தங்கம் வாங்க நல்ல நேரம்..எந்த நாளில் தங்கம் வாங்கினால் வீட்டிலேயே தங்கும் தெரியுமா
தங்கம் எல்லோருக்கும் சேர்ந்து விடாது தங்கம் வாங்கவும் ஜாதகத்தில் கிரக அமைப்பு நன்றாக இருக்க வேண்டும். பொன்னவன் எனப்படும் குரு கிரகம் நன்றாக இருந்தால் மட்டுமே தங்கத்தை வாங்கவோ சேமிக்கவோ முடியும்.
சென்னை: தங்கத்தின் விலை ஒருசவரன் 40 ஆயிரத்தை எட்டியுள்ளது. ஏழைகளுக்கு தங்கம் எட்டாக்கனியாகி வரும் நிலையில் தங்கத்தை முதலீட்டிற்காக வாங்கி சேமிப்பவர்கள் சேமித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். குரு அருள் இருந்தால் தங்கம் வாங்கும் யோகம் அமையும். தங்கம் அணிவது அழகிற்காக மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.
தங்கம் விலை உயருவதற்கு உக்ரைன் ரஷ்யா போர் காரணம் என்றாலும் நகை உயர்விற்கு ஜோதிடத்திற்கும் நிச்சயம் தொடர்பு உள்ளது. கும்ப ராசியில் குருவின் நேரடி சஞ்சாரம் தங்கம் விலையை உயர வைத்துள்ளது. ஏழைகள் தங்கம் என்ற வார்த்தை எழுதி மட்டுமே பார்க்கும் காலம் வந்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் தங்கம் வாங்கும் யோகம் இருந்தால் நிச்சயமாக தங்கம் வாங்கலாம் என்று ஜோதிடர்கள் சொல்லியுள்ளனர். தங்கம் அழகுக்காக மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் ஏற்றது என்று கூறும் ஜோதிடர்கள் சிறுக சிறுக தங்கத்தை சேமித்து உடம்பில் படுமாறு தங்கத்தை அணியுங்கள் என்கின்றனர்.
தங்கத்தை இடுப்புக்கு கீழே அணிவதில்லை. காது, மூக்கு, கழுத்து என நகைகளை அணிவதன் மூலம் அது உடம்பில் உள்ள முக்கிய புள்ளிகளை தொடுவதன் மூலம் உடம்பில் தேஜஸ் அதிகரிக்கிறது. இதன் மூலம் தங்கம் அழகை தருவதோடு ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது என்பதை நமது முன்னோர்கள் உணர்ந்து ஆபரணங்களை அணியத் தொடங்கியுள்ளனர்.

குரு அருள் தேவை
தங்கம் எல்லோருக்கும் சேர்ந்து விடாது தங்கம் வாங்கவும் ஜாதகத்தில் கிரக அமைப்பு நன்றாக இருக்க வேண்டும். பொன்னவன் எனப்படும் குரு கிரகம் நன்றாக இருந்தால் மட்டுமே தங்கத்தை வாங்கவோ சேமிக்கவோ முடியும். தங்கத்தை விரும்பாத பெண்கள் இருக்கமாட்டார்கள். தங்கத்தின் மீதான ஆசையும் மோகமும் நாளுக்கு நாள் அதிகரிப்பதனால்தான் தினம் ஒரு நகைகக்கடைகள் நாடு முழுவதும் திறக்கப்படுகின்றன.

தங்கத்தின் மீதான ஆசை
தங்கத்தின் மீதான நமது ஆர்வம், 5000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகத்தின்போது தொடங்கியதாக கூறப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் குருபகவான் லக்னத்திலும் 4,7,10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் இருக்க வேண்டும். அதே போல 1,5,9 ஆகிய திரிகோண வீடுகளிலும் ஏதாவது ஒன்றில் இருந்தால் அவர்களின் வீடுகளில் தங்கம் நிரந்தரமாக இருக்கும். மறைவு ஸ்தானங்களில் இருக்கக் கூடாது.

தங்கம் வாங்கும் யோகம்
ஜாதகத்தில் குரு கிரகம் புதன், சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களின் சாரம் பெற்று இருந்தாலும் அடிக்கடி தங்கம் வாங்கும் யோகம் அந்த ஜாதகருக்கு உண்டு என பண்டைய ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஜென்ம லக்னத்தில் இருந்து ஐந்தாம் வீட்டுக்கு அதிபதியானவர் குரு சாரம் பெற்றிருந்தாலும், லக்னத்திற்கு 5ஆம் வீட்டில் உள்ள கிரகம் லக்னத்திற்கு 2ஆம் வீட்டின் அதிபதியின் பார்வை பெற்றாலோ அல்லது 2ஆம் வீட்டில் இருந்தாலோ அந்த ஜாதகர் தங்கம் அதிகம் வாங்குபவர்கவும், அந்த தங்கத்தால் அவருக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும் எனவும் ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

தங்கம் வாங்க நல்ல நாள்
இன்றைக்கு தங்கத்தை திரி புஷ்கர யோகங்கள் அமையும் நாட்களில் வாங்கினால் அடகு கடைக்கு போகாமல் தங்கும். திரி புஷ்கர யோக அமைப்பு ஞாயிறு செவ்வாய் சனி கிழமைகளில் துவிதியை சப்தமி துவாதசி திதிகளில் விசாகம், உத்திரம், பூரட்டாதி, புனர்பூசம்,கார்த்திகை, உத்திராடம், நட்சத்திரங்களில் அதாவது மேற்கண்ட கிழமைகள் திதிகள் நட்சத்திரங்கள் மூன்றும் சேர்ந்து அமையும் நாட்கள் திரிபுஷ்கர யோகம் உள்ள நாட்கள் ஆகும். இந்த நாட்களில் தங்கம் வாங்கினால் அடகு கடைக்குப் போகாமல் வீட்டில் தங்கம் தங்கும்.

தங்கம் வாங்க நட்சத்திரம்
சுவாதி, புனர்பூசம், திருவோணம், அவிட்டம், சதயம்,ஹஸ்தம், அசுவினி,பூசம், அபிஜித்,ரோகிணி,உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி. ஞாயிறு செவ்வாய் கிழமைகளில் மேஷம் விருச்சிகம் சிம்மம் லக்கினங்களில் மேலே சொல்லப்பட்ட நட்சத்திரங்கள் உள்ள நாட்களிலும் மிருகசிரீடம் ரேவதி சித்திரை அனுஷம் நட்சத்திரங்கள் உள்ள நாட்களிலும் வாங்க அதிர்ஷ்டம் தரும்.

எப்போது வாங்கலாம் விற்கலாம்
ஒருவேளை முதலீட்டிற்காக தங்கத்தை விற்பனை செய்ய முடிவு செய்தால் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நகைகளை அடமானம் வைப்பதோ அல்லது விற்பதோ கூடாது.சுவாதி, புனர்பூசம், திருவோணம், அவிட்டம், சதயம்,மிருகசிரீடம், ரேவதி, சித்திரை,அனுஷம்,ஹஸ்தம், அசுவினி,பூசம்,அபிஜித் நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் திங்கள் வெள்ளி வியாழன் புதன் கிழமைகளில் சுப லக்கினங்களில் வாங்க நன்மை உண்டாகும். ஒரு நபரின் ஜாதகத்தில் பாப கிரகமான ராகு, சுபகிரகமான சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களுக்கும் நட்பு பெற்ற வீட்டில் ராகு, சுக்கிரன் இணைந்து இருந்தாலோ அந்த ஜாதகருக்கு கூடுதல் வருமானம் மூலம் செல்வம், நகை சேமிப்பு பெருகும்.
-
தாள்ளாடுதே தங்க சந்தை.. தாறுமாறாக விலை இருப்பது ஏன்? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கும்? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
சர்வதேச தங்க மார்கெட்டில் பூகம்பம்.. 25 ஆண்டுகளில் முதல்முறையாக தங்கத்தை விற்று தள்ளும் ரஷ்யா! -
தங்கம் ரொம்பவே ரிஸ்க்.. "இந்த" கோல்ட் பக்கமே போக வேண்டாம்.. உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்












Click it and Unblock the Notifications