புத்தாண்டு ராசி பலன் 2023: சனி, குருவினால் இந்த ராசிக்காரரின் வாழ்க்கையில் தலைகீழ் மாற்றம் வருமாம்!
சென்னை: ஆங்கில புத்தாண்டு பிறக்கப்போகிறது. இந்த புத்தாண்டில் நவகிரகங்களும் இடம் மாறப்போகின்றன. 2023ஆம் ஆண்டு சனி பகவான் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பகவான் மீன ராசியில் சில மாதங்களும், மேஷ ராசியில் 8 மாதங்களும் பயணம் செய்வார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் பார்வையால் மகர ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது.
அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ராகு கேது பெயர்ச்சி நடக்க உள்ளது. ராகு மீன ராசிக்கும் கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ராகுவும் கேதுவும் சிலரது வாழ்க்கையில் திடீர் யோகத்தை கொண்டு வரும். ஏழரை சனி காலமும் சிலருக்கு ஏற்படப்போகிறது. அதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுமோ என்று பலரும் அச்சமடைந்து கொண்டிருக்கின்றனர்.
மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரம் கன்னி லக்னத்தில் 2023ஆம் புத்தாண்டு பிறக்கிறது. ஆங்கில புத்தாண்டு 12 ராசிக்காரர்களுக்கு பலவித மாற்றங்களைத் தரப்போகிறது. நவ கிரகங்களின் பயணம் சில ராசிக்காரர்களுக்கு சின்னச் சின்ன சங்கடங்களையும் தரலாம். அதை தவிர்க்க ஆலய தரிசனம் செய்வது பாதிப்புகளை குறைக்கும்.

மகரம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே..உங்கள் ராசியில் இருந்த சனிபகவான் 2023ஆம் ஆண்டு இடம்மாறி இரண்டாம் வீட்டிற்கு செல்கிறார். தலைமேல் இருந்த சனிபகவான் இடப்பெயர்ச்சி அடைவதால் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். ஏழரை சனியில் இன்னும் இரண்டரை ஆண்டு காலத்தை நீங்கள் கடத்த வேண்டும். உங்கள் வாழ்க்கையில் கடந்த 5 ஆண்டு காலம் எத்தனையோ சோதனைகளை கடந்து வந்திருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் இனி எல்லாம் ஜெயம்தான். அந்த அளவிற்கு சனிபகவான் உங்களுக்கு அள்ளித்தரப்போகிறார். மன உளைச்சல் நீங்கி நிம்மதி உண்டாகப்போகிறது.

ராஜயோகம்
குருபகவானால் உங்களுக்கு ராஜ யோகம் தேடி வரப்போகிறது. கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு திருமண யோகம் கைகூடி வரப்போகிறது. சுப காரியம் கை கூடி வரப்போகிறது. காரணம் முதல் 4 மாதங்கள் குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டை பார்வையிடுவது நன்மையைத் தரும்.

குரு தரும் கோடீஸ்வர யோகம்
மே மாதத்திற்குப் பிறகு குரு பகவான் மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானமான 4ஆம் வீட்டிற்கு இடம் மாறப்போகிறார். உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படப்போகிறது. மகாலட்சுமியின் அனுக்கிரகம் உங்களுக்கு தேடி வரப்போகிறது. திருமணமானவர்களுக்கு இந்த ஆண்டு குழந்தை பாக்கியம். கல்லூரி மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் நீங்கப்போகிறது. தடைகள் நீங்கி இனி உங்கள் கல்வியில் வெற்றிகள் கிடைக்கப்போகிறது. அரியர் வைத்திருந்தவர்கள் அனைவரும் இந்த ஆண்டு கிளியர் செய்து விட்டு வேலைக்கு தயாராகி விடுவீர்கள்.

பணம் விசயத்தில் கவனம்
சொத்து சேர்க்கை ஏற்படப்போகிறது. பலரும் வைகாசி மாதத்தில் இருந்து வீடு கட்ட முயற்சி செய்யப்போகிறீர்கள். அக்டோபர் மாதத்திற்கு பிறகு நிகழப்போகும் ராகு கேது பெயர்ச்சியும் உங்களுக்கு நிறைய நன்மைகளையும் லாபத்தையும் தரப்போகிறது. நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அதே நேரத்தில் பண விசயங்களில் கவனமாக இருப்பது நல்லது. அவசரப்பட்டு பங்குச்சந்தை முதலீடுகளில் செய்து விட வேண்டாம். இந்த ஒரு விசயத்தை தவிர உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications