ட்ரோன் தொழில்நுட்பத்தில் அசத்தும் சீனா.. எல்லையில் இந்தியாவுக்கு புதிய தலைவலி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய-சீன எல்லையில் நிலைமை சரியில்லை. இப்படி இருக்கையில், ட்ரோன் தொழில்நுட்பத்தில் சீனா காட்டும் வேகம்.. இந்தியாவுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக பாதுகாப்புத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அருணாச்சலப் பிரதேச எல்லையின், பல பகுதிகளில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த சில நாட்களாக நேரடி மோதல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவை தற்போதும் தொடர்ந்து நீடித்து வருவதாகவும் இந்தோ திபெத்திய எல்லை காவல் படை தலைவர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

India China

சீன ராணுவம் மிக வேகமாக நவீனமாகி வருவதால், வெறும் பாரம்பரிய ராணுவ யுக்திகள் மட்டும் இனி போதாது என்றும், இந்தியா தனது ட்ரோன் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு திறன்களை அவசரமாக வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார்.

இந்த வலியுறுத்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. டெக்னாலஜி உலகில் சீனாவை அடித்துக் கொள்ள ஆள் இல்லை என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால், இதே டெக்னாலஜியே.. இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக மாறும் போது.. அதை எதிர்க்க நாமும் தொழில் ரீதியாக தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது. அதைத்தான் ITBP தலைவரின் வலியுறுத்தல் காட்டுவதாக பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

2022 உக்ரைன் போருக்கு பிறகு, ட்ரோன் மூலம் போர் செய்யும் முறை முற்றிலும் மாறிவிட்டது. சீனாவும் இந்த நவீன உத்திகளை தங்களுக்கு சாதகமாக மாற்றி இருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நவீன ட்ரோன்கள் தற்போது சாட்டிலைட் சிக்னல்களை மட்டும் நம்பியிருப்பதில்லை. ஏனெனில் அவற்றை எதிரிகள் ஜாம் செய்து விட முடியும். அதற்கு மாறாக AI தொழில்நுட்பம் மற்றும் மெஷின் விஷன் மூலம் தரையின் அமைப்பை கண்ணால் பார்த்து, இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் பெற்ற ட்ரோன்களை போர் முனையில் சீனா பயன்படுத்த தொடங்கி இருக்கிறது. அதேபோல குறைந்த செலவிலான ஜெட் என்ஜின்கள் பொருத்தப்பட்ட ட்ரோன்கள், மிக அதிக வேகமாகவும், அதிக உயரத்திலும் பறந்து சென்று தாக்கும் திறன் கொண்டவையாக இருக்கின்றன. இதையெல்லாம் சீனா தனது பாதுகாப்பு துறையில் சர்வ சாதாரணமாக பயன்படுத்தி வருகிறது.

சீனாவின் இந்த அச்சுறுத்தல் வெறும் ட்ரோன்களின் எண்ணிக்கையில் மட்டும் இல்லை. அதன் அசுரத்தனமான தொழிற்சாலை உற்பத்தி திறனில்தான் இருக்கிறது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதாவது, எல்லையில் போர் போன்ற சூழல் ஏற்பட்டால்.. இந்திய ராணுவத்தின் பலவீனங்களை கண்டறிந்து.. அதற்கேற்ப சில நாட்களிலேயே புதிய ட்ரோன்களை வடிவமைத்து, ஆயிரக்கணக்கில் அந்த ட்ரோன்களை போர்க்களத்தில் இறக்கும் திறனை சீனா பெற்றிருக்கிறது.

அதேபோல எல்லையில் மட்டுமின்றி, இந்திய விமானப் படைத்தளங்கள், ரேடார் நிலையங்கள் மற்றும் ராணுவ பாதைகள் மீது சீனா தொடர் ட்ரோன் தாக்குதலை நடத்தினால்.. அது போரின் போக்கை மாற்றிவிடும். ரஷ்யா போன்ற பெரிய நாடே உக்ரைனின் ட்ரோன் தாக்குதலை தடுக்க திணறி வரும் நிலையில், இந்தியாவுக்கு அது என்ன மாதிரியான பாதிப்புகளை என்பதை ஏற்படும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சீனாவின் இந்த பிரமாண்ட தொழில்நுட்ப பலத்துடன் ஒப்பிடும் போது, ட்ரோன் தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களில்.. இந்தியா இன்னும் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறது. எனவே பட்ஜெட் பற்றாக்குறைகளை கடந்து, இந்தியா தனது சொந்த தயாரிப்பு திறனையும், எதிர்ப்பு பாதுகாப்பு வளையங்களையும் போர்க்கால அடிப்படையில் பலப்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+