எந்த ராசிக்காரங்க இன்றைக்கு மவுன விரதம் இருக்கணும் தெரியுமா? - இன்றைய ராசிபலன்
சென்னை: புரட்டாசி 03 ஆம் தேதி புதன்கிழமை, தசமி திதி இரவு 10.40 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. பூராடம் நட்சத்திரம் காலை 10.35 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் அமிர்தயோகம். இன்று கெஜலட்சுமி விரதம். மகாலட்சுமியை வணங்க நன்மைகள் நடக்கும். இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்குப் பலன்களைப் பார்க்கலாம்.
இன்றைய தினம் கடகத்தில் ராகு, கன்னியில் சூரியன் புதன், துலாமில் குரு, சுக்கிரன், தனுசு ராசியில் சனி, சந்திரன், மகரம் ராசியில் கேது செவ்வாய் என இன்றைய கிரக நிலை அமைந்துள்ளது.
ரிஷபம்,தனுசு ராசிக்காரர்கள் மாலை வரையும், மிதுனம், மகரம் ராசிக்காரர்கள் இன்று மாலை முதல் இரண்டு நாட்களுக்கு மவுன விரதம் இருப்பது நல்லது.

மேஷம்:
ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். மாலைக்கு மேல் 10வது வீட்டிற்கு நகர்கிறார். இன்றைய தினம் கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மனம் விட்டு பேசுவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உடல் நிலை சீராகும். புத்துணர்ச்சி பெருகும் நாள். ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 5.

ரிஷபம்:
எட்டாவது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். மாலைக்கு மேல்இன்றைக்கு மாலை வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரு விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும் ஜாக்கிரதையாக வைத்துக்கொள்ளவம். மாலைவரை நிதானமாக இருப்பது நல்லது. ராசியான நிறம் சிவப்பு, ராசியான எண் 4.

மிதுனம்:
ஏழாவது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. நினைத்தது நிறைவேறும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் சந்தோஷம் அதிகரிக்கும். சில நேரம் வேற்று மதத்தவர் உதவுவார். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். மாலைக்கு மேல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மவுன விரதம் இருக்கவும். வீண் வாக்கு வாதத்தை தவிர்க்கவும், ஆலய வழிபாடுகள் மன அமைதியைக் கொடுக்கும். ராசியான நிறம் கரும்பச்சை, ராசியான எண் 5.

கடகம்:
ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் சஞ்சரிக்கிறார். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிறு சிறு நோய்கள் எட்டிப்பார்க்கும். திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். ராசியான எண் 8, ராசியான நிறம் இளம் பச்சை.

சிம்மம்:
ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும் நாளாகும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். அலுவலகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். கனவு நனவாகும் நாள். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 1

கன்னி:
ராசிக்கு 4 வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார் அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாய் வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். அலுவலகத்திலும் பிரச்சினைகள் தீரும் ராசியான நிறம் இளம் சிவப்பு, ராசியான எண் 2.

துலாம்:
ராசிக்கு 3வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். செய்யும் முயற்சிகள் கைகூடும். இளைய சகோதரர்கள் வழியில் நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் உங்களின் வீடு தேடி வருவார்கள். இன்றைக்கு தைரியம் கூடும் நாள். ராசியான நிறம் சிவப்பு, ராசியான எண் 6.

விருச்சிகம்:
ராசிக்கு 2வது வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். பணவரவு அதிகரிக்கும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். சில வேலைகளை விட்டுக் கொடுப்பீர்கள். வெளி வட்டாரத்தில் உங்களின் மதிப்பு கூடும். கடன் வாங்கிய பணத்தை திருப்பித் தருவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மனநிறைவான நாள். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 4.

தனுசு:
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்.குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராடவேண்டியிருக்கும். நீங்கள் நகைச்சுவைக் காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. அலுவலகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் முன்னேற்றங்கள் உண்டாகும். ராசியான நிறம் இளம் மஞ்சள், ராசியான எண் 3.

மகரம்:
ராசிக்கு 12வது வீட்டில் சஞ்சரிக்கும் சந்திரன் மாலையில் உங்கள் ராசிக்குள் நுழைகிறார். அநாவசியச் செலவுகளை குறைக்கவும். வீண் விரைய செலவுகள் எட்டிப்பார்க்கும் இதனால் கையிருப்பு குறைந்து போகும். குடும்பத்தில் சின்ன சின்ன வாக்கு வாதங்கள் வந்து நீங்கும். மாலைக்கு மேல் சகோதர வகையில் அலைச்சல் உண்டு. உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். நண்பர்களின் உதவியால் பிரச்சனைகள் ஓரளவு குறையும். ராசியான நிறம் நீலம், ராசியான எண் 2.

கும்பம்:
ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் உள்ள சந்திரனால் நன்மைகள் நடைபெறும். பணம் வரவு அதிகரிக்கும். பழைய கடனில் ஒருபகுதியை கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழும், கௌரவமும் கூடும் நாள். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 3.

மீனம்:
ராசிக்கு 10வது வீடான தொழில் ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர், நண்பர்கள் வகையில் லாபம் கிடைக்கும். இன்றைக்கு உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். ராசியான நிறம் இளம்பச்சை, ராசியான எண் 2.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications