பிப்ரவரி மாத ராசி பலன் 2023: வீடு தேடி வரும் அதிர்ஷ்டம்..2 ராசிக்காரர்களுக்கும் ஜாக்பாட்தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

2023ஆம் ஆண்டின் இரண்டாவது மாதம் பிப்ரவரி மாதம். இந்த மாதத்தில் நவ கிரகங்களின் பயணமும் பார்வையும் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறது. சில ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது. பிப்ரவரி மாதத்தில் சூரிய பகவான் மகர ராசியில் பாதி நாட்களும் கும்ப ராசியில் 15 நாட்களும் பயணம் செய்வார். சுக்கிரன் கும்ப ராசியிலும் 15ஆம் தேதிக்கு மேல் மீன ராசியில் உச்சம் பெற்றும் பயணம் செய்வார். புதன் மகர ராசியிலும் மாத இறுதியில் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். செவ்வாய் மாதம் முழுவதும் ரிஷப ராசியில் பயணம் செய்வார். இந்த கிரகங்களின் பயணத்தால் அதிஷ்ட மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் யார் என பார்க்கலாம். மேஷம், ரிஷப ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்றும் பார்க்கலாம்.

February month rasi palan 2023 tamil: February matha rasi palan for Mesham and Rishabam

மேஷம்

பிப்ரவரி மாதத்தில் உங்கள் ராசிக்கு கிரகங்கள் சாதகமாக உள்ளது. ராசியில் ராகு, இரண்டாம் வீட்டில் செவ்வாய், ஏழாம் வீட்டில் கேது, ஒன்பதாம் வீட்டில் புதன், பத்தாம் வீட்டில் சூரியன், லாப ஸ்தானத்தில் சுக்கிரன்,சனி, விரைய ஸ்தானமான 12வது வீட்டில் குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இந்த மாதம் லாப வீட்டில் ராஜ கிரகங்கள் இணைவதால் உங்களுக்கு அற்புதமான யோக பலன்கள் கிடைக்கப்போகிறது.

வேலையில் அற்புதமாக இருக்கும் பதவியில் மாற்றம் வரும். வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். உயர்பதவி தேடி வரும். வேறு வேலைக்கு முயற்சி செய்யலாம் நிச்சயம் கிடைக்கும். உயரதிகாரிகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். தொழில்,வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பண வரவு அதிகமாக இருக்கும்.

February month rasi palan 2023 tamil: February matha rasi palan for Mesham and Rishabam

15ஆம் தேதியன்று சூரியன் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி சனியோடு இணைகிறார். அதே நேரத்தில் சுக்கிரன் இடப்பெயர்ச்சியாகி மீன ராசியில் குரு உடன் இணைந்து உச்சம் பெற்று பயணம் செய்யப்போகிறார். விரைய ஸ்தானத்தில் சுப கிரகங்கள் கூடி வந்துள்ளதால் நிறைய பண வரவும் சுப செலவுகளும் ஏற்படும். மகனுக்கோ மகளுக்கோ வரன் பேசி முடிவு செய்வீர்கள். தை மாதத்தில் திருமணத்திற்காக வரன் பார்க்கலாம்.

புதன் பாக்ய ஸ்தானம் தொழில் ஸ்தானம் என பயணம் செய்கிறார். வீடு மாற்றம் உண்டாகும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு அற்புதமான யோகம். பல வழிகளிலும் பணம் வரும். உங்களின் வளர்ச்சி அதிகரிக்கப்போகிறது. அதிகார பதவிகள் தேடி வரப்போகிறது. குடும்ப வாழ்க்கை குதூகலமாக இருக்கும். காதல் விவகாரங்கள் கை கொடுக்கும் பெற்றோர் ஆசியுடன் திருமணம் கைகூடும்.

இல்லத்தரசிகளுக்கு மன நிம்மதி நிறைந்த மாதம். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நகைகள், ஆடை ஆபரணங்கள் சேர்க்கை ஏற்படும். வீட்டிற்கு விருந்தினர்கள் அதிகம் தேடி வருவார்கள். மாணவர்களுக்கு அற்புதமான கால கட்டம். உயர்கல்விக்காக நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்கும். அரசு வேலைக்காக போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். மன நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்த மாதமாக பிப்ரவரி மாதம் அமைந்துள்ளது.

February month rasi palan 2023 tamil: February matha rasi palan for Mesham and Rishabam

ரிஷபம்

பிப்ரவரி மாதம் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டமும் அற்புதங்களும் நிகழக்கூடிய மாதமாக அமைந்துள்ளது. புதன், சூரியன் பாக்ய ஸ்தானத்தில் இணைவது யோகம். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 15ஆம் தேதிக்கு மேல் குரு உடன் இணைந்து லாப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் நிறைய லாபம் கிடைக்கப்போகிறது. எதிர்பார்க்காத அதிர்ஷ்டம் வீடு தேடி வரப்போகிறது.

வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு ஏற்றமாதிரியான சூழ்நிலை மாறும். உங்களுக்கு பிடித்தமான இடத்தில் நல்ல வேலை கிடைக்கும். புரமோசன் கிடைக்கும். புதிய வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு கை நிறைய நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். கடந்த காலங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் பிரச்சினைகள் நீங்கும்.

February month rasi palan 2023 tamil: February matha rasi palan for Mesham and Rishabam

கணவன் மனைவி இடையேயான நெருக்கமும் காதல் உணர்வுகளும் அதிகரிக்கும். சொந்த பந்தங்களுடன் கூடி மகிழ்வீர்கள். காதலிப்பவர்களுக்கு ஏற்ற மாதம். தடைகளைத் தாண்டி காதல் வெற்றி பெறும். நினைத்த காரியம் நிறைவேறப்போகிறது. சொத்து சேர்க்கை ஏற்படும். வீடு, வண்டி, வாகன சேர்க்கை ஏற்படும்.

இல்லத்தரசிகள் விருந்து விஷேசம் என்று உற்சாகமாக வலம் வருவீர்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். வேலைகளை புத்துணர்ச்சியுடன் செய்வீர்கள். மாணவர்கள் விரும்பிய கல்லூரிகளில் விரும்பிய பாடத்தில் சேருவீர்கள். தேர்வுக்காக உற்சாகமாக தயாராவீர்கள். பிப்ரவரி மாதத்தில் நம்பிக்கையுடன் தைரியத்துடனும் ரிஷப ராசிக்காரர்கள் வலம் வருவீர்கள். இந்த மாதம் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

February month rasi palan 2023 tamil: February matha rasi palan for Mesham and Rishabam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+