Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆவணி மாத ராசிபலன்கள் - ஆவணியில் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு எப்படி

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஆவணி மாதம் சிம்மம் மாதம். சிம்ம ராசியில் சூரியன் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் மாதம். தனது வீட்டில் கம்பீரமாக வலம் வரப்போகிறார் சூரியன். கூடவே சுக்கிரன், செவ்வாய், புதன் என கிரகங்கள் கூட்டணி சேருகின்றன. இந்த கிரகங்களின் கூட்டணி ஒருபக்கம் இருக்க மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் சனி கேது விருச்சிகத்தில் குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. இந்த கிரகங்களின் கூட்டணி சஞ்சாரத்தினால் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

இந்த மாத இறுதியில் கிரகங்களின் மாற்றம் நிகழ்கிறது. ஆவணி 23ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசியில் நீசமடைகிறார். ஆவணி 24ஆம் ஆம் தேதி புதன் கன்னி ராசியில் ஆட்சி உச்சமடைவதால் சுக்கிரன் நீசபங்கமடைகிறார். இதனால் மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு சில சாதக பாதகங்கள் ஏற்படும்.

ஆவணி மாதத்தில் பணவரவு, பொருளாதார நிலை, வேலை வாய்ப்பு, கல்வி, திருமணம், குடும்பம் போன்றவை மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

நிதானம் பொறுமை தேவை

நிதானம் பொறுமை தேவை

மகர ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் நான்கு கிரகங்கள் சஞ்சரிக்கின்றனர். அஷ்டமத்தில் சூரியன் செவ்வாய் புதன் சுக்கிரன் 11ஆம் வீட்டில் குரு 12ஆம் வீட்டில் சனி கேது என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. எட்டில் சூரியன் உயரதிகாரிகளுடன் மோதல் வரும். பிரச்சினைகளை எதிர்கொள்வதை விட தவிர்த்து விடுவது நல்லது. வேலையை விடாதீங்க. வெளிநாடு வேலையே வேண்டாம். கூட்டுத்தொழில் செய்பவர்கள் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து செய்யுங்கள். நிதானமும் பொறுமையும் தேவை. வாக்குவாதங்களை விட்டு விடுங்கள். உணர்ச்சி வசப்படாதீர்கள். பிரச்சினையை விட்டு விலகி விடுவது உத்தமம்.

பேச்சில் கவனம்

பேச்சில் கவனம்

செலவு அதிகரிக்கும் ரிஸ்க் எடுத்து எதுவும் செய்யாதீர்கள். இதமாக பேசுங்கள் கோபப்பட வேண்டாம் உங்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் பயணங்களில் கவனம் தேவை. வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் கவனம். வீட்டில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும். இரவு நேர பயணங்கள் அநாவசிய பயணங்கள் தேவை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருங்கள் அநாவசியமான பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.

அம்மன் கோவிலுக்கு போங்க

அம்மன் கோவிலுக்கு போங்க

நேரம் தவறி சாப்பிடுவது ஆபத்து வயிறு கோளாறுகளை ஏற்படுத்தும், அசிடிட்டி பிரச்சினை அதிகரிக்கும். நரம்பு தொடர்பான பிரச்சினையில் இருப்பவர்கள் தூக்கமின்மையால் அவதிப்படுவீர்கள். அரசு உத்யோகத்தில் இடமாற்றம். ஆண் பெண் பழகும் போது அதிக எச்சரிக்கை தேவை. புதிய கடன்கள் வரும் நரசிம்மர் வழிபாடு நன்மை தேவை. அம்மன் கோவிலுக்கு எலுமிச்சை வாங்கிக் கொடுங்கள் திரும்ப வாங்க வேண்டாம். பசுநெய் தீபம் ஏற்றி அனுமன் சாலிசா படியுங்கள்.

கும்பம்

கும்பம்

கும்பம் ராசிக்கு சனி 11ஆம் வீட்டிலும குரு பத்தாம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றனர். வேலையில் புதிய மாற்றம் வரும். தொழில் செய்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். குரு இந்த மாதம் நல்லவர்களை அதிகம் சோதிப்பார். எதிர்மறையாக களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் இருந்து சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன் என நான்கு கிரகங்கள் சேர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகின்றனர். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். கவனமாக இருங்கள்.

பணம் பொருள் சேர்க்கை

பணம் பொருள் சேர்க்கை

மனதிற்கு பிடித்த விசயங்கள் நடக்கும். சண்டை சச்சரவு வேண்டாம் கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போங்கள். பிள்ளைகளை கவனமாக பாருங்கள். உத்யோகத்தில் ஏற்றங்கள் மாற்றங்கள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். சனியில் ஆதிக்கத்தினால் பொருள் சேர்க்கை வரும்.
மாற்றங்கள் வீடு தேடி வரும். நண்பர்கள் உறவினர்கள் விசயத்தில் கவனம் தேவை. 23ஆம் தேதிக்கு மேல் புதன் சுக்கிரன் எட்டாம் வீட்டிற்கு நகர்கின்றனர். போராட்டங்கள் ஏற்படும். தேவையில்லாத விசயத்தில் தலையிட வேண்டாம். வார்த்தைகளில் கவனம் தேவை.

முதலீட்டில் கவனம் தேவை

முதலீட்டில் கவனம் தேவை

பத்தில் குரு எட்டாம் வீட்டில் சுக்கிரன் புதன் என இரண்டு கோள்கள் சஞ்சரிப்பதால் பாதிப்பை தரும். கவனமாக விழிப்புணர்வோடு செயல்பட்டால் பிரச்சினைளை குறைக்கலாம். தேவையற்ற மன உளைச்சலை தவிர்க்கலாம்.எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்க. முதலீடு செய்யும் முன் யோசனை தேவை. திருமண முயற்சிகள் இப்போதைக்கு தேவையில்லை. பிள்ளைகள் விசயத்தில் தேவையற்ற கோப தாபத்தை தவிருங்கள். குடும்பத்தில் சமாதனக்கொடியை பறக்க விடுங்கள் அதுதான் நிம்மதியை ஏற்படுத்தும். பெற்றோர்கள் தோழர்களாக மாறி பிள்ளைகளிடம் கவனமாக இருங்கள். குடும்பத்துடன் குல தெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள் எதிரிகள் பலத்தை முறியடிப்பீர்கள். வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்படும் மாற்றம் முன்னேற்றத்தை தரும். புற்றுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வாருங்கள். பசு நெய் தீபம் ஏற்றுங்கள்.

எதிரிகள் கவனம்

எதிரிகள் கவனம்

மீனம் ராசிக்கு 9ஆம் வீட்டில் குரு சஞ்சரிக்கிறார். மாத துவக்கத்தில் ஆறாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் என கிரகங்கள் கூட்டணி சேர்ந்துள்ளனர். சனி பத்தாம் வீட்டில் இருப்பதால் தடங்கல்கள் நெருக்கடியை ஏற்படுத்தும். சனி கேது இணைவு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். வேலையில் கடனே என்று வேலை செய்வீர்கள். எதிரிகள் விசயத்தில் கவனம் தேவை. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழுங்கள். நல்லது நடக்கும்.

புதன் சுக்கிரன் கூட்டணி மாற்றம்

புதன் சுக்கிரன் கூட்டணி மாற்றம்

மாத இறுதியில் அமைதியும் அற்புதமும் ஏற்படும். காரணம் புதன், சுக்கிரன் கிரகங்கள் ஏழாம் வீட்டில் நகர்கின்றனர் உங்கள் ராசியை சுக்கிரன் புதன் பார்வையிடுவதால் சுறுசுறுப்பு உற்சாகம் கூடும். பெற்றோர்கள் பெரியோர்களின் தேக ஆரோக்கியம் நன்மையை தரும். முகத்தில் உள்ள உறுப்புகள் விசயத்தில் கவனம். சளி பிடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். தனிப்பட்ட முறையில் கவனம் தேவை. அசையும் அசையா பொருட்களின் சேர்க்கை நன்மையை தரும்.

ஒற்றுமை தரும் மாதம்

ஒற்றுமை தரும் மாதம்

இள வயதினருக்கு காதல் திருமணம் உற்சாகத்தை தரும். புது முயற்சிகள் வெற்றியை தரும். சகல விதத்தில் நன்மையை தரும். எதிர்த்தவர்கள் சரணாகதி அடைவார்கள். முன்னேற்றங்கள் பெரிய அளவில் நன்மையை தரும் விநாயகர் வழிபாடு நன்மையை தரும். குருவின் பார்வை ஏற்றத்தை தரும். நீண்ட நாட்களாக மருந்து எடுத்துக்கொள்வீர்கள். புத்துணர்வு ஏற்படும் காலம். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேருவீர்கள். மிகப்பெரிய கவுரவம் சந்தோசத்தை தரும், வியாழக்கிழமை அசைவம் சாப்பிட வேண்டாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+