Rasi Palan This Week: கனவுல கூட நடந்திருக்காது - மிதுன ராசிக்கு நடக்கும் மேஜிக்
வார ராசி பலன்: அக்டோபர் 27 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 10 முதல் ஐப்பசி 26 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரிய பகவான் துலாம் ராசியில் நீச்சமாக இருக்கக்கூடிய மாதமே ஐப்பசி. அக்டோபர் 18 ஆம் தேதி முதல் நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான ஐப்பசி மாதத்தில் மழை, வெள்ளம், புயல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், பெரும் புகழ்மிக்கவர்கள், தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள், பிரதமர்கள், ராணுவத் தளபதிகள், முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
அந்த வகையில், அக்டோபர் 27 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரையிலான ஐப்பசி 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மிதுன ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
மிதுனம் ராசி மற்றும் மிதுன லக்னத்தினருக்கு இந்த வாரம் சற்று நிம்மதி கிடைக்கும். உத்யோகம் மற்றும் தொழில் இரண்டிலும் உயர்வு உண்டாகும். அதிலும் தொழிலில் எதிர்பாராதளவுக்கு அதி அற்புதமான ஏற்றம் வரும். லாபம் இரண்டு மடங்காக அதிகரிக்கும். நீண்ட காலமாக திட்டமிட்ட சிந்தனைகளை செயல்படுத்துவீர்கள். சிலர் புதிதாக தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது.
குடும்பம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். வாழ்க்கை துணையுடன் இருந்த மோதல் போக்கு குறைந்து காதல் அதிகமாகும். உடல் ஆரோக்கியத்தில் நீண்ட காலமாக உள்ள பிரச்சனைகளுக்கு இப்போது நல்ல மருந்துகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். மன வருத்தங்கள், மனச்சோர்வு நீங்கும். சுப காரிய தடைகள் விலகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமாகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
கவனம்
குழந்தைகளிடம் கோபத்தை தவிர்த்து அதிக அன்பு செலுத்துங்கள். அவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். குரு அதிசார நிலையில் உச்சமாக இருப்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் வேண்டும். இதயம், ரத்த அழுத்தம், சர்க்கரை, படபடப்பு, வயிறு, ஜீரணம், மலக்குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் அதிக எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். கர்ப்பிணி பெண்களும் தங்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனமாக இருக்க வேண்டும்.
பரிகாரம்
வார்த்தைகளில் அதிக கவனமாக இருக்க வேண்டும். பதற்றத்தை குறைத்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத பிரச்சனைகளில் மூக்கை நுழைக்க கூடாது. வம்பு, வழக்குகளில் அதிக எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். அபிராமி அந்தாதி பாடல்களை அடிக்கடி உச்சரிங்கள். முருகன் மற்றும் துர்க்கை வழிபாடு மனக்குறைகளை நீக்கி மகிழ்ச்சியை கொடுக்க உதவும்.












Click it and Unblock the Notifications