Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா வைரஸ் பாதாளத்திற்கு போகும் பொருளாதாரம் எந்த ராசிக்காரங்க பணம் தப்பிக்கும் தெரியுமா?

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களின் உயிரை மட்டும் குடிக்கவில்லை பொருளாதாரத்தை பதம் பார்த்து வருகிறது. உலகளாவிய பிரச்சினையாக மாறி வரும் இந்த கொரோனாவினால் சீனா பொருளாதாரம் விழி பிதுங்கி கொண்டிருக்கிற

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுவாகவே சுப கிரகம் குரு சுபமான இடத்தில் அதாவது ஆட்சி உச்சம் பெற்ற இடத்தில் இருந்தால் அது பொற்காலம்தான். நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்ல காலம்தான். ஆனால் நம்ம நாட்டிற்கு பிடித்துள்ள கண்டச்சனி இப்போ கொரோனா வைரஸ் மூலமாக ஆட்டிப்படைக்க ஆரம்பித்து விட்டது. இந்திய பங்குச்சந்தைகள் பலத்த அடிவாங்கியுள்ளன. வங்கியில் போட்ட பணம் திரும்ப வருமா என்று பலரும் பயப்படுகிறார்கள். எந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை நிம்மதியும் சந்தோஷமும் எந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் என்று பாருங்க.

Recommended Video

    கொரோனா வைரஸும்... தேவையற்ற வதந்திகளும்

    சுதந்திர இந்தியாவின் ஜாதகப்படி பார்த்தால் நம்ம நாட்டிற்கு கடக ராசி. ரிஷப லக்னம். ராசிக்கு ஆறாம் வீட்டில் குரு கேது செவ்வாய் உடன் சஞ்சரிக்க, சனி ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்றிருக்க, எட்டில் சூரியன் புதன் சஞ்சரிக்க ஒரு சோகமயமான காலகட்டத்தில்தான் இருக்கிறது நாடு. கடகம் ராசிக்கு விபரீத ராஜயோகம், சசமகாயோகம் என்றெல்லாம் சொன்னாங்களே எதையும் காணோமே என்று யோசிப்பது தெரிகிறது. என்ன செய்வது இப்போது குரு கேது உடன் சேர்ந்திருக்கிறார். விரைய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கிறார். நாட்டிற்கு மட்டுமல்ல நாட்டு மக்களுக்கும் இப்போது கஷ்டகாலமாகத்தான் இருக்கிறது. ஏற்கனவே பலத்த அடி வாங்கியுள்ள இந்திய பொருளாதாரம், கொரோனா வைரஸ் தாக்குதலால் பலத்த அடி வாங்கி வருகிறது.

    கொரோனோ வைரஸ் பாதிப்பால் அனைத்து துறைகளுமே பாதிக்கப்பட்டுள்ளன. ஜவுளி, தகவல் தொடர்புதுறை, ஐடி நிறுவனங்கள், ஏற்றுமதி இறக்குமதி, நிதி நிறுவனங்கள் என எதையும் விட்டு வைக்கவில்லை இந்த கொரோனா சுற்றுலாத்துறையும் படுத்தே விட்டது. மேஷம் முதல் சிம்மம் வரை எந்த ராசிக்காரங்களுக்கு எப்படி இருக்கும்னு பாருங்க.

    மேஷம்

    மேஷம்

    மேஷம் ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த சார்வரி புத்தாண்டில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நீடிக்கும். உங்க பணம் பத்திரமாக இருக்கும். கவலைப்படாம இருங்க மக்களே. பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். வீடு நிலம் வாங்குவீர்கள்.
    சார்வரி புத்தாண்டில் சந்தோஷமாக இருப்பீங்க மக்களே. உங்களுக்கு எல்லாமே இருந்தும் அதை அனுபவிக்க முடியலையேன்ன ஃபீல் பண்ணுவீங்க. அலைச்சல் அதிகமாக இருக்கும். நேரத்துக்கு சாப்பிட முடியாது அதைத்தவிர வேற எந்த பிரச்சினையும் உங்களுக்கு இல்லை.

    ரிஷபம்

    ரிஷபம்

    ரிஷபம் ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த சார்வரி புத்தாண்டில் அஷ்டமத்து குரு ஆட்டிப்படைக்கும் என்றாலும் உங்க குடும்ப ஸ்தானத்திற்கும் உங்க ராசிக்கும் குரு பார்வை கிடைக்கிறது என்றாலும் உங்களுக்கு பணப்பிரச்சினை வரலாம் பணத்தை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். விரைய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் உங்களுக்கு நிறைய செலவுகள் வரலாம். பணத்தை வங்கியில போடலாமா? அப்படியே போட்டாலும் பணம் பத்திரமாக இருக்குமா என்று யோசிப்பீங்க என்ன பண்றது பாக்ய சனி பதமா இதமா நிறைய கொடுப்பார். உங்க ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் கொரோனோ வைரஸ் எல்லாம் உங்க கிட்டயே வராது ஆனா குளிர்ச்சியான பொருட்கள், காரமான பொருட்களை சாப்பிடாதீங்க.

    மிதுனம்

    மிதுனம்

    மிதுனம் ராசிக்காரங்களே, உங்களுக்கு சார்வரி வருடத்தில அஷ்டமத்து சனி பதற அடிக்குதா? பயப்படாதீங்க. உங்க பொருளாதார நிலைமை ஒன்னும் பெருசா சொல்லிக்கிற மாதிரி இல்லைங்க. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலையேன்னு ஃபீல் பண்ணுவீங்க. யாருக்கும் கடன் வாங்கி கொடுக்காதீங்க ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. டெபாசிட்ல போட்ட பணத்தை எடுத்து நகை ஏதாவது வாங்கி வச்சிக்கங்க ரொம்ப நல்லது. உங்க உங்க உடல் நிலையில ஏதோ பெரிய நோய் இருக்கிற மாதிரி ஃபீல் பண்ணுவீங்க. ரொம்ப சோர்வாக இருப்பீங்க. மருத்துவ செலவுகள் வந்து உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்.

    கடகம்

    கடகம்

    கடகம் ராசிக்காரர்களுக்கு கண்டச்சனி நிறைய கவலையைக்கொடுக்குது. பணம் வரவு செலவு ஏற்ற இறக்கமாவே இருக்கும். குருவும் குதர்கமான இடமான ஆறாம் வீட்டில இருக்கிறார். இது கடனுக்கான இடம். நிறைய கடன் கிடைக்கும். கேட்ட இடத்தில கடன் கிடைக்குதேன்னு வாங்கி போடாதீங்க அப்புறம் ஜென்மத்துக்கு அடைக்க முடியாது மக்களே. இருக்கிற பணத்தை பெருசா முதலீடு எதுவும் பண்ணாதீங்க இப்போதைக்கு பங்குச்சந்தை பக்கம் எட்டிக்கூட பார்க்காதீங்க நல்லதில்லை. உங்க ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க நேரத்துக்கு சாப்பிடுங்க எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

    சிம்மம்

    சிம்மம்

    சிம்ம ராசிக்காரங்களே, இந்த சார்வரி வருடத்தில உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. உங்க பணம் பாக்கெட்டை விட்டு எங்கேயும் போகாது. பணம் எங்கேயிருந்து வருது எப்படி வருதுன்னு தெரியாது ஆனால் கண்டிப்பாக வரும். சொத்து சேர்க்கை அதிகமாக இருக்கும். பேங்க்ல போட்ட பணத்தை பத்தி கவலையே படாதீங்க உங்களுக்கு திரும்ப வரும். உங்க உடல் ஆரோக்கியத்தில நீங்க கவனமாக இருக்கணும் காரணம் சனி ஆறாம் வீட்டில இருக்கார். கூடவே குருவும் ஆறாம் வீட்ல அமரப்போகும் சில நேரங்களில் சின்னச் சின்ன உடல் உபாதைகள் எட்டிப்பார்க்கும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+