Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிம்மத்தில் ஆட்சி பெற்று அமர்ந்த சூரியன்..ஆவணி மாதத்தில் என்னென்ன விழாக்கள் இருக்கு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆவணி மாதம் சிம்ம மாதம் என மலையாளத்தில் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில், சித்திரை மாதம் புத்தாண்டாக இருப்பதுபோல, கேரளத்தில் ஆவணி எனப்படும் சிம்ம மாதமே புத்தாண்டு துவக்க மாதமாக இருக்கிறது. தமிழகத்தில், ஆவணி மாதம் விவசாயத்திற்கு முக்கியமான காலமாகும். ஆடியில் விதைத்து, ஆவணியில் கண்போல பயிரை பாதுகாத்து வளர்க்கின்றனர் விவசாயிகள். ஆவணி மாதத்தில் என்னென்ன முக்கிய பண்டிகைகள் உள்ளன என்றும் ஆவணி மாதத்தின் சிறப்புகளைப் பற்றியும் பார்க்கலாம்.

ஆடி மாதம் போய் ஆவணி வந்தால் ஆயிரம் நன்மைகள் தேடி வரும் என்பார்கள். ஆவணியில் அத்தனை நாள்களும் மங்கல நாள்களே என்பது ஆன்றோர் வாக்கு. பெருமைமிகு இந்த மாதத்தில் தான் கணநாதர், கண்ணபிரான் திருஅவதாரங்கள் நடைபெற்றன.

கிராமப்புறங்களில் உள்ள தங்களது காவல் தெய்வத்திற்கு ஆனி, ஆடி மாதங்களில் படையல் முடித்து, கொடைவிழா நடத்தும் மக்கள், இம்மாதத்தில் தாங்கள் செய்யும் தொழிலுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறார்கள்.'

ஆவணி மாத சிறப்புகள்

ஆவணி மாத சிறப்புகள்

தமிழ் மாதங்களில் ஆவணி ஐந்தாம் மாதமாக வருகின்றது. கேரளத்தில் இதுவே முதல் மாதமாகவும் சிம்ம மாதமாகவும் கொள்ளப்படுகின்றது. சிரவண நட்சத்திரம் என்று வடமொழியில் அழைக்கப்படும் திருவோணத்தில் பௌர்ணமி நாள் வருவதால் இது சிரவண மாதம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. 'மாதங்களுக்கு எல்லாம் அரசன்' என்று இதற்குப் பொருள். சிங்க மாதம், வேங்கை மாதம் என்ற பெயர்களும் ஆவணிக்கு உண்டு. ஆவணி மாதத்தின் சிறப்பு பற்றி அகத்தியர் குறிப்பிடுகையில், 'சிங்கத்திற்கு (ஆவணிக்கு) இணையான மாதமும் இல்லை; சிவபெருமானைவிட மேம்பட்ட இறைவனும் இல்லை' என்கிறார்.

ஆவணி மூலம் திருவிழா

ஆவணி மூலம் திருவிழா

ஆனி மாதம் வரும் மூலம் நட்சத்திரத்தை, 'ஆனி மூலம் அரசாளும்' என்று சிறப்பித்துச் சொல்வார்கள். அதுபோன்று, ஆவணி மாதம் வரும் மூலமும் சிறப்பு பெற்றதுதான். மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயிலில், ஆவணி மூலத் திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. கருங்குருவிக்கு உபதேசம் செய்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, தருமிக்கு பொற்கிழி அளித்தது, பிட்டுக்காக மண் சுமந்தது, நரிகளைப் பரிகளாக்கியது, வளையல் விற்ற லீலை என, மதுரை மண்ணில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் இந்த விழாவில் இடம்பெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, சொக்கநாதருக்குப் பட்டாபிஷேகம் செய்யப்படும். மாணிக்கவாசகருக்காக இறைவன் குதிரைகளைக் கொண்டு வந்து மதுரையம்பதியில் ஒப்படைத்த ஆவணி மூல விழாவும் இந்த மாதத்தில் சிறப்பு.

 திருவோணம் திருவிழா

திருவோணம் திருவிழா


கேரள மக்களால் கொண்டாடப்படும் உலகப் புகழ் திருவிழா ஓணம் பண்டிகை. ஆவணி மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரம் தான் மலையாள மக்களால் ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
ஆவணி மாதத்தில் தான், இளையான் குடி மாறனார், குலச்சிறையார், திருநீலகண்டர், அதிபத்தர் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி

தேடி வந்து வழிபட்டால், ஓடி வந்து வினைகள் தீர்க்கும் விநாயகப் பெருமானின் திருஅவதாரம் நிகழ்ந்ததும், இதே ஆவணி மாதத்தில்தான்.மாதந்தோறும், விநாயகருக்கு உகந்த சதுர்த்தி தினம் வந்தாலும், இந்த மாதத்தில் அவர் அவதாரம் செய்த சதுர்த்தி மட்டுமே 'விநாயகர் சதுர்த்தி' என்று சிறப்பித்துக் கொண்டாடப்படுகிறது.

 மகாபலி மன்னன்

மகாபலி மன்னன்

அரசர்களில் சிறந்தவரான மகாபலி மன்னன், வாமன மூர்த்திக்கு மூன்றடி தானம் கொடுத்தது இந்த ஆவணி மாத சிரவண துவாதசி நாளில்தான். சிரவண தீபம் என்று போற்றப்படும் ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் ஏற்றப்படும் இந்த தீபம் வேண்டுதலை நிறைவேற்றக் கூடிய அற்புத வழிபாடு என்பர். இந்த நாளில் திருமலை திருப்பதியில் உற்சவரான மலையப்ப சுவாமி ஊஞ்சல் மண்டபத்தில் திருச்சேவை சாதிப்பார். அப்போது அங்கே ஆயிரத்தெட்டு திரிகளைக் கொண்ட நெய் விளக்கு ஏற்றப்பட்டு அந்த பகுதியே ஒளிவெள்ளத்தில் மிதக்கும். இது சஹஸ்ர தீபாலங்கார சேவை என்பர்.

ஆவணி ஞாயிறு சூரிய வழிபாடு

ஆவணி ஞாயிறு சூரிய வழிபாடு

ஆவணி மூலம், ஆவணி ஞாயிறு உள்ளிட்ட பல விரத நாள்களும் இந்த மாதத்தில் வருகின்றன. மேலும் ஆவணி மாத செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளும் விரத முக்கியத்துவம் வாய்ந்த நாள்கள் என்கிறார்கள். புதிதாக திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெற ஆவணி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மங்கள கெளரி விரதம் அனுஷ்டிப்பார்கள். ஆவணி மாதம் சிவபெருமானை வழிபடுவதற்கு ஏற்ற மாதம் என்பதால் திங்களும் வியாழனும் சைவர்களுக்கு இன்றியமையாத நாள்கள் ஆகும். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை சூரிய வழிபாட்டுக்கு ஏற்ற நாள். அதேபோல் அன்றிலிருந்து சூரிய நமஸ்கார வழிபாட்டைத் தொடருவதும் நல்லது. இந்த மாதத்தில் புதுமனை புகுந்தால் அந்த வீட்டில் சிறப்பான வாழ்க்கை அமையும். இந்த மாதத்தில் திருமணம் செய்தால் வாழ்க்கை இன்பமாக அமையும் எனற நம்பிக்கையும் உள்ளது.

ஆவணி மாத பண்டிகை நாட்கள்

ஆவணி மாத பண்டிகை நாட்கள்

ஆவணி மாதத்தில் வரக்கூடிய முக்கிய விஷேசங்களைப் பார்த்தால் ஆவணி 1ஆம் தேதி விஷ்ணுபதி புண்ணியகாலம் ஆரம்பமாகிறது. ஆவணி 3 கோகுலாஷ்டமி, ஸ்ரீ வைகானஸ ஜெயந்தி, ஆவணி 4 சனி ஜெயந்தி, ஆவணி 6 வாஸ்துநாள்,7 காமிகா ஏகாதசி, 8 ஆவணி முழக்கம், ஆவணி 10 சர்வ அமாவாசை, 14 கல்கி ஜெயந்தி, செவ்வாய் ஜெயந்தி. ஆவணி 15ஆம் தேதி ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி, ஆவணி 16 ஆம் ரிஷி பஞ்சமி, 20 கஜலட்சுமி விரதம், ஆவணி மூலம், 22 விஷ்ணு பரிவர்த்தனை ஏகாதசி, 23 திருவோணம் பண்டிகை, 25 உமா மகேஸ்வர விரதம். மகாலய பட்ச ஆரம்பம். ஆவணி 29 மகா பரணி கொண்டாடப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+