Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி 2022: மீன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்த குருபகவான் - எந்தெந்த ராசிக்கு பரிகாரம்

குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு குரு பகவான் பரிகாரத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: குருபகவான் கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி ஆலங்குடி,தென் திட்டை குருபகவான் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நன்மை நடைபெறும் யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற குருபகவான் கோவில்(ஆபத்சகாயேஸ்வரர் கோவில்) உள்ளது. திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற இந்த கோவில் நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

குருபகவான் கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு குருபகவானுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை முதல்கட்ட லட்சார்ச்சனை நடைபெற்றது. குருப்பெயர்ச்சிக்கு பின்னர் ஏப்ரல் 18ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை 2-வது கட்டமாகவும் லட்சார்ச்சனையும் நடக்கிறது. குருபெயர்ச்சி விழாவுக்கு வருகை தரும் பக்தர்களின் நலன் கருதி திருவாரூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதேபோல தென் திட்டை வஷிஷ்டேஸ்வரர் ஆலயத்திலும் குரு பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.

மேஷம் விரைய குரு

மேஷம் விரைய குரு

கௌரவப் பதவிகள் தேடி வரும். எந்தவொரு காரியத்திலும் குடும்பத்தாருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுங்கள். குடும்பத்தில் சின்னச் சின்ன விஷயங்களை எல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம். கடன் பட்டாவது சொந்த வீடு கட்டுவீர்கள். புதிய வாகனங்கள் அமையவும் வாய்ப்பு உண்டு. உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அதேபோல், வீண் விரைய செலவுகள் வரும். கெளரவத்துக்காக செலவு செய்வதை நிறுத்துங்கள். வீணாக சேமிப்புகளைக் காலி செய்ய வேண்டாம்.

ரிஷபம் லாப குரு

ரிஷபம் லாப குரு

குடும்பத்தில் இருந்துவந்த சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்கும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகம் ஆவார்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிப்பீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு கிடைக்கும். பிரபலங்கள், அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். வங்கிக் கடனுதவி கிட்டும்.

மிதுனம் தொழில் குரு

மிதுனம் தொழில் குரு

அலுவலகத்தில் வேலைப்பளு கூடும். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். எந்த வேலையை முதலில் முடிப்பது என்று குழப்பமும் டென்ஷனும் இருக்கும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். எந்த விஷயங்களையும் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. அலுவலகத்தில் முக்கிய பைல்களைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம்

கடகம் பாக்கிய குரு

கடகம் பாக்கிய குரு

ஒன்பதாம் இடத்து பாக்ய குரு நிறைய நன்மைகளைத் தரப்போகிறார். குருவின் பார்வையால் குடும்பத்தில் நிலவி வந்த சண்டை, சச்சரவுகளுக்குத் தீர்வு கிடைக்கும். தள்ளிப் போன திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். வீடு களை கட்டும். பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். வழி உறவினர்களும் பக்கபலமாக இருப்பார்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள்

சிம்மம் அஷ்டம குரு

சிம்மம் அஷ்டம குரு

விபரீத ராஜயோகம் கை கூடி வரப்போகிறது. செல்வம் செல்வாக்கு கூடும்; பதவிகள் தேடி வரும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். அரசால் ஆதாயம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். பழைய சொந்தங்கள் தேடி வரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஒரளவு பணம் வரும். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். நிலம், வீடு வாங்குவீர்கள். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்.

கன்னி களத்திர குரு

கன்னி களத்திர குரு

உடலில் சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள். பஞ்சு மெத்தையில் படுத்தாலும் தூக்கமில்லாமல் தவித்தீர்களே... இனி நிம்மதியான உறக்கம் வரும். பல காலமாக முயன்றும் முடிக்க முடியாத காரியங்களை இனி முடித்துக் காட்டுவீர்கள்.
பண வரவு அதிகரிக்கும். தாம்பத்தியம் இனிக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். இருவரும் மனம் விட்டுப் பேசி புதிய முடிவுகளை எடுப்பீர்கள்.

துலாம் ருண ரோக சத்ரு குரு

துலாம் ருண ரோக சத்ரு குரு

அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் சாதாரண பிரச்னையெல்லாம் சண்டையில் போய் முடிய வாய்ப்பு இருக்கிறது. எந்த விஷயத்திலும் எவருக்கும் உறுதிமொழி தர வேண்டாம். இரவு நேரப் பயணங்களைத் தவிர்த்துவிடுங்கள். சிலநேரங்களில் ஏமாற்றங்களை உணர்வீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவுகள் வரக்கூடும்; கவனம் தேவை. தம்பதியர் இடையே விட்டுக்கொடுத்துப் போகவும்.

விருச்சிகம் பூர்வ புண்ணிய குரு

விருச்சிகம் பூர்வ புண்ணிய குரு

பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குருவினால் குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் இனி அந்நியோன்யம் பிறக்கும். மகளின் திருமணத்தைக் கோலாகலமாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல இடத்தில் மணப்பெண் அமையும். அவருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தைப் பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்துப் பங்கு கைக்கு வரும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். தாயாருக்கு இருந்த நோய் விலகும். அவருடனான மோதல்களும் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள்.

தனுசு சுக ஸ்தான குரு

தனுசு சுக ஸ்தான குரு

குருபகவான் உங்கள் சுக ஸ்தானத்தில் ஆட்சிப்பெற்று அமர்வதால், அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. சுற்றியுள்ளவர்களின் சுயரூபத்தை குருபகவான் காட்டிக் கொடுப்பார். பணத்தட்டுபாடு ஓரளவு குறையும். உயர் கல்வி- உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிவார்கள். பிள்ளைகளின் கல்யாண விஷயத்தில் அவசரப்படவேண்டாம். பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் சிக்கிக்கொள்ள வேண்டாம். எந்த சிக்கலாக இருந்தாலும் பெரியவர்களை வைத்துப் பேசி சுமுகமாக முடிக்கப்பாருங்கள். நேரம் தவறி சாப்பிடுவதையும் தவிருங்கள்.

 மகரம் தைரிய ஸ்தான குரு

மகரம் தைரிய ஸ்தான குரு

எதையும் திட்டமிட்டுச் செய்யப் பாருங்கள். ஒவ்வொரு பணியையும் இரண்டு மூன்று முறை முயன்று போராடி முடிக்கவேண்டி வரும். வாயுக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உண்டு. இளைய சகோதரர்கள் வகையில் சங்கடங்கள் வரலாம். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அவசியம்; பயணத்திலும் கவனம் தேவை. கணவன்-மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அந்நியோன்யமும் அதிகரிக்கும். தங்க நகைகளைக் கவனமாகக் கையாளுங்கள். மற்றவர்களை நம்பி முக்கிய விஷயங்களை ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது.

கும்பம் குடும்ப குரு

கும்பம் குடும்ப குரு

குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். தள்ளிப்போன சுபநிகழ்ச்சிகள் நடக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் தேடி வருவார்கள். பிரிந்த கணவன்-மனைவி ஒன்றுசேர்வார்கள். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் செல்வீர்கள். திடீர் செல்வாக்கு, யோகம், பணவரவு உண்டாகும். விஐபி வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்றுமொழியினர், மாநிலத்தவரால் ஆதாயம் அடைவீர்கள். புதிய நண்பர்களால் உற்சாகம் அடைவீர்கள். செரிமானக் கோளாறு, தூக்கமின்மை, கை கால் வலி நீங்கும். புது ஒப்பத்தங்கள் கையெழுத்தாகும். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில், இதுவரை இருந்து வந்த போராட்டம் நீங்கும்.

மீனம் ஜென்ம குரு

மீனம் ஜென்ம குரு

பொறுப்புகளும், வேலைச்சுமையும் அதிகரிக்கும். அவ்வப்போது முன்கோபம் தலைதூக்கும். எவருக்கும் வாக்குறுதி அளிக்கவேண்டாம். ஒருவேளை வாக்குறுதி அளித்தால், அதை நிறைவேற்ற முடியாமல் திணறும் நிலை ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. நீங்கள் எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள். அலைச்சலுடன் ஆதாயமும் உண்டாகும். வீடு, வாகன வசதிகள் பெருகும். மனைவியுடன் விட்டுக்கொடுத்து போவது நல்லது. சிறு சிறு விபத்துகள், வீண் செலவுகள் வந்து நீங்கும். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி உங்களுக்கு படிப்பினை தரப்போகிறது.

பரிகாரம் என்ன?

பரிகாரம் என்ன?

குரு பெயர்ச்சியால் பாதகமான பலனை அடையப்போகிறவர்கள் குரு பகவானுக்கு மிகவும் பிரியமான தானியமான கொண்டைக்கடலையை தானம் செய்வதால் எதிர்மறை கர்ம தாக்கங்களைக் குறைத்து உங்கள் கனவுகள், ஆசைகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றலாம். ஏழை எளியோருக்கு மஞ்சள் நிற ஆடை தானம் செய்யலாம். மஞ்சள் நிறம் குருவின் ஆற்றலைக் குறிக்கின்றது. குருவிற்கு பிரியமான பொருட்களை ஏழை எளியோருக்கு தானம் செய்வதன் மூலம் உறவில் நல்லிணக்கம், வாழ்வில் வளம் வெற்றி மற்றும் நல்ல ஆரோக்கியம் கிட்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+