ஆடி கடைசி செவ்வாய் - இன்று என்ன விஷேசம் தெரியுமா ?
இன்று ஆடி கடைசி செவ்வாய் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. பட்டினத்தடிகள் குருபூஜை இன்று திருவொற்றியூரில் நடைபெறுகிறது. ஆடித்தபசு சங்கரன்கோவிலில் நடைபெறுகிறது.
சென்னை: இன்று ஆடி மாத கடைசி செவ்வாய் இன்று ஆடி கடைசி செவ்வாய் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. பட்டினத்தடிகள் குருபூஜை இன்று திருவொற்றியூரில் நடைபெறுகிறது. ஆடித்தபசு சங்கரன்கோவிலில் நடைபெறுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அவ்வையாருக்கு தனி கோயில் உண்டு. தாழக்குடி அருகேயுள்ள அவ்வையார் அம்மன் கோயிலில் அதிகாலை முதலே பெண்கள் குவிந்தனர். குமரி மற்றும் கேரளப் பகுதிகளிலிருந்து வந்து, கோயில் வளாகத்தில் கூழ், கொழுக்கட்டை, சர்க்கரைப் பொங்கல் போன்றவை செய்து அவ்வையார் அம்மனுக்குப் படைத்து வழிபட்டனர். கோயிலில் பெண்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அவ்வையார் அம்மனை வழிபட்டனர்.

இன்று ஆடித் தபசு !
இன்று சங்கர நாராயணர் கோவிலில் மிகவும் விசேஷம். சங்கரனும் நாராயணனும் ஒன்றே என கோமதி அம்மனுக்கு தரிசனம் தந்த நாள். சங்கரன் கோவிலில் ஆடித்தபசு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சங்கரன்கோவிலில் குவிந்துள்ளனர். ஊசிமுனையில் ஒற்றைக்காலில் தவமிருக்கும் அம்மனுக்கு இறைவன் சங்கரநாராயணராக காட்சி தருவார்.

பட்டினத்தார் குருபூஜை
காவிரிப்பூம்பட்டிணத்தில் பிறந்து திருவொற்றியூரில் முக்கியடைந்த பட்டினத்தார் இன்று குருபூஜை கடைபிடிக்கப்படுகிறது. கோடி கோடியாக பணமும் பொருளும் சம்பாதித்தாலும் உலகத்தை விட்டு நீ போகும் போது உன்னுடன் காதற்ற ஊசி கூட வராது என்று உலகிற்கு உணர்த்தியவர் பட்டினத்து அடிகள். மகனாக பிறந்த ஈசன் தனக்கு உணர்த்தியதை உலகிற்கு உணர்த்த செல்வங்களை துறந்து துறவியானவர். பூம்புகார் எனப்படும் காவிரிப்பூம்பட்டிணத்தில் பிறந்து சென்னை திருவொற்றியூரில் கடற்கரை நகரில் ஆடி உத்திராடம் நாளில் முக்தியடைந்தவர். அவரது குருபூஜை இன்று கடைபிடிக்கப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications