Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிப்ரவரி மாத ராசி பலன் 2021: பணவரவும், அதிர்ஷ்டமும் எந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும்

பிப்ரவரி மாதத்தில் நவகிரகங்களில் முக்கிய கிரகங்கள் மகரம் ராசியில் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் வரையிலான 6 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன், பரிகாரம் என்ன என்று பார

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிப்ரவரி மாதத்தில் சூரியன் மகரம் ராசியிலும் கும்பம் ராசியிலும் பயணம் செய்கிறார். புதன் கும்பம் ராசியில் வக்ரமடைகிறார். செவ்வாய் மேஷம் ராசியில் இருந்து இடப்பெயர்ச்சியாகி ரிஷபம் ராசியில் உள்ள ராகு உடன் இணைகிறார். பிப்ரவரி மாதம் முதல் 13 நாட்கள் மகரம் ராசியில் சூரியன், சனி, குரு, சுக்கிரன், புதன் இணைந்துள்ளன. பிப்ரவரி 11ஆம் தேதி மகரம் ராசியில் சந்திரனும் இணைவதால் ஆறு கிரகங்கள் ஒரே ராசியில் கூட்டணி அமைக்கின்றன. கேது விருச்சிகம் ராசியில் பயணம் செய்கிறார். இந்த கிரகப் பெயர்ச்சி கூட்டணியால் துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிக்காரர்களில் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் வரும் என்று பார்க்கலாம்.

பிப்ரவரி மாதத்தில் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் 13ஆம் தேதி சூரியன் கும்பம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 21ஆம் தேதி செவ்வாய் ரிஷபம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரன் மகரம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

பிப்ரவரி மாதத்தில் மகர ராசியில் ஆறு கிரக சேர்க்கை உள்ளது. இந்த கிரகங்களின் சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு சாதகத்தையும் சில ராசிக்காரர்களுக்கு பாதகத்தையும் ஏற்படுத்தும். துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களில் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

துலாம்

துலாம்

பிப்ரவரி மாதத்தில் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் 5 கிரகங்கள் இணைந்துள்ளது. ராசிக்கு 10ஆம் வீட்டில் கிரகங்களின் பார்வை விழுகிறது. நல்ல விசயங்கள் நிறைய நடைபெறும். அர்த்தாஷ்டம சனி உங்களுக்கு நிறைய தடைகளை ஏற்படுத்துகிறது. வக்ரமடைந்த புதன் நான்காம் வீட்டில் இணைகிறார். பிப்ரவரி 10ஆம் தேதி ஆறு கோள்கள் ஒன்றாக இணைகின்றன. துலாம் ராசிகாரர்களுக்கு சனி சங்கடம் தருவதில்லை காரணம் சனி உங்கள் ராசியில் உச்சமடைகிறார். சனியின் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைவது பலத்தை அதிகரிக்கும். செவ்வாய் பார்வை ஏழாம் வீட்டில் இருந்து உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு சந்தோஷத்தை அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் நிதானமாக உங்கள் செயலை செய்ய வேண்டும். ராகு கேதுவினால் சில தடைகள் ஏற்பட்டாலும் அதையும் மீறி கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். 22ஆம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைவது சிறப்பு. தொழில் ரீதியான முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வயிறு தொடர்பான பிரச்சினை, அலர்ஜி வரலாம் கவனம் தேவை. விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய மாதம். இந்த மாதம் விடா முயற்றி விஸ்வ ரூப வெற்றியை கொடுக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே, உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ராசியில் கேது சஞ்சரிக்கிறார். ஏழாம் வீட்டில் ராகு இருக்கிறார். மூன்றாம் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைகின்றன. சனி, சூரியன், புதன், சுக்கிரன், குரு ஆகிய கிரகங்கள் இணைவது பல நன்மைகளை கொடுக்கும். திடீர் திருப்பங்களை ஏற்படுத்தும். சனிபகவான் உங்களுக்கு ஏற்படும் சங்கடங்களை நீக்குவார். சகாயங்கள் ஏற்படும். வேலையில் இருந்த பிரச்சினைகள் சிக்கல்கள் நீங்கும். வெளியூர்களில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். பலவீனங்கள் நீங்கி பலம் அதிகரிக்கும். 13ஆம் தேதிக்கு மேல் சூரியன் இடப்பெயர்ச்சியாகி நான்காம் வீட்டிற்கு நகர்கிறார். பத்தாம் வீட்டில் சூரியன் பார்வை விழுகிறது. சுக்கிரனும் இடப்பெயர்ச்சியாகி கும்பம் ராசிக்கு நகர்கிறார். வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். இந்த கால கட்டத்தில் மனதில் இருந்த எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். ஏழாம் வீட்டில் உள்ள ராகு உடன் செவ்வாய் இணைவது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். அரசு தொடர்பான வேலைக்கு முயற்சி செய்யலாம். கூட்டுத் தொழில் லாபத்தை கொடுக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி சந்தோஷம் அதிகரிக்கும்.

தனுசு

தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே. இந்த மாதம் உங்களின் சொல்வாக்கும் செல்வாக்கு அதிகரிக்கும் மாதம் இரண்டாம் வீட்டில் கிரகங்கள் இணைந்துள்ளன. தன லாபம் அதிகரிக்கும். பொருளாதார ரீதியான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.கடன் பிரச்சினை நீங்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். சவால்கள் அதிகரிக்கும். இரண்டாம் வீட்டில் குரு சஞ்சரிப்பதால் பண பிரச்சினை நீங்கும். சுக ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் சுகங்கள் அதிகரிக்கும். உங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். ஆறாம் வீட்டில் ராகு, 12ஆம் வீட்டில் கேது கிரகங்கள் சஞ்சரித்தாலும் பிரச்சினை இல்லை. போராட்டங்கள் நீங்கும். வேலையில் இடமாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த மாதம் நினைத்த இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். மாத பிற்பகுதியில் சூரியன் இடமாற்றம் அடைகிறார் வேலையில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். சுக்கிரன் இடமாற்றம் அடைந்து மூன்றாம் வீட்டிற்கு நகரும் போது முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இந்த மாதம் சவால்களும் சாதனைகளும் நிறைந்த மாதமாக அமையும். கிரகங்களின் கூட்டணி பார்வைகளால் சந்தோஷம் அதிகரிக்கும்.

மகரம்

மகரம்

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம ராசியில் நான்கு கிரகங்கள் இணைந்துள்ளன. பிப்ரவரி 10ஆம் தேதிக்கு மேல் ஆறு கிரகங்கள் உங்கள் ராசியில் இணைகின்றன. சனியின் வீட்டில் கிரகங்கள் இணைந்திருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். முதல் வீட்டில் ஆறு கிரகங்கள் இணைவதால் சில சாதகங்களும் பாதகங்களும் ஏற்படும். திருமணம் சுப காரிய முயற்சிகளை தொடங்கலாம். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டின் மீது விழுவதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். சனி வீட்டில் சூரியனும் சனியும் இணைந்திருப்பதால் அரசு வேலைக்காக இப்போது முயற்சி செய்ய வேண்டாம். நிறைய தடைகள் வரலாம் என்பதால் பிப்ரவரி 13 வரை காத்திருக்கவும். வங்கிக்கடன் வாங்க முயற்சி செய்யலாம். மாத பிற்பகுதியில் உங்கள் ராசியில் உள்ள சூரியன்,சுக்கிரன் இடப்பெயர்ச்சியாகி கும்பம் ராசிக்கு நகர்கின்றனர். வீடு மாறலாம், வேலையில் திடீர் மாற்றங்கள் வரும். பண வரவு அதிகரிக்கும். வங்கி சேமிப்பு உயரும்.

கும்பம்

கும்பம்

சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் கிரகங்கள் கூடியுள்ளன. ஏழரை சனியில் விரைய சனி காலமாக உள்ளது. இது விபரீத ராஜயோக காலமாகும். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். மாத முற்பகுதியில் ஆறு கிரகங்கள் கூடியுள்ளன. சுப விரைய செலவுகள் அதிகமாகும். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். புதன் உங்கள் ராசியில் இருந்து வக்ரமடைந்து பின்னோக்கி நகர்கிறார். குருவின் பார்வையால் சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். மூன்றாம் வீட்டில் உள்ள செவ்வாயின் சஞ்சாரம் தைரியம், தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் உதவி அதிகரிக்கும். சனிபகவானின் சஞ்சாரம் செயலில் நிதானத்தை கொடுக்கும். சூரியன் மாத பிற்பகுதியில் உங்கள் ராசிக்கு வருகிறார். சுக்கிரனும் மாத இறுதியில் உங்கள் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். சுப காரியம் செய்வதில் இருந்த தடைகள் நீங்கும். புதிய வேலைக்காக முயற்சி செய்யலாம். அறிமுகம் இல்லாத நபர்களை நம்பி பணம் கொடுக்க வேண்டாம். எந்த ஒரு விசயத்திலும் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் தெளிவான தைரியமான முடிவுகளை எடுப்பது அவசியம். கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தடைகள் நீங்கி தைரியம் அதிகரிக்கும் மாதமாக அமைந்துள்ளது.

மீனம்

மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே, பிப்ரவரி மாதத்தில் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11வது வீட்டில் கிரகங்கள் கூடியுள்ளன. தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கலாம். உழைப்பிற்கேற்ற வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். மனதில் இருந்த மிக முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். இந்த மாதம் லாப கரமான மாதம். பிப்ரவரி 5ஆம் தேதி புதன் வக்ரமடைந்து லாப வீட்டில் இணைகிறார். 9ஆம் தேதி சந்திரன் 5 கிரகங்களுடன் இணைகிறார். திருமண பேச்சுவார்த்தை சுபமாக முடியும். பிள்ளைகளின் கல்வி, வேலை வாய்ப்பில் வெற்றிகரமாக முடியும். வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும். ராகுவின் சஞ்சாரம் சகோதர சகோதரிகள் மூலம் லாபம் அதிகரிக்கும். வெளி வட்டார தொடர்புகளால் லாபம் கிடைக்கும். மாத பிற்பகுதியில் சூரியன், சுக்கிரன் 12ஆம் வீட்டில் வருவதால் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். இந்த மாதம் வேலையில் வெற்றி கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். அரசு துறை வேலைக்கு முயற்சி செய்யலாம். அரசியல்வாதிகளுக்கு இது லாபகரமான யோகமான மாதமாக அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+