2025 புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மூன்று ராசிகள்.. யோகம் பெறும் ராசிகள் எவை?
சென்னை: புதிய நம்பிக்கைகளுடன் 2025 புத்தாண்டு பிறக்கவுள்ளது. 2025 ஆம் ஆண்டு கிரகங்களின் பயணத்தில் ஏராளமான மாற்றங்கள் இருக்கப் போகிறது. அதனால் எந்த ராசிக்கு எப்படி இருக்கும், ஆண்டை எப்படி திட்டமிடுவது என்ற யோசனைகள் இருக்கும். 2025 ஆம் ஆண்டில் யோகங்கள் தரும் ராசிகள் எவை, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை என்று விரிவான தகவல்கள் இதோ... (2025 Puthandu Rasi Palan)
2025 ஆம் ஆண்டு உலகளவில் ஒப்பிடும்போது இந்தியாவுக்கு சற்று நன்றாக இருக்கும். செவ்வாயின் அம்சத்தை ஒட்டி வரும் வருடம் என்பதால் சிறப்பாக இருக்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும். பெண்கள் தங்கநகை வாங்கும் வாய்ப்பு நன்குள்ளது. இளைஞர்களுக்கு வாய்ப்புகள் நன்றாக இருப்பினும் முதியவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

சனி பகவான் நீர் ராசிகளில் சஞ்சரிக்கும்போது எல்லாம் பெரியளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன. கடக ராசியில் சஞ்சரித்தபோது சுனாமி, விருச்சிக ராசியில் சஞ்சரித்தபோது சென்னை பெருவெள்ளம் ஏற்பட்டது. இந்தமுறை சனி பகவான் மீனம் ராசியில் சஞ்சரிக்க உள்ளார். அதனால் உலகளவில் இயற்கை சீற்றங்கள் அதிகமாக இருக்கும். தண்ணீர் மற்றும் நிலநடுக்கத்தால் சீற்றங்கள் அதிகமாக வர வாய்ப்புள்ளது.
பலருக்கு வேலை வாய்ப்பு பிரச்னை பெரியளவு இருக்கும். உலக நாடுகளிடையே மோதல் அதிகரிக்கும். மருத்துவத்துறையில் புரட்சிகள் ஏற்படும். விவசாயத்திலும் பெரிய புரட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. இளம் வயதில் பல பில்லியனர்களை உருவாக்கி, மூத்த தொழிலதிபர்கள் சரிவை சந்திக்கும் வித்தியாசமான நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது. அதாவது அம்பானிகளை இளைய ரத்தம் ஜஸ்ட் லைக் தட் என ஓவர்டேக் செய்துவிடுவார்கள்.
2025 ஆம் ஆண்டில் மூன்று பெரிய கிரகங்களில் மாற்றம் இருக்கிறது. சனி பகவான் மார்ச் 29 ஆம் தேதி கும்பத்தை விட்டு மீனத்துக்கு போகிறார். மே 14 ஆம் தேதி குரு பகவான் ரிஷபத்தை விட்டு மிதுனத்துக்கு மாறுகிறார். மே 18 ஆம் தேதி ராகு - கேது இடமாற்றமும் நிகழ்கிறது. இது மிகவும் அரிதான காலகட்டம். இதனால் அனைத்து ராசிகளுக்குமே ஏற்ற இறக்கங்கள் மாறி மாறி வரும்.
12 ராசிகளில் ரிஷபம் (Puthandu Rasi Palan for rishabam) ராசிக்கு இதுவரை பட்ட கஷ்டங்கள் பறக்கும் வகையில் நல்ல பலன்கள் கிடைக்கும். நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு 2025 இல் திருமணம் நடைபெறும். அதேபோல வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். குருப்பெயர்ச்சியும் ரிஷபத்துக்கு நன்றாக உள்ளது.
கடகம் ராசிக்கும் (new year for Kadagam) 2025 ஆம் ஆண்டு நன்றாக இருக்கும். ஒன்பதில் சனி செல்வதால் எதிலும் துணிந்து சென்று வெற்றி பெறுவார்கள். துலாம் ராசிக்கும் மிகச்சிறப்பாக இருக்கும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் வாழ்க்கை நிறைவடைவதற்கு அஸ்திவாரமாக இந்த 2025 இருக்கும். சனி பகவான் ஆறாம் இடத்துக்கு வருகிறார். குரு பகவான் பாக்கிய ஸ்தானத்துக்கு செல்கிறார். அதனால் இந்தாண்டு எல்லா வகையிலும் நன்மைகள் வந்து சேரும்.
மகரம் ராசிக்கும் (new year for magaram) இந்தாண்டு நன்றாக உள்ளது. சனிப்பெயர்ச்சியுடன் ஏழரை சனி விலகப் போகிறது. இடமாற்றம் உள்ளிட்ட எதிர்பார்த்த மாற்றங்கள் உறுதியாக நடைபெறும். கும்பம் ராசிக்கு பஞ்சமத்துக்கு குரு பகவான் வருவதால் நல்ல யோகங்களை தருவார். சிம்மம் ராசிக்கு அஷ்டம சனி வந்தாலும், குரு பகவான் லாபத்துக்கு வருவதால் நன்மைகளும் கிடைக்கும். தனுசு ராசிக்கும் நேரம் நன்றாக இருக்கிறது. ராகு ஆறாம் இடத்துக்கு வருவதால் கன்னி ராசிக்கும் நன்றாக இருக்கும்.
ஏழரை சனி வரவுள்ள மேஷம், மீனம் ராசிகள் சற்று கவனமாக இருக்க வேண்டும். மற்ற ராசிகளுக்கு சற்று சுமாராக இருக்கும். இது பொது பலன்தான். இதைப் பார்த்து யாரும் கவலைப்பட வேண்டும். உங்கள் ஜாதகத்தில் உள்ள தசா புத்தி அடிப்படையில் பலன்கள் மாறலாம். எனவே உங்கள் ஜாதகத்தைப் பார்த்து முக்கிய முடிவுகள் எடுத்துக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications