புத்தாண்டு ராசி பலன் 2026: சொல்லி அடிக்கும் மகர ராசி.. திட்டங்களை மட்டும் வெளியில் சொல்லாதீங்க
புத்தாண்டு ராசி பலன் 2026: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறந்துள்ளது. இந்தப் புத்தாண்டில் மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து சூரியனின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறந்துள்ளது. சூரியனின் நட்சத்திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. பாரபட்சமில்லாமல் ஒளியைத் தரக்கூடியவர் சூரிய பகவான் என்பதால் எல்லாருக்குமே நல்ல ஆண்டாக இருக்கும். கஷ்டங்கள் தீரும். சொந்த தொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாடெங்கும் பாதுகாப்பு உணர்வு அதிகமாகிக் கொண்டே போகும். மக்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மருத்துவத் துறை அற்புதமாக வளரும்.

திருக்கணிதத்தின்படி சனி ஏற்கனவே மீனம் வீட்டில் இருக்கிறார். இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி, டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி ஆகிய 2 பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குரு இந்த வருடம் உச்சமடைந்து கடகத்துக்கு வருகிறார். மீண்டும் அதே குரு அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கு அதிசாரத்தில் போகிறார். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் மகரம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
மகரம் (Magaram new year rasi palan):
மகர ராசிக்கு அருமையான புத்தாண்டாக இருக்கும். ராசிக்கு 3 ஆம் இடத்தில் ராசியாதிபதி இருந்து ராசிக்கு 5, 9, 12 ஆம் வீட்டைப் பார்க்கிறார். மே மாதத்துக்குப் பிறகு குரு உங்கள் ராசியைப் பார்க்கிறார். திருமணமாகாதவர்களுக்கு கண்டிப்பாக திருமண யோகம் உண்டு. திருமணமாகி விவாகரத்தானவர்களுக்கு மறுதிருமணம் செய்து கொள்ளும் வாய்ப்புள்ளது.
தொழில்
புதிய துறைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு, இருப்பவர்களுக்கு பிஆர் கிடைக்கும். வேலை செய்து கொண்டே தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தொழில் அமையும். பிரிந்திருந்த கணவன், மனைவி மீண்டும் ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
சுபச்செலவுகள்
வெளியில் கொடுத்த பணம் திரும்பி வரும். தினக்கூலி செய்பவர்களுக்கு நல்ல அமைப்பு வரும். நிறைய சம்பாதிப்பதற்கான யோகம் உண்டாகும். எதிர்மறையான விஷயங்கள் குறைந்தளவே உள்ளது. வீண் விரயம் ஏற்படும் என்பதால் செய்யும் செலவுகளை சுபச் செலவுகளாக செய்து கொள்வது நல்லது. வாக்குறுதி கொடுப்பதில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
திட்டங்களை சொல்லக் கூடாது
உங்களுடைய திட்டங்களை வெளியில் சொல்லக் கூடாது. சொன்னீர்களென்றால் நடக்காது. கடன் வாங்க வேண்டிய சூழல், அதற்கான நெருக்கடி ஏற்படும். கடன் வாங்கினால் திருப்பி அடைப்பதில் கஷ்டம் ஏற்படும். இந்த ஆண்டில் சிறிய சிறிய விஷயங்களில் தவறு செய்யக்கூடிய வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. தேவையில்லாதவர்கள் எல்லாம் ஆலோசனை கூறும் சூழல் ஏற்படும்.
வம்பு வழக்கு
வளர்ப்புப் பிராணிகள் மூலம் தொந்தரவு ஏற்படும். கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு சிறு சிறு நஷ்டங்கள் ஏற்படும். பொருள் திருடு போவதற்கான வாய்ப்புள்ளது. கடன் வாங்காமலும், கொடுக்காமலும் இருப்பது நல்லது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன வம்பு வழக்குகள் சண்டை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்பதால் கவனம் தேவை.
-
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி: மகரம், கும்பம், மீனம் ராசிக்கு அடிக்குமா ஜாக்பாட்?.. குருவின் அருள் கிடைக்குமா? -
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications