பார் புகழும் பழனியில் பங்குனி உத்திரத்திருவிழா கொடியேற்றம் கோலாகலம்
முருகப்பெருமானில் அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் பங்குனி உத்திரத்திருவிழா கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.
பழனி: பங்குனி உத்திரத்திருவிழா பழனி முருகன் ஆலயத்தில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். பங்குனி உத்திரத்தன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெறும்.
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3ஆம் படைவீடான பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் தைப்பூச திருவிழாவில் பாதயாத்திரையாகவும், பங்குனி உத்திர திருவிழாவில் தீர்த்தக்காவடி எடுத்தும் பக்தர்கள் வருவது சிறப்பு அம்சமாகும். பங்குனி, சித்திரை மாதங்களில் பழனி முருகனுக்கு பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி சுமந்து வந்து அபிஷேகம் செய்து வழிபடுவர்.

கொடியேற்றம்
இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா பழனி முருகன் கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடியில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை, அஸ்திர தேவர் உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று காலை திருஆவினன்குடி கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிப்பட பூஜை நடந்தது.

வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி
முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் என 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் கொடியேற்றத்தை காண முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வந்து சப்பரத்தில் எழுந்தருளினார். அதையடுத்து அஸ்திர தேவர், விநாயகர் சிலை முன்பு மயூர யாகம், வாத்திய பூஜைகள் நடைபெற்றது.

தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம்
அதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரளாக இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா... என சரண கோஷம் எழுப்பினர். பின்னர் ஓதுவார்கள் திருமுறை பாடியதை அடுத்து கொடிமரம், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது.

சிறப்பு அபிஷேக ஆராதனை
திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் இன்று பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின் மூலவர் சன்னதியில் உள்ள விநாயகருக்கு காப்புக்கட்டு நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சண்முகர், உற்சவர், துவார பாலகர்கள், மயில்வாகனம் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலில் சோமாஸ் கந்தர், சிவன், பெரியநாயகி அம்மன், நடராஜர், சிவகாமி அம்மன் ஆகியோருக்கு காப்புகட்டு நடைபெற்றது.

பங்குனி உத்திர தேரோட்டம்
பகல் 12.30 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் அடிவாரம் பட்டக்காரர் மடத்தில் எழுந்தருளினார். அங்கு முதல் நாள் மண்டகப்படி நடைபெற்றது. திருவிழாவின் 6ஆம் நாளில் திருக்கல்யாணமும், பங்குனி உத்திர நாளில் தேரோட்டமும் நடைபெறுகிறது. தைப்பூச தேரோட்டம் கோவிலுக்குள் நடைபெற்ற நிலையில் இந்த தேரோட்டம் கிரிவல வீதிகளில் நடைபெற வாய்ப்புள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications