ஆகஸ்ட் மாத ராசி பலன் 2023: சிம்மத்தில் சேரும் கூட்டணி.. யாருடைய வாழ்க்கையில் டர்னிங் பாய்ண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆகஸ்ட் மாதத்தில் கூட்டணிகள் பிரிகின்றன.. புது கூட்டணி சிம்ம ராசியில் உருவாகிறது. கிரகங்களின் இடப்பெயர்ச்சியும் உள்ளது. நவகிரகங்களின் பயணம், வக்ர நிலை கூட்டணி, பார்வைகளைப் பொறுத்து மேஷம் முதல் கடகம் வரை அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம் ஆகிய 9 நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

கிரகங்களின் பெயர்ச்சி: ஆகஸ்ட் மாதத்தில் மேஷ ராசியில் குரு, ராகு, கடகத்தில் சூரியன், சிம்ம ராசியில் சுக்கிரன், புதன், செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் சனி என கிரகங்களின் பயணம் உள்ளது. இந்த மாதத்தில் சுக்கிரன் செவ்வாய் கூட்டணி பிரிகிறது. சுக்கிரன் வக்ரமடைந்து பின்னோக்கி கடக ராசிக்கு செல்கிறார். செவ்வாய் இடப்பெயர்ச்சியாகி கன்னி ராசிக்கு செல்கிறார். சனி பகவானும் வக்ர நிலையிலேயே பயணம் செய்கிறார்.

August Month rasi palan 2023 : August matha Rasi Palan prediction for 9 Stars Ashwini to Ayilyam nakshatra

அஸ்வினி: நிறைய பண வருமானம் வரும் கூடவே சுப செலவுகளும் தவிர்க்க முடியாததாக இருக்கும். கூட்டுத்தொழில் லாபத்தை தரும். உங்களின் எதிர்காலத்திற்காக சேமிப்பீர்கள். குடும்பதோடு வெளியூர் பயணம் செல்வீர்கள். ஆன்மீக சுற்றுலா மன அமைதியைக் கொடுக்கும். ஆகஸ்ட் மாதத்தில் உங்களுக்கு சந்திராஷ்டமம் 24,25ஆம் தேதிகளில் வருவதால் கவனமாக இருக்கவேண்டும்.

பரணி: புதிய வேலை கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்காக முயற்சி செய்வீர்கள். உழைப்பு அதிகரிக்கும். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதை முறியடித்து தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். திடீர் பண வரவு வரும். எதிர்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். சந்திராஷ்டம நாட்களில் முதலீடுகள், பணம் கொடுக்கல் வாங்கல் தவிர்க்கவும்.

கார்த்திகை: நிதி நிலைமை நன்றாக இருக்கும். அதே நேரத்தில் திடீர் நோய்கள் வந்து உங்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும். மருத்துவ செலவுகள், வீண் விரைய செலவுகள் வந்து போகும். தொழில் வியாபாரம் நன்றாக இருந்தாலும் பாடாய் படுத்தும் நோய்கள் உடலையும் மனதையும் வாட்டி வதைக்கும். நோய் பாதிப்புகள் நீங்குவதற்கு செவ்வாய்கிழமையில் முருகப்பெருமானை வணங்க நன்மைகள் நடைபெறும். 24,25ஆம் தேதி சந்திராஷ்ட நாட்களில் கவனமும் நிதானமும் தேவை.

ரோகிணி: என்னதான் பண வருமானம் வந்தாலும் செலவுகள் அதிகமாக இருக்கிறதே என்று கவலைப்படுவீர்கள். உறவினர்கள் வீட்டு விஷேசங்களில் அதிகமாக பங்கெடுக்க வேண்டியிருக்கும். பிரச்சினைகள் எத்தனை வந்தாலும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் உறவுகளுடன் கூடி மகிழ்வீர்கள். எதையும் சமாளிக்கும் தெம்பும் தைரியமும் உண்டாகும்.

மிருகசீரிஷம்: நினைத்த காரியம் நிறைவேறும் அதே நேரத்தில் சுப காரியங்களில் தடைகளைத் தாண்டி வெற்றி கிடைக்கும். விடா முயற்சி விஸ்வரூப வெற்றியைத் தரும். நண்பர்களின் உதவி கிடைக்கும் என்றாலும் பல நேரங்களில் ஏமாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கும். பண விசயத்தில் கவனமாகவே இருங்கள். யாரை நம்பியும் பணத்தை கடனாக கொடுக்காதீர்கள். கஷ்டங்கள் தீர கந்தனை வணங்குங்கள்.

திருவாதிரை: எடுத்த எடுப்பில் யாரையும் நம்பிவிடாதீர்கள். அது முதலுக்கே மோசமாகி விடும். என்னடா வாழ்க்கை இது என்று சலிப்போடு காலம் கடத்துவீர்கள் வாழ்க்கை என்றாலே நல்லது கெட்டது இருக்கத்தான் செய்யும். எதையும் தைரியத்தோடு எதிர்கொள்ளுங்கள். சங்கடங்கள் தரும் சந்திராஷ்டம நாட்களில் வீண் பேச்சுக்களைத் தவிர்க்கவும்.

புனர்பூசம்: குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். திருமணம் சுப காரியம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். பண விசயங்களில் யாருக்கும் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். பணம், பொருட்களை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். உங்களின் உடமைகள் மீது கவனம். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேச வேண்டாம். குல தெய்வ வழிபாடு குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்கும்.

பூசம்: இந்த மாதம் வீடு,நிலம் வாங்கும் முயற்சி வெற்றியைத் தரும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். சிவனே என்று இருந்தாலும் சிந்தனையை தடுமாறச்செய்ய சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். அமைதியாக இருக்கும் உங்களைத் தேடி சில பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. எதையும் சமாளியுங்கள். சந்திராஷ்டம நாட்களில் பெரிய அளவில் முதலீடுகள் வேண்டாம்.

ஆயில்யம்: வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று பாடி மகிழ்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் உற்சாகம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கவனமும் நிதானமும் தேவைப்படும். போட்டி தேர்வுகள் எழுதியவர்களுக்கு ரிசல்ட் நல்ல முறையில் தேடி வரும். மாணவர்கள் உயர் கல்விக்காக வெளியூர் செல்லும் காலம் கனிந்து விட்டது. இந்த மாத ஆரம்பத்திலேயே சந்திராஷ்டம தினமாக இருப்பதால் கவனம் தேவை. ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+