ஸ்ரீரங்கத்தில் பொங்கல் பண்டிகை: தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பாரிவேட்டை கண்டருளிய நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பாரிவேட்டை நடத்தியபடி ரங்கா ரங்கா கோபுரம் அருகிலுள்ள திருவந்திக்காப்பு மண்டபம் வரை உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பாரிவேட்டை நடத்தியபடி ரங்கா ரங்கா கோபுரம் அருகிலுள்ள திருவந்திக்காப்பு மண்டபம் வரை உலா வந்து ரெங்க விலாச மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தருளினார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிவ் நம்பெருமாள் உபயநாச்சியார்கள் உடன் சங்கராந்தி மண்டபம் சென்று வந்தார். 2ஆம் நாளான இன்று மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட அவர் கணுமண்டபம் வந்தார்.

108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று பெருமாள் பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பொங்கல் பண்டிகை சங்கராந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. உற்சவர் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரண்டாம் நாளான இன்று கணு புறப்பாடு நடைபெற்றது.

அங்கு அவருக்கு சிறப்பு திருவாராதனைகள் நடைபெற்றன. பின்னர் இன்று மாலை நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பாரிவேட்டை நடத்தியபடி ரெங்கா ரெங்கா கோபுரம் அருகிலுள்ள திருவந்திக்காப்பு மண்டபம் வரை உலா வந்து ரெங்க விலாச மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தருளினார்.

பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைந்தார் நம்பெருமாள். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் அசோக்குமார், அறங்காவலர்கள் ரங்காச்சாரி, டாக்டர் சீனிவாசன், கவிதா மற்றும் கோவில் அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், கைங்கர்யபரர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications