குரு வக்ர பெயர்ச்சி.. குருவின் மாற்றத்தால் யாருடைய வாழ்க்கையில் அதிசயங்கள் நிகழும் தெரியுமா
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி, வக்ர சஞ்சாரத்தினால் சில ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது.
சென்னை: குரு பகவானின் பார்வை கிடைத்தாலே போதும் கோடி நன்மைகள் ஏற்படும் என்பது பலரது வாழ்வில் நிரூபிக்கப்பட்ட உண்மை. குருபகவான் இப்போது மீன ராசியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். அடுத்த மாதம் வக்ர கதியில் பயணப்பட போகிறார். குருவின் மாற்றத்தால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சில அதிசய மாற்றங்கள் ஏற்படப்போகிறது. யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
குரு பகவான் பொன்னவன். திருமணம், குழந்தைப்பேறு, நல்ல வேலை கிடைப்பது குருபகவானின் அருளினால்தான். குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம் என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர்.
குரு பலன் வந்து விட்டாலே அதிர்ஷ்டம் தேடி வரும் வாழ்க்கையில் வசந்தம் வீசும். நிறைய பண வரவு வரும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். எனவேதான் குரு பெயர்ச்சியை பலரும் எதிர்பார்க்கின்றனர்.
குரு பகவான் சமீபத்தில் கும்ப ராசியில் இருந்து இடப்பெயர்ச்சியாகி மீன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். பூரட்டாதி நட்சத்திரத்தில் இருந்து உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் குரு பகவான் விரைவில் பின்னோக்கி வக்ர கதியில் பயணம் செய்வார். ஜூலை 29 முதல் நவம்பர் 24 வரையிலும், நான்கு மாத காலம் குருபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே வக்ரத்தில் செல்கிறார். இந்த பயணத்தினால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் பாதகாதிபதி. சனியில் நட்சத்திரத்தில் குரு பயணம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். ஜூலை இறுதி முதல் குருவின் பயணம் வக்ர கதியில் செல்வதால் வேலையில் சுகமான அனுபவங்கள் ஏற்படும். பண பற்றக்குறை நீங்கும் திடீர் பண வருமானம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். புதிய பொறுப்புகள் வரும். முக்கிய பைல்களில் கையெழுத்து போடும் போது கவனம் தேவை.

ரிஷபம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே..குரு பகவான் உங்கள் ராசிக்கு யோகாதிபதியான சனியின் நட்சத்திரத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். நல்ல வேலையில் கை நிறைய சம்பளம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். ஜூலை இறுதி முதல் குருபகவானின் பயணம் வக்ர கதியில் மாறுவதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். எதிர்பார்த்த பண வரவு வந்தாலும் நிறைய செலவுகள் வரும் சிக்கனம் தேவை.

மிதுனம்
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்டவர்களே, உங்களுக்கு பத்தில் குரு பதவி பறிபோகும் என்று பயப்பட வேண்டாம். வேலையில் சுமை கூடும். எந்த நேரத்திலும் விழிப்புணர்வோடு இருங்கள். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். திடீர் பண வரவு வரும். குரு பகவான் வக்ர கதியில் பயணம் செய்யும் காலத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் வரை வருமானம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். அற்புதமான மாற்றங்கள் ஏற்படப்போகிறது.

கடகம்
கடக ராசிக்காரர்களே.. குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் குடும்பத்தில் உற்சாகம் கூடும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடன் பிரச்சினை அதிகரிக்கும் என்றாலும் பண வரவு கூடும். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து வேலையில் பளு அதிகரிக்கும். பதற்றத்தில் சில தவறுகளை செய்வீர்கள் அதுவே சிக்கலை ஏற்படுத்தும் கவனமும் விழிப்புணர்வும் அவசியம்.

சிம்மம்
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே.. குரு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணம் செய்வதால் உங்களின் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குருவின் வக்ர சஞ்சார காலத்தில் உடல் சோர்வுகள் வந்து நீங்கும். நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். உயர்கல்வி பயில வெளியூர் பயணம் செல்வீர்கள். பண வரவு அதிகரிக்கும் செலவுகள் கூடும்.

கன்னி
புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே..உங்களுக்கு குருவின் பயணமும்.. பார்வையும் சாதகமாக உள்ளது. பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். ஆகஸ்ட் மாதம் முதல் புதிய மாற்றங்கள் ஏற்படும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் கண்டிப்பை எதிர்கொள்வீர்கள். சம்பள உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். அதிசயங்களை நிகழ்த்தப்போகிறார் குரு பகவான்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications