நவபஞ்சம யோகத்தால் செல்வம், லாபத்தை குவிக்கும் ராசியினர்.. அதிர்ஷ்ட ராசியினர் யார்?
Nava panjama yogam palangal: சனி மற்றும் செவ்வாய் பகவான் இணைந்து உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செல்வம், லாபம், தொழிலில் அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு ராசியும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தையும், இடத்தையும் மாற்றுகின்றன. கிரகங்களின் இயக்க மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியால் உருவாகும் தாக்கம் அனைத்து ராசிகளிலும் ஏற்படும். இந்த கிரக மாற்றங்கள் சில ராசிகளுக்கு சுப பலன்களையும் சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும்.

கிரகங்களின் ராசி மாற்றம் இக்கத்தால் ஒவ்வொரு ராசிகளின் பலன்களும் மாறும். அந்த வகையில், பிப்ரவரி 9 ஆம் தேதி சனியும், செவ்வாயும் சேர்ந்து நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர். இந்த நவ பஞ்சம ராஜயோகத்தால் செவ்வாயும், சனியும் 9 மற்றும் 5 ஆவது வீட்டில் இருப்பார்கள். இதனால் சில ராசிகளுக்கு செல்வம், லாபம், பணம் கொட்டும். அதிர்ஷ்டத்தை அள்ளும் ராசியினர் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கடகம் - கடக ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகத்தால் அதிர்ஷ்ட தேவதையின் பார்வை உங்கள் பக்கம் தான் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி சார்ந்த நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. சமுதயாத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள்.
மீனம் - நவபஞ்சம ராஜயோகம் மீன ராசிக்காரர்களுக்கு யோகமான பலன்களை அள்ளித் தரும். பணம் சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வசதி வாய்ப்பு பெருகும். வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள், சவால்கள் அனைத்தில் இருந்தும் விலகி நிம்மதி அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கும்பம் - கும்ப ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம யோகத்தால் அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல tமுன்னேற்றமான காலமாக இருக்கும். புதிய உறவுகள், நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொடுக்கும் காலமாக இருக்கும். கடின உழைப்புக்கான பலனை அடைவீர்கள். நீண்டநாட்களாக இருந்து வந்த அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவி இருவருக்கும் இடையே நல்ல அந்நியோன்யம் அதிகரிக்கும். முன்னேற்றமான காலமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications