Rasi Palan This Week: மிதுன ராசிக்கு கஷ்டமெல்லாம் தீரும் நேரம்.. 2 விஷயத்தில் கவனம்
வார ராசி பலன்: அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 3 முதல் ஐப்பசி 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் பிள்ளைகளிடம் கோபத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் படிப்பு, தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் இருந்து வந்த இழுபறியான நிலைமைகள் அனைத்தும் மாறும் அற்புதமான காலகட்டம். வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும்.
கஷ்டங்கள் நீங்கும்
உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் அனுகூலம் காணப்படும். முதலீடுகளில் இருந்து வந்த பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். மரண பயம் அனைத்தும் நீங்கும். மனதில் இருந்து வந்த கஷ்டங்களை நீக்குவதற்கு மற்றவர்கள் உதவி செய்யும் பாக்கியம் ஏற்படும். ஆரோக்கியத்தில் பயந்து கொண்டிருந்த விஷயம் தொடர்பான பயம் நீங்கும்.
அனுகூலம்
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயத்தில் அனுகூலம் காணப்படும். பற்களில் வரும் சிறிய பிரச்சனைகள், மயக்கம், காது, மூக்கு, தொண்டை பாதிப்பு, தலைச் சுற்றல் போன்றவற்றில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். எடுத்த காரியத்தில் ஜெயம் ஏற்படும். தொழில் ரீதியாக இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும்.
யோகம்
தொட்டது துலங்கும் யோகம் உண்டாகும். இந்த காலகட்டத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. பண வரவு நன்றாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் வளர்ச்சி ஏற்படும். லாபங்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
வழிபாடு
படிக்கும் மாணவர்களுக்கு ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். பெற்றோர், பெரியோருடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. பூமி சம்பந்தப்பட்ட விஷயத்தில் நல்லது நடக்கும். விஷ்ணு வழிபாடு, விஷ்ணு காயத்ரி, நரசிம்மர் கவசம் கேட்பது உங்களுக்கு மேன்மையை ஏற்படுத்தும்.
-
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications