பிப்ரவரி மாத ராசி பலன் 2024: தொட்டது பொன்னாகும்.. 2 ராசிக்காரர்களுக்கு திடீர் ஜாக்பாட்
சென்னை: பிப்ரவரி மாதத்தில் சூரியன் செவ்வாயுடனுடன் பாதி நாட்களும் சனியோடு பாதி நாட்களும் பயணம் செய்வார். மகரத்திலும் கும்பத்திலும் புது கூட்டணி உருவாகிறது. கிரகங்களின் புது கூட்டணியால் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கும் கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கும் பிப்ரவரி மாதத்தில் என்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சிம்மம்: உங்கள் ராசி நாதன், சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று 6ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பஞ்சம ஸ்தானமான 5ஆம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் பல்வேறு வகையில் முன்னேற்றங்களை அடைவீர்கள். சுக்கிரனும் புதனும் இடப்பெயர்ச்சியாகி புது கூட்டணி உருவாகும் போது தாராள தனவரவு உண்டாகும். பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் சற்று குறையும். தேவைகள் பூர்த்தியாகும்.

கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தை குறைப்பது, குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. உடல் நிலையில் சிறுசிறு ஆரோக்கிய குறைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை குறைப்பதன் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றமான நிலை இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நிம்மதி குறைவு ஏற்படும் கவனம் தேவை. வேலையில் இருப்பவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் பிரச்சினைகள் எளிதில் சமாளித்து விடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.
கன்னி: உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் செவ்வாய் உடன் சூரியன் பயணம் செய்கிறார். கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். 13ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 6ஆம் வீட்டில் சனியுடன் சூரியன் பயணம் செய்ய இருப்பதால் எதிரிகள் பிரச்சினை முடிவுக்கு வரும். தொழில் போட்டிகளை எளிதில் சமாளிப்பீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடி வரும்.
தொழில் வியாபாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியைப் பெறுவீர்கள். தொழிலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. ஜாமீன் கையெழுத்து போட்டு கடன் வாங்கி தர வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். வேலையில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். சிலரின் வெளிநாட்டு கனவு நிறைவேறும்.












Click it and Unblock the Notifications