மிதுன ராசியை வச்சு செய்யப் போகும் சனி.. தொட்ட இடமெல்லாம் ஷாக் அடிக்கும் காலம்.. ரொம்ப கவனம்
சனி வக்ர பெயர்ச்சி: ஜூலை 2 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சனி வக்கிரப் பெயர்ச்சி அடைவதால் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சனி வக்கிரம்
ஜூலை 2 முதல் நவம்பர் 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சனி வக்கிரம் அடைகிறார். வக்கிரம் என்பது தன்னுடைய இழத்தல் என்பது பொருளாகும். இந்த காலகட்டத்தில் சனி செயலிழந்து போகும். வருடகிரகங்களான குருவும், சனியும் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்துக்குப் போகும்போது வக்கிரமாகும். 9 ஆம் இடத்துக்குப் போகும்போது வக்கிர நிவர்த்தியாவதும் வழக்கம். சனி ஒரு ராசியில் இரண்டரை வருடம் இருக்கும் காலகட்டம் என்று பார்க்கும்போது இரண்டு முதல் மூன்று வரை வக்கிரமாகும்.

காயத்ரி மந்திரம்
சனி வக்கிரமாவதால் அதனுடைய செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்படும். சனி ஆயுள் காரகன், கர்மகாரகன் என்று அழைக்கப்படுகிறார். வக்கிர கதியில் சனி இருக்கும்போது சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். சனியிடமிருந்து தப்பிக்க சனி காயத்ரி மந்திரத்தை கூறுவது, கேட்பது அற்புதமான பலன்களைத் தரும். ஒருநாளைக்கு இந்த மந்திரத்தை 8 முறை ஜெபிப்பது பல்வேறு பாதிப்புகளில் இருந்து உங்களைக் காக்கும்.
சனியின் தாக்கம்
துப்புரவுப் பணியாளர்கள், உடல் சார்ந்த வேலைகளை செய்பவர்களுக்கு சனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். சனியின் மூலமாக வேலையில் ஏற்றம், வேலை மாற்றம், அரசியலில் செல்வாக்கு பெறுவது சனி பகவானால் தான். அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதில் சனியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. சனி வக்கிரகதி அடைவதாலும், குருவின் பார்வை இருப்பதாலும் அரசாங்கம் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் விமானங்கள், ரயில்கள் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
இந்த சனி வக்கிரமானது பூரட்டாதி மூன்றாம் பாதத்தில் வக்கிரகதி ஆரம்பிக்கிறது. கார்த்திகை மாதம் 1 ஆம் தேதி வக்கிர நிவர்த்தியடைகிறார். இந்த சனி வக்கிரப் பெயர்ச்சியாகும் போது மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
மிதுன ராசி பலன்
மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம் ஆகிய 3 நட்சத்திரம் 9 பாதங்களைக் கொண்டது மிதுன ராசி. ராசியின் அதிபதி புதன். உங்கள் ராசிக்கு 9 ஆம் இடத்தில் சனி இருக்கிறார். அங்கு வக்கிரமடைவதால் தந்தையின் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்படும். முதல் ஒன்றரை மாதம் மன அழுத்தம் அதிகமாக இருக்கும். எந்தவொரு விஷயத்தை எடுத்தாலும் அதில் பிரச்சனைகள் ஏற்படும். தூக்கம் கலையக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். அலைச்சல்கள் அதிகமாக இருக்கும்.
மன அழுத்தம்
9 ஆம் இடத்தில் இருக்கும் சனி தந்தைக்கும், உங்களுக்கும் பிரிவினையை ஏற்படுத்தும். மனஅழுத்தம், உடல் உழைப்பு, உடல் பாதிப்புகள் ஏற்படும். வரும் நவம்பர் 17 ஆம் தேதி வரையிலான நாலரை மாத காலத்தில் முதல் ஒன்றரை மாதத்துக்கு மனஅழுத்தம் ஏற்படும். மாணவ, மாணவிகளுக்கு மறதி அதிகமாக ஏற்படும். வேலைப் பளு அதிகரிக்கும் எடுத்த காரியங்களில் சிறு சிறு தடங்கல்கள் ஏற்படும்.
தேவையில்லாத செலவு
அடுத்த ஒன்றரை மாதத்துக்கு தேவையில்லாத செலவுகள், வீண் செலவுகள் வரக்கூடிய வாய்ப்பு உண்டாகும். வெளிநாடு, வெளியூர் செல்ல வேண்டு என்று நினைப்போருக்கு பின்னடைவு ஏற்படும். விசா கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அக்டோபர், நவம்பர் மாதத்தில் உங்கள் ராசிக்கு 11 ஆம் இடத்தில் சனி வருவதால் தொழிலில் லாபங்கள் குறைவதற்கான வாய்ப்புள்ளது.
பின்னடைவு
தந்தையின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்படும். குடும்பத்தில் சொத்துப் பிரச்சனைகள் இருந்தால் அது உங்களுக்கு சாதகமாக அமையாது. உங்கள் உடல்நிலையிலும் பின்னடைவு ஏற்படும். மன அழுத்தம், உடல் உழைப்பு அதிகமாக இருக்கும் காலகட்டமாக இருக்கும். படிக்கக்கூடிய மாணவர்களுக்கு ஒருமுறைக்கு நூறு முறை படிக்க வேண்டியதாயிருக்கும்.
மருத்துவ செலவு
சிறு சிறு தவறுகளைச் செய்வீர்கள். தேவையற்ற விரையங்கள் ஏற்படும். மருத்துவ செலவுகள் செய்ய வேண்டியதிருக்கும். மூத்த சகோதர, சகோதரிகளுடன், குடும்பத்தில் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. உடல்நலனில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். புதிய முயற்சிகளை செய்யும்போது சிந்தித்து செயல்படுவது நல்லது..
தொழில், வழிபாடு
வெளிநாடு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பின்னடைவான காலகட்டமாக இருக்கும். புதிய தொழில் தொடங்குபவர்கள் அதிக அளவிலான முதலீடுகளைச் செய்யாமல் இருப்பது நல்லது. ஈரோடு அருகே இருக்கும் குருமந்தூரில் உள்ள சனீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும். அனைத்துவிதமான மாற்றங்களும், ஏற்றங்களும் கிடைக்கும்.
அருகில் இருக்கும் கோயில்களுக்கு தீப எண்ணெய் வாங்கிக் கொடுப்பது நல்லது. துப்புரவுப் பணியாளர்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு இரும்பு தொடர்பான, தோல் பொருள்கள் தொடர்பான பொருள்களை வாங்கிக் கொடுப்பது நன்மையை ஏற்படுத்தும்.
-
Mithunam: சிக்ஸர் அடிக்கும் மிதுன ராசி.. அள்ளிக் கொடுக்கும் கிரகங்கள்.. யோக காலம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications