2020 புத்தாண்டு : தன்வந்திரி பீடத்தில் ஆரோக்கியத்துடன் ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்
தன்வந்திரி பீடத்தில் புத்தாண்டில் ஆரோக்யத்துடன் அஷ்ட ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள் நடைபெற உள்ளது.
சென்னை: உலக மக்களுக்கு ஆரோக்கியத்துடன் ஐஸ்வர்யம் கிடைக்க வேண்டும் என்பதற்காக வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி வருகிற ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு 01.01.2020 புதன்கிழமை, காலை 10.00 மணியளவில் ஐந்து ஹோமங்கள் நடைபெறவுள்ளன.
ஒரு மனிதன் தன் வாழ்வில் நிறைந்த ஆசியோடு வாழ்வதற்கு இறை பக்தி தேவை. இதற்கு உதவுபவையே ஹோமங்கள் எனப்படும் சாந்திகள். இறைவனை பக்தியோடு வணங்கிய பின் நாம் எதைக் கேட்டாலும் அவை நியாயமான கோரிக்கைகளாக இருந்தால் அவற்றை நமக்குத் தந்தருளத் தயங்க மாட்டார். மேலும் தேக ஆரோக்கியம், செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல், வியாபார அபிவிருத்தி என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவைப்படுவதைப் பெறுவதற்கு ஹோமங்கள் பேருதவி புரிகின்றன.

1. கல்வியில் சிறந்து விளங்க ஸ்ரீ சரஸ்வதி ஹோமம்.
2. பில்லி சூனியம், எதிரிகள் விலக மஹா சுதர்ஸன ஹோமம்.
3. ஆயுள் பயம் நீங்க ஆயுஷ்ய ஹோமம்.
4. நீண்ட ஆயுள் பெற மஹா தன்வந்திரி ஹோமம்.
5. வாழவில் வளம் பெற குபேர லட்சுமி ஹோமம்.

ஆகிய அஷ்ட ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்களாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு காலை கோபூஜையும், கணபதி ஹோமமும், வேத பராயணமும், கலச பூஜையும், சிறப்பு அர்ச்சனையும், ப்ரார்த்தனையும் நடைபெறவுள்ளது. இதில் ஏராளமான மூலிகைகள், பழங்கள், புஷ்பங்கள், பட்சனங்கள், பட்டு புடவைகள், நெய், தேன், தாமரை விதை, தாமரை புஷ்பங்கள் சேர்க்கப்பட உள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட வேத விற்பனர்கள் கலந்து கொண்டு நடைபெற இந்த ஹோமத்தில் பக்தர்களும், பல்வேறு தரப்பு மாணவ மாணவிகளும் பங்கேற்க உள்ளனர். மேலும் இந்த யாகங்கத்தில் மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெறவும், ஞாபக சக்தி வளரவும் மற்றும் பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லை, நோய்கள், நீங்கி ஆயுள் ஆரோக்யத்துடன் குபேர சம்பத்து பெற்று வாழவும், இயற்கை வளம், மண் வளம், மழை வளம் பெற்று வியாபாரம், தொழில், விவசாயம், கலைத்துறைகள் முன்னேற்றம் காணவும், கூட்டுப்பிரார்த்தனை நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து ஹயக்ரீவர், சரஸ்வதி, தன்வந்திரி, லக்ஷ்மி குபேரர், மரகதேஸ்வரருக்கு நவகலச அபிஷேகமும், 27 நக்ஷத்திரக்காரர்களின் நலனுக்காக சிறப்பு பிரார்த்தனைகளும் புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளது. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். தொடர்புக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications