Mithunam Rasi Palan: மிதுன ராசிக்கு சுக்கிரனின் அருளால் புதிய கார், வீடு வாங்கும் யோகம்
Sukkira Peyarchi: சுக்கிர பெயர்ச்சி சுக்கிரன் பகவான் 21.8.2025 தேதி மிதுனம் ராசியில் இருந்து கடகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சுக்கிரன் 14.9.2025 தேதி வரை அங்கு தான் பயணிக்க போகிறார். சுமார் 25 நாட்கள் அவர் கடக ராசியில் இருந்து பலன் கொடுப்பார். பொதுவாக சுக போக வாழ்க்கைக்கு சுக்கிரன் அதிபதியாவார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தப் பதிவில் சுக்கிரன் மிதுன ராசிக்கு கொடுக்க போகும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் ஆகியவற்றை பார்க்கலாம்.
மிதுனம்
சுக்கிரன் உங்களுக்கு 5க்கு உரியவர். பூர்வ புண்ணிய ஸ்தானம், பஞ்சம ஸ்தானம், காதல் ஸ்தானத்தின் அதிபதி. அதேநேரம் 12க்கு உரியவர். உங்கள் ராசிக்கு 2 ஆம் இடமான தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்தில் சுக்கிரன் அமைகிறார். சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் உங்கள் குடும்பத்தில் நடக்கும். திருமண விஷயங்கள் கைகூடும். உங்களுக்கோ, குடும்ப உறுப்பினர்களுக்கோ நல்ல விஷயங்கள் நடக்கும்.

முன்னேற்றம்
சுக்கிரன் தன ஸ்தானத்தில் இருப்பதால் பொருளாதாரத்தில் உயர்வு பெறுவீர்கள். ராசிநாதனாகிய புதனுடன் சுக்கிரன் இணைவதால் பேச்சால், அறிவால், புத்திசாலித்தனத்தால் முன்னேறும், லாபம் பெறும் காலகட்டமாக இருக்கும். பேச்சை வைத்து தொழில் செய்பவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். எந்த இடத்தில் எதைப் பேச வேண்டும் என்று அறிவுப்பூர்வமாக பேசும் காலகட்டமாக இருக்கும்.
புதிய வீடு, வாகனம்
புதன் பகவான் சுக்கிரனுடன் சேர்ந்திருப்பதால் இருசக்கர வகானம், கார் போன்ற புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய வீடுகளை வாங்கும், கட்டும் யோகம் உள்ளது. வீட்டைப் பற்றிய சிந்தனைகள் எழும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். சுக்கிரன் 5க்கு உரியவர். பூர்வீகம் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று வருவது, பிரச்சனைகளை சரி செய்வது, கோவில் விழாக்களில் கலந்துகொள்வது போன்றவை ஏற்படும்.
பதவி உயர்வு
அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் யோகம் உள்ளது. அதிகாரம், நிர்வாகம் போன்றவை சிறப்பாக இருக்கும். தகவல் தொடர்பு, ஐடி செக்டாரில் இருப்பவர்களுக்கு பொற்காலமாக இருக்கும். நல்ல நல்ல உயர்வுகள் கிடைக்கும். உரிய அங்கீகாரம், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
தொழில்
ஆகஸ்ட் 21 முதல் 23 ஆம் தேதி வரை குருவின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிப்பதால் தொழில், புதிய நண்பர்கள், தொழிலதிபர்களின் சந்திப்பு உண்டாகும் காலகட்டமாக இருக்கும். நிறைய அறிவுரைகள் உங்களுக்கு கிடைக்கும். ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை பூச நட்சத்திரத்தில் பயணிப்பதால் தொழிலில் மாற்றம், புதிய தொழிலை தொடங்குவது, கிளை தொடங்குவது போன்றவை நிகழும்.
கலைத் துறை
கலைத் துறையில் நுழையும் வாய்ப்பு உண்டாகும். செப்டம்பர் 4 முதல் 14 ஆம் தேதி வரை சுக்கிரன் ஆயில்யம் நட்சத்திரத்தில் பயணிப்பதால் உங்களைப் பற்றிய, உயர்வைப் பற்றிய, சுகத்தைப் பற்றிய சிந்தனைகள் உயரும். வீடு கட்டி வாடகைக்கு விடுவது, வெளிநாடு செல்வது, வெளிநாட்டு தொடர்புகளை கொடுப்பது போன்ற மாற்றங்கள் ஏற்படும். சட்டம், நிதித்துறை, ஆசிரியர்கள், அக்கவுண்டிங் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு நல்ல காலகட்டம்.
பதவி உயர்வு
பொருளாதாரம் சார்ந்த, பங்குச் சந்தை பற்றிய சிந்தனைகள் ஏற்படும். இந்த காலகட்டத்தில் நல்ல நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும் காலகட்டமாக இருக்கும். திடீர் பதவி உயர்வு, இடமாற்றம், குழந்தை பாக்கியம், திருமணம், புதிய வாகனம், வீடு என இன்ப அதிர்ச்சி கொடுக்கக்கூடிய விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு நடக்கும்.
ஆவணி மாதம் 31 ஆம் தேதி செப்டம்பர் 16 ஆம் தேதியன்று சுக்கிர பகவான் ஜெயந்தி தினத்தில் நவக்கிரகத்தில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு வெண்பட்டு சாற்றி வழிபடுவது அற்புதமான மாற்றத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications