Errant Officials After Meeting Prof Kalaiyarasan

சமீபத்தில், செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பொருளாதார வல்லுநர் கலையரசன், தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு குறித்து கவலை தெரிவித்திருந்தார். குறிப்பாக, தேசிய சராசரியைவிட தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு அதிகமாக இருப்பதாகவும், இதைக் கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதிகாலை 5 மணியளவில் சென்னை அடையாறில் உள்ள கலையரசனின் வீட்டுக்கு சாதாரண உடையில் 3 போலீசார் சென்றுள்ளனர். வீட்டின் கதவைத் திறந்த கலையரசனிடம் பெயரைக் கேட்ட போலீசார், பின்னர் அவரது செல்போனை வாங்கிக் கொண்டு விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு வருமாறு அழைத்துள்ளனர். எந்த வழக்கு, என்ன புகார் என்ற விவரங்களை கலையரசனிடம் போலீசார் முதலில் தெரிவிக்கவில்லை.

பின்னர்தான், பல்லாவரம் தொகுதி தவெக எம்எல்ஏ காமாட்சியின் இன்ஸ்டாகிராம் பதிவில் தகாத வார்த்தைகளால் கருத்து பதிவிட்டதாகக் கூறி கலையரசனை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், தனக்கு இன்ஸ்டாகிராம் கணக்கே கிடையாது என்றும், சம்பந்தப்பட்ட கருத்தைத் தான் பதிவிடவில்லை என்றும் கலையரசன் மறுத்துள்ளார்.

நீண்ட நேரம் கழித்து, கலையரசனை மீண்டும் அடையாறில் உள்ள வீட்டுக்கே அழைத்துச் சென்று விட்டுள்ளனர். இதையடுத்து, தன்னை போலீசார் துன்புறுத்தியதாக தமிழக காவல்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதினார் கலையரசன். கலையரசன் மீதான இந்த அத்துமீறலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

பொருளாதார நிபுணர் கலையரசனை, தமிழக முதல்வர் விஜய் சந்தித்துப் பேசினார். இந்நிலையில், கலையரசன் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார். இதையடுத்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "கேள்விகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது நல்லாட்சியல்ல; கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிர்வாகத்தை உருவாக்குவதுதான் நல்லாட்சி!

விமர்சனங்களை உள்வாங்கித் தமது தவறுகளைத் திருத்திக்கொள்வதுதான் ஜனநாயகத்தின் மாண்பு! விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியது கருத்துகளால்; காவல்துறை நடவடிக்கைகளால் அல்ல!

Fake ID-யின் Comment-ஐக் காரணமாகச் சொல்லி, அதிகாலையில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பேராசிரியர் கலையரசன், தமக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பி வெளிவந்திருப்பதற்கு எனது வாழ்த்துகள்!

சதியில் ஈடுபட்ட விர்ச்சுவல் விஷமிகளைக் கண்டறிவதோடு, அத்துமீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதும் அவசியம் என்பதை அரசுக்கு நினைவூட்டுகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+