ஆருத்ரா தரிசனம் : திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஜன.1ல் கொடியேற்றம்
திருநெல்வேலி : புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலில் திருவாதிரை திருவிழா வரும் ஜனவரி 1ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை சுமார் 6.30 மணியளவில் சுவாமி சன்னதியில் கொடியெற்று வைபவம் நடைபெறும். ஜனவரி 10ஆம் தேதி மாலை 4 மணியளவில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும் என்று நெல்லையப்பர் கோவிலின் செயல் அலுவலர் நாராயணன் வெளியிட்டுள் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நெல்லை சீமையில் புகழ் பெற்ற சிவாலயம் நெல்லையப்பர் கோவில். இக்கோவில் சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. அதோடு, சைவ சமயக்குறவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற திருத்தலம். மேலும், சிவபெருமான் நாட்டியம் ஆடி சிறப்பித்த ஐந்து சபைகளில் ஒன்றான தாமிர சபை இக்கோவிலில் தான் அமையப்பெற்றுள்ளது. இங்கு சிவபெருமான் ஆடும் திருக்கோலம் 'திருத்தாண்டவம்' என்று அழைக்கப்படுகிறது.

நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோவிலில், சிவபெருமான் திருத்தாண்டவம் ஆடியதால், இங்கு ஆண்டு தோறும் ஆருத்ரா தரிசன திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இக்கோவிலில் உள்ள தாமிர சபையில் ஆருத்ரா தரிசனத்தன்று நடைபெறும் திருநடனக்காட்சி மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.
இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா வரும் ஜனவரி 1ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை சுமார் 6.30 மணியளவில் நெல்லையப்பர் சன்னதியில் கொடியேற்று வைபவம் நடைபெறும்.
இது பற்றி கோவில் செயல் அலுவலர் நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புகழ்பெற்ற நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, திருவாதிரை திருவிழா வரும் ஜனவரி 1ஆம் தேதியன்று காலை 6.30 மணிக்கு நெல்லையப்பர் சுவாமி சன்னதியில் கொடியேற்று விழாவுடன் தொடங்குகிறது.
இத்திருவிழாவின் ஒரு அங்கமாக நெல்லையப்பர் சுவாமி கோவிலில் 2ஆம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய சபாபதி சன்னதி முன்பாக, ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜனவரி 10ஆம் தேதி வரை, அதிகாலை 4 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவெம்பாவை வழிபாடு நடைபெறும்.
வரும் ஜனவரி 4ஆம் தேதி இரவு 8 மணிக்கு நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் திருவீதியுலா வைபவம் நடைபெறும்.
ஜனவரி 9ஆம் தேதி யன்று 2ஆம் பிரகாரத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க தாமிர சபையில் இரவு முழுவதும் நடராஜருக்கு திருநீராட்டு வைபவமும் சிறப்பு தீபாராதனையும் நடைபெறும்.
அதைத் தோடர்ந்து ஜனவரி 10ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு புகழ்பெற்ற தாமிர சபையின் முன்புள்ள கூத்த பிரான் சன்னதியில் பசு ஒன்று நிறுத்தப்பட்டு தீபாராதனை காட்டப்படும். பின்னர் அதிகாலை
4 மணிக்கு நடராஜர் திருநடனக் காட்சியான புகழ்பெற்ற ஆருத்ரா தரிசனம் நடைபெறும். பக்தர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு, ஆருத்ரா தரிசன நிகழ்வை கண்டு தரிசிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என்று தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications