Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏப்ரல் மாத ராசி பலன் 2020: ரிஷபம்,மிதுனம் ராசிக்காரங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

ஏப்ரல் மாதம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மாளவியா யோகத்தால் செலவுக்கு பணம் வரும் வீட்டோட இருந்தாலும் விலகி இருங்க. மிதுனம் ராசிக்காரங்களுக்கு அஷ்டமத்துல சனி இருப்பதால ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. சத்த

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏப்ரல் மாதம் மீனம் மாதமும் மேஷம் மாதமும் இணைந்த மாதம். சூரியன் மீனம் ராசியில் பாதி நாட்களும், மேஷம் ராசியில் பாதி நாட்களும் ஆக சஞ்சரிப்பார். ஏப்ரல் மாதம் சூரியன் உச்சம் பெறும் மாதம். மகரத்தில் செவ்வாய் உச்சம், சனி ஆட்சி, குரு நீசபங்க ராஜயோகம், ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சி என கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக உள்ளது. இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு யோகமான மாதம் காரணம் உங்க ராசியில் ராசிநாதன் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் நிறைய அற்புதங்கள் நிகழப்போகிறது. மிதுனம் ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மாதமாகும்.

ஏப்ரல் மாதம் கிரகங்கள் மாற்றத்தை பார்த்தால் ஏப்ரல் 8ஆம் புதன் மீனம் ராசியில் நீசமடைகிறார். 14ஆம் தேதி சூரியன் மேஷத்தில் உச்சமடைகிறார். 24ஆம் தேதி புதன் மேஷம் ராசிக்கு வந்து புதனோடு இணைகிறார். நவ கிரகங்களின் சஞ்சாரம் பலருக்கும் நன்மை தரக்கூடியதாகவே இருக்கிறது.
சிலருக்கு சோதனைகளை தரப்போகிறது.

உலகம் முழுவதும் நோய் தாக்குதல் அதிகமாகி வரும் இந்த சூழ்நிலையில் நவகிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மட்டுமே நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். நோயற்ற வாழ்வுதான் குறைவற்ற செல்வம். பண வருமானம் வந்தாலும் ஆரோக்கியமாக இருந்தால்தான் அனுபவிக்க முடியும். ஏப்ரல் மாதத்தில் ரிஷபம் ராசிக்காரர்களுக்கும் மிதுனம் ராசிக்காரர்களுக்கும் எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

நஷ்டம் வராது

நஷ்டம் வராது

ரிஷபம் ராசியில் சுக்கிரன் ஆட்சி பெற்றிருக்கிறார். லாப ஸ்தானம் விரைய ஸ்தானத்தில் சூரியன், குடும்ப ஸ்தானத்தில் ராகு, அஷ்டம ஸ்தானத்தில் கேது, பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சனி லாப ஸ்தானத்தில் புதன் நீசம் என கிரகங்கள் இந்த மாதம் சஞ்சரிக்கின்றன. உங்க ராசிநாதன் சுக்கிரன் உங்களுக்கு சந்தோஷங்களை கொடுக்கப்போகிறார். மாளவியா யோகம் பெற்று சஞ்சரிக்கிறார். குடும்பத்தோடு இணைந்து இருக்கப் போகிறீர்கள். சனியால் ஏற்பட்டு வந்த சங்கடங்கள் தீரும். ஏப்ரல் மாதம் முழுவதும் சுக்கிரன் உங்க ராசியில் இருப்பதால் முகம் பொலிவு கூடும். கலைத்துறைக்கு போக வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மாதம் முயற்சி செய்யலாம். ஒன்பதாம் வீட்டில் மூன்று கிரகங்கள் கூடி இருப்பது அதிர்ஷ்டம். எதிர்பார்க்காத சம்பவங்கள் நிறைய வரும் தொழில் வியாபாரத்தில் இப்போதைக்கு லாபம் வரவில்லை என்றாலும் நஷ்டம் வராது.

பிரச்சினை தீரும்

பிரச்சினை தீரும்

அதிசார குரு பெயர்ச்சியால் ரிஷபம் ராசிக்கு நிறைய நன்மைகள் உண்டு. இந்த மாதம் நோய் பிரச்சினையால் ஊரை விட்டு ஓடிப்போனாலும் நோய் பாதிப்புகள் நீங்கும். உங்க ராசியில் சுக்கிரன் நிற்கிறார். அதே நேரத்தில் உங்க ராசிக்கு நீசபங்க ராஜயோகம் பெற்ற குருவின் பார்வை கிடைப்பதால் நன்மை நடக்கும். எதற்காகவும் பதற்றம் வேண்டாம் உங்களுடைய பணம் பாதுகாப்பாக இருக்கும். கொரோனா வைரஸ் பிரச்சினையால் தொழில் எல்லாம் இப்படி முடங்கிக் போச்சேன்னு வருத்தப்படாதீங்க. ஆரோக்கியமாக இருந்தால் எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் சம்பாதிக்கலாம் முதலில் ஆரோக்கியம்தான் முக்கியம் கவனமாக இருங்க.

பலம் அதிகரிக்கும்

பலம் அதிகரிக்கும்

உங்களுடைய பலம் அதிகரிக்கும் சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். புதன் நீசமடைந்தாலும் உங்களுக்கு கவலையில்லை. சில நாட்களில் இடப்பெயர்ச்சியாகி மேஷம் ராசிக்கு மாறுவதால் சுப விரையம் செய்வீர்கள். எதிர்பார்க்காத வருமானம் வரும். கஷ்டங்கள் தீரும். கடன் நிவர்த்தியாகும். இந்த மாதம் கடவுளின் அருளால் பாதிப்புகள் நீங்கும். வெளிநாட்டு வாய்ப்பு வந்தாலும் ஒத்துக்காதீங்க. வீட்டுக்கு உள்ளேயே இருந்து ஆரோக்கியமாகவும் மன மகிழ்ச்சியோடவும் இருங்க.

சாதகமற்ற நிலை

சாதகமற்ற நிலை

மிதுனம் ராசிக்காரர்களே உங்க ராசிக்குள் ராகு, தொழில் ஸ்தானத்தில் இருக்கும் சூரியன் மாத பிற்பகுதியில் லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். விரைய ஸ்தானத்தில் சுக்கிரன், களத்திர ஸ்தானத்தில் கேது எட்டாம் வீட்டில் சனி, செவ்வாய், குரு என கிரகங்கள் கூடி இருக்கின்றன. ஏப்ரல் உங்களுக்கு கிரகங்கள் சில சாதகமாகவும் சில சாதகமற்ற நிலையிலும் இருக்கின்றன என்றாலும் இப்போது இருக்கிற சூழ்நிலை உடல் ஆரோக்கியம்தான் ரொம்ப முக்கியம் எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க. இப்போதைய சூழ்நிலையில் நமக்கு உடல் ஆரோக்கியமும் பாதுகாப்பும்தான் ரொம்ப முக்கியம். ரொம்ப நெகடிவ் ஆக யோசிக்காதீங்க எதையும் பாசிட்டிவ் ஆகவே திங்க் பண்ணுங்க.

மன அமைதி முக்கியம்

மன அமைதி முக்கியம்

எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானம். அந்த இடத்தில சனி, குரு, செவ்வாய் இருக்காங்க. நிறைய பேர் வீட்டோட இருக்கீங்க. வாய் பேச்சுவார்த்தையில் கவனமாக இருங்க வம்பு வராம பார்த்துக்கங்க குடும்பத்தில எல்லோரும் சேர்ந்து இருப்பதால நீங்க உற்சாகமாக இருங்க. வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்க. வண்டி வாகனத்தை வீட்டை விட்டு வெளியே எடுக்கவே எடுக்காதீங்க. விபத்து காரகன் செவ்வாய் எட்டில் இருக்கிறார். செவ்வாய் உச்சம் பெற்றிருக்கிறார். அதுதான் உங்களுக்கு பிரச்சினை. கடன் தொல்லை வரும், நோய்கள் ஏற்படலாம் சத்தான உணவுகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துங்க.

சுப பேச்சுவார்த்தைகள் வேண்டாம்

சுப பேச்சுவார்த்தைகள் வேண்டாம்

சனி பகவான் உங்களுக்கு நிறைய சோதனைகளை கொடுப்பார். உங்க ராசி நாதன் புதன் நீசம் பெற்று பத்தாம் வீட்ல இருப்பார். சுக்கிரன் விரைய ஸ்தானத்தில் இருப்பதால் விரைய செலவுகள் வரலாம். மாத பிற்பகுதியில் உங்க ராசிக்கு 11ஆம் வீட்டில் சூரியன் உச்சம் பெற்று அமரப்போகிறார். இதன் மூலம் உங்க தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும். உடன்பிறந்தவர்கள் உதவி கிடைக்கும். இந்த மாதம் சுப காரிய பேச்சுவார்த்தை எதுவும் வேண்டாம். காதலை புரபோஸ் பண்ண இது நல்ல மாதம் இல்லை.

உணவில் கவனம்

உணவில் கவனம்

கோபத்தை கட்டுப்படுத்துங்க. நிறைய தியானம் பண்ணுங்க. சில நேரங்களில் அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்கும் பொறுமையாக இருங்க. ரொம்ப கூலா குடும்பத்தை ஹேண்டில் பண்ணுங்க. காரமான உணவுகளை இரவு நேரத்தில சாப்பிடாதீங்க. எதற்காகவும் கவலைப்படாதீங்க. என்னடா இந்த மாதம் இப்படி இருக்கேன்னு நினைக்கறீங்களா? கவலைப்படாதீங்க இந்த மாதம் போல அடுத்த மாதம் இருக்காது பாதிப்புகள் குறைந்து பலன்கள் அதிகமாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+