மகா சிவராத்திரி : வியாழக்கிழமையில் மகாசிவராத்திரி விரதம் இருந்தால் என்னென்ன சிறப்புகள் தெரியுமா
மகா சிவராத்திரி மார்ச் 11ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. வியாழக்கிழமையும் மகா சிவராத்திரியும் இணைந்த அற்புதமான நன்னாளில் சிவபெருமானை விரதமிருந்து வணங்கினால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சென்னை: வியாழக்கிழமை குருவுக்கு உகந்த தினம். இந்த நாளில் மகாசிவராத்திரி விரதம் இருந்து ஞானகுருவான சிவபெருமானை அபிஷேகம் செய்து வணங்கினால் ஏழேழு ஜென்மங்களில் ஏற்பட்ட பாவங்கள் விலகும் என்று ஆன்மீக குருமார்கள் கூறியுள்ளனர்.
அன்னை பார்வதிக்கு உகந்தது நவராத்திரி ஒன்பது நாட்கள் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். சிவனுக்கு உகந்தது சிவராத்திரி. மாசி மாதம் மகா சிவராத்திரி பண்டிகை சிவ ஆலயங்களில் நான்கு கால பூஜைகளுடன் விடிய விடிய அபிஷேகம், ஆராதனைகள் என களைகட்டும்.

இந்த ஆண்டு மாசி மகாசிவராத்திரி விழா வரும் 11ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பகிறது. நாடு முழுவதும் அனைத்து சிவ ஆலயங்களிலும் நான்கு கால பூஜைகள் நடைபெறும். நாளை வியாழக்கிழமை அதிகாலையில் திறக்கப்படும் கோவில் நடை மறுநாள் வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை அடைக்கப்படாது என பல ஆலயங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமையில் சிவனை வழிபடுவது சிறப்பு. அதுவும் மகாசிவராத்திரி நாள் வியாழக்கிழமை வருவதால் ஞானகுருவாக போற்றப்படும் சிவபெருமானை அபிஷேகம் செய்து வழிபட்டால் பலவித யோகங்களும் கிடைக்கும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்சினை விலகும். நோய் நொடிகள் நீங்கும்.
சிவபெருமானின் லிங்கத்திருமேனிக்கு பால், தயிர், திரவியப் பொடி, அரிசிமாவு, தேன், விபூதி, சந்தனம், நெல்லிப்பொடி முதலான அபிஷேகப் பொருட்களை வாங்கிக்கொடுக்கலாம். சிவனை அலங்கரிக்க வில்வம், செவ்வரளி, மல்லி, முல்லை முதலான மலர்களை வாங்கிக் கொடுக்கலாம். மனதில் நிம்மதியும் குடும்பத்தில் சந்தோஷமும் அதிகரிக்கும்.
சிவ ஆலயத்தில் இரவு நேரங்களில் நடைபெறும் பூஜைகளை தரிசனம் செய்தால் முன்ஜென்ம பாவங்கள் விலகும். நமச்சிவாய மந்திரத்தை நாள்முழுவதும் சொல்லிக்கொண்டிருக்கலாம். விடிய விடிய கண்விழித்து அபிஷேக ஆராதனைகளை தரிசனம் செய்பவர்களுக்கு கர்மவினைகள் நீங்கும். எதுவுமே வாங்கித்தர வசதியில்லையே என்று ஏங்க வேண்டாம். வில்வம் வாங்கிக் கொடுங்கள் பல பிறவிக்கும் புண்ணியம் கிடைக்கும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications