குரு பெயர்ச்சி 2022: திருமண யோகம் தரும் வியாழ நோக்கம்..யாருக்கு கெட்டிமேளம் கொட்டும்?
சென்னை: மனித வாழ்க்கையில் திருமணம் முக்கியத்துவம் வாய்ந்தது. கல்யாண வைபோகம் காண வேண்டும் என்று செய்யாத பரிகாரங்களை எல்லாம் செய்கின்றனர். கோவில் கோவிலாக ஏறி இறங்குகின்றனர். குரு பகவான் ஆசி இருந்தால் திருமணம் நடந்து விடும். அதை வியாழ நோக்கம் என்கின்றனர். குரு பகவான் கோச்சாரத்தில் சுற்றிவரும் போது ராசியை 5, 7, 9 ஆம் பார்வையாகப் பார்க்கும் நிலையே வியாழ நோக்கம் ஆகும். மீன ராசியில் பயணம் செய்யும் குரு பகவானால் யாருக்கெல்லாம் திருமண யோகம் கை கூடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.
குரு பார்க்க கோடி நன்மை. மனிதர்களை நல்வழிப்படுத்துவதில் குரு பகவானுக்கு நிகர் யாரும் இல்லை. அத்தனை சக்தி வாய்ந்தது குருவின் பார்வை. இவர் அமரும் வீட்டை விட பார்க்கும் வீட்டிற்குத்தான் யோகம் அதிகம்.
நவக்கிரகங்களிலே மிகவும் சிறந்தவர் எனப் போற்றக் கூடிய சுபக்கிரகம் குரு ஆவார். தேவர்களுக்கு ஆசானாக இருக்கும் இவர், அறிவு, ஞானம் இவற்றிற்கு மூலமாக விளங்குபவர். தனம், புத்திரபாக்கியம் ஆகிய இரண்டுக்கும் அதிபதி குரு பகவான். நம் ஜாகத்தில் குரு பலமாக இருந்தால் இந்த இரு யோகமும் தங்குதடையின்றி அமையும்.
குரு பகவானின் 5, 7,9ஆம் பார்வை சகல நன்மைகளையும் தரும். திருமணத்திற்கு குரு பலம் வருவது முக்கியம். தன்னை வழிபடுகிறவர்களுக்கு உயர்வான பதவியையும், மனமகிழ்ச்சி, புத்திரப்பேறு, செல்வம், சுகம் ஆகியவற்றையும் கொடுப்பவர். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் அருள் பூரணமாக இருந்தால், அவருக்குப் பெரும் பதவிகள் கிட்டும்.

குரு பார்வை கோடி நன்மை
குரு பகவான் தற்போது மீன ராசியில் அமர்ந்து கடகம், கன்னி, விருச்சிகம் ராசியை பார்வையிடுகிறார். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு அற்புத பலன்கள் கிடைக்கப்போகிறது. குரு பார்வையால் வியாழ நோக்கம் வந்திருக்கிறது திருமணத்திற்கு வரன் பார்க்கத் தொடங்கலாம். புத்திர பாக்கியமும் கிடைக்கும்.

ரிஷபம்
குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 3,5,7ஆம் வீடுகளின் மீது விழுவதால் சகோதரர்களின் உதவி கிடைக்கும். சகோதரர்களுக்கு உதவி செய்வீர்கள். திருமணம் சுப காரியம் நடைபெறும். குழந்தைக்காக தவம் இருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு மேன்மைகளை அள்ளித்தரப்போகிறது. குரு பகவான் உங்களை ஜொலிக்க வைக்கப்போகிறார்.

கடகம்
கடக ராசிக்காரர்களே.. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் நல்ல வேலை கிடைக்கும். செய்யும் தொழிலில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். பதவி உயர்வு ஏற்படும். குழந்தைகளினால் நன்மைகளும் பூர்வ புண்ணிய சொத்துக்களினால் வருமானமும் கிடைக்கும். சமூகத்தில் நல்ல மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே..களத்திர ஸ்தான குருவின் நேரடி பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. இதுநாள் வரை நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு விடிவுகாலம் பிறக்கப் போகிறது. உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். திருமண தடை நீங்கும். புத்திரபாக்கியம் கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம் வரும். . சமூகத்தில் நல்ல மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும். பணம் பொருள் செல்வம் தேடி வரும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே..குருவின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். பாக்ய ஸ்தானம், லாப ஸ்தானத்தின் மீதும் குருவின் பார்வை விழுகிறது. செய்யும் தொழிலில் லாபம் ஏற்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புகழும் கீர்த்தியும் செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களே..குரு பகவான் மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குருவின் பார்வை உங்க ராசிக்கு லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானம், களத்திர ஸ்தானத்தின் மீது விழுகிறது. திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு சுப காரியம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத சந்தோஷங்களும் சௌபாக்கியங்களும் தேடி வரும்.

மீனம்
மீன ராசிக்காரர்களே.. ராசிநாதன் குரு பகவான் ராசியில் அமர்ந்து உங்கள் ராசிக்கு 5,7,9ஆம் வீடுகளைப் பார்வையிடுகிறார். உங்களுக்கு நிறைய நல்லது நடக்கும். திருமணம் கை கூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புத்திர பாக்கியங்கள் தேடி வரும். தொழிலில் ஏற்பட்டு வந்த தடைகளும் தாமதங்களும் நீங்கி வருமானம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் கை கூடி வரும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications