குரு பெயர்ச்சி பலன் 2023: குடும்பத்தில் குதூகலம்.. மன நிம்மதியை மகிழ்ச்சியை தரப்போகும் குரு பகவான்
மதுரை: குரு பகவான் மேஷ ராசியில் ராகு உடன் இணைந்து பயணம் செய்கிறார். குருவின் பயணம் சுக்கிரனின் நட்சத்திரமான பரணி நட்சத்திரத்திற்கு மாறப்போகிறது. குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகளும் சில ராசிக்காரர்களுக்கு சில பாதிப்புகளும் வரலாம். தசாபுத்தியைப் பொருத்து சாதக பாதகங்கள் நடைபெறும். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் சுப பலன்களைப் பெரும். இந்த குரு பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்கள்தான் நடைபெறும். குருபெயர்ச்சியால் பாதிக்கப்படலாம் என அச்சப்பட வேண்டாம் ஜோதிடத்தில் அதற்காக பரிகாரங்கள் உள்ளன.
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் ஜென்ம ராசிக்கு இரண்டு, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று ஆகிய ஸ்தானங்களில் குரு கோச்சார ரீதியாக அமரும் போது நன்மைகளையே செய்வார். அப்போது மற்ற இடங்களில் அமரும் போது நன்மை இல்லையா பாதிப்பு வருமோ என்று அஞ்ச வேண்டாம். குரு எந்த இடத்தில் அமர்ந்தாலும் அவர் பார்க்கும் இடங்களினால் பலன் கிடைக்கும். குரு பகவான் இந்த முறை மீனம் ராசிக்கு இரண்டாம் வீடு, தனுசு ராசிக்கு ஐந்தாம் வீடு, துலாம் ராசிக்கு ஏழாம் வீடு, தனுசு ராசிக்கு ஒன்பதாம் வீடு, மிதுனம் ராசிக்கு பதினொன்றாம் வீடு என குருவின் சஞ்சாரம் அமையப்போகிறது.

மேஷம்:
குருபகவான் உங்கள் ராசியில் ராகு உடன் ஜென்ம குருவாக பயணம் செய்வது மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தரப்போஎல்லையில்லாத வெற்றிகளைத் தருவார். குருவின் பார்வை படும் 5, 7, 9, ஆகிய ஸ்தானங்கள் வலுவடைய போகிறது. ஜந்தாம் பாவத்தை கோசார குரு பார்த்தால் உயர்பதவி கிடைக்கும், புது முயற்சிகள் கை கூடும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். கணவன் மனைவி உறவு உற்சாகமடையும். உயர்கல்வியை படிக்க ஆர்வம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ரிஷபம்:
குரு பகவான் 12ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். குரு மறைவது சிறப்பு. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடடும் ராஜ ஜோகம் என்ற விதியில் யோகத்தை செய்யும். நன்மை செய்யாத கிரகம் மறைந்தால் நன்மையை அதிகமாக எதிர்பார்க்கலாம். இதுநாள்வரை கவலைகள் அதிகமாக இருந்தது. இனி துன்பங்களில் இருந்து விடுதலை பெறுவீர்கள். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வருமானம் பெருகும். நல்ல வேலை கிடைக்கும்.தொழில் வியாபாரம் சிறப்படையும்.

மிதுனம்:
லாப ஸ்தானத்தில் அமரும் குரு பகவானால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். ராசிக்கு ஏழாம் வீட்டை குரு பார்க்கிறார். களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் இது வரை தடைப்பட்ட திருமணம் நடக்கும். ஐந்தாம் வீடு, ஏழாம் வீட்டை குரு பார்ப்பதால் சிலருக்கு திருமணம் நடக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். காதல் ஜோடிகளுக்கு திருமணம் கைகூடி வரும். திருமணம் ஆகியும் நீண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பிராப்தி கிட்டும். எது எல்லாம் விதிக்கப்பட்டுள்ளதோ அதை எல்லாம் அனுபவிப்பிர்கள். நன்மையான விசயங்களை மட்டும் அதிகமாக அனுபவிப்பீர்கள். மாணவர்கள் வெளியூர் வெளிநாடு சென்று கல்வி பயில நன்மை செய்வார்.
கடகம்:
பத்தில் குரு பயணம் செய்வதால் புதிய பதவி தேடி வரும். பத்தில் ஒரு பாவி இருப்பது சிறப்பு என்று சொல்வார்கள். ராகு உடன் பத்தாம் வீட்டில் குரு பயணம் செய்வதால் உயர்பதவிகள் தேடி வரும். வாழ்க்கை ரீதியான பயணத்தில் வெற்றி கிடைக்கும். வேலை தொழிலில் சங்கடங்கள் ஏற்படும். குரு பகவான் ஆளுமை தன்மையை அதிகரிப்பார். பத்துக்கு அதிபனே பத்தில் வருவதால் பதவி உயர்வை தருவார். குரு பகவான் தன்னுடைய ஏழாம் பார்வையால் சுகஸ்தானம் என்ற நாலாம் பாவத்தை பார்க்கிறார். தாயார் வீடு வாகனம் ஆகிய ஸ்தானத்தை பார்ப்பதால் புது வீடு கட்டி குடிபோகலாம். வண்டி வாகனம் வாங்கும் யோகம் கை கூடி வரப்போகிறது. நீண்ட நாள் கனவுகள் நனவாகும். அம்மாவின் உடல் நலனில் இருந்த பிரச்சினைகள் தீரும். பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பிரச்சினைகளை கஷ்டங்களை குரு பகவான் நிவர்த்தி செய்வார்
சிம்மம்:
பாக்ய ஸ்தானத்தில் குருபகவான் பயணம் செய்வதால் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு யோக காலம். மேஷ ராசியில் அமர்ந்த குரு சிம்ம ராசியை பார்வையிடுகிறார். உங்கள் ராசியை பார்க்கும் குருவினால் ராஜயோகம் காத்திருக்கிறது. உங்கள் ராசிக்கு 3ஆம் வீடான முயற்சி ஸ்தானம், 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்வையிடுவதால் ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும், உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் மிகவும் புத்துணர்ச்சியாக இருப்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் உள்ள சண்டை சச்சரவுகள் தீரும்.

தைரியம் கூடும்:
சிம்ம ராசிக்காரர்களே நீங்கள் செய்யும் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். உங்களின் தைரியம் அதிகரிக்கும். எதையும் துணிந்து செய்வீர்கள். உங்களின் பூர்வ புண்ணியத்தின் மூலம் நன்மைகள் அதிகம் நடைபெறும். பிள்ளைகளுக்கு நன்மைகள் நடைபெறும். அவர்களின் கல்வி நிலை உயரும். பூர்வீக சொத்துக்களின் மூலம் உங்களுக்கு பலன்கள் கிடைக்கும். கல்வி ஸ்தாபனம் நடத்துபவர்களுக்கு நன்மை நடைபெறும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.
கன்னி:
குருபகவான் 8ஆம் வீட்டில் பயணம் செய்வதால் கவலை வேண்டாம். தன் வீட்டில் ஆட்சி பெறுகிறார். கவலை வேண்டாம். அஷ்டமத்து சனியின் பிடியில் இருக்கும் உங்களை விடுவிக்கவே குரு அங்கே போய் அமர்கிறார். பணமழை உங்க வீட்டில் கொட்டப்போகிறது.
குரு உங்க ராசிக்கு விரைய ஸ்தானம், குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானங்களை பார்வையிடுகிறார். ராசிக்கு 2ஆம் வீட்டை குரு பார்வையிடுவதால் வருமானத்திற்கு குறைவிருக்காது.
பொருளாதார வளர்ச்சி:
குடும்ப ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் சுபத்தோடு வருமானம் அதிகரிக்கும். பொருளதார வளர்ச்சியை தருவார் ஆனந்தத்தை அள்ளித்தரப்போகிறார். கணவன் மனைவி பிரச்சினை தீரும். வாழ்க்கையில் இதுநாள் வரை இருந்த கசப்பான அனுபவங்கள் நீங்கும். 12ஆம் வீட்டின் மீது குரு பார்வை விழுவதால் நிறைய பொருட்கள் வாங்குவீர்கள். கடன் நிறைய வாங்குவீர்கள். பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். உடல் சோர்வு நீங்கும்.

துலாம்:
கடன் நோய்களால் அல்லப்பட்டவர்களுக்கு தொல்லைகள் நீங்கும். ஒளிமயமான எதிர்காலம் அமையப்போகிறது. வேலையில் புரமோசன் கிடைக்கும். கைநிறைய சம்பளத்தில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். குரு பகவானின் நேரடி பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். இந்த குருப்பெயர்ச்சியினால் பொன்னான கால கட்டம் கிடைக்கப்போகிறது.
விருச்சிகம்:
கடன் நோய் எதிரி ஸ்தானத்தில் ராகு உடன் குரு பயணம் செய்வதால் உடம்பில் உள்ள நோய்களை சுட்டிக்காட்டும். நிவர்த்தி கிடைக்கும். கடன் மூலம் சொத்து சேர்க்கலாம். கடன் உதவி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்குத் தேவையான கடன் உதவி கிடைக்கும். எதிரிகள் இருந்தும் நன்மைகள் நடைபெறும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். உங்களுக்க விபரீத ராஜயோகம் வந்திருக்கிறது. கடன்களை தீர்க்க வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்தை அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதியினர் ஓன்று சேருவார்கள்.
தனுசு:
இந்த குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு மாபெரும் அதிர்ஷ்டமும் யோகமும் கிடைக்கப்போகிறது. மாபெரும் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது. திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லையே என்று ஏங்கியவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். குல தெய்வத்தை காட்டும் இடம். ராசியை பார்க்கிறார். ராசிக்கு லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானத்தினை பார்வையிடுவது மிக சிறப்பு. குழந்தை பேறு கிடைக்கும். திருமணம் நடைபெறும் ராகு உடன் குரு இணைந்து பயணம் செய்யும் காலம் ராஜயோகம் கைகூடி வரப்போகிறது.
மகரம்:
சுக ஸ்தானமாக 4ஆம் வீட்டில் குரு பகவான் பயணம் செய்வதால் நன்மைகள் பல நடைபெறும். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். தொழில் ரீதியான பிரச்சினைகள் தீரும். தொழில் செய்ய இடம் கிடைக்கும். கவலைகள் நீங்கும் காலம். ஜீவன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வெளிநாட்டு வேலை கிடைக்கும். நிரந்தரமான வேலை கிடைக்கும். சிலருக்கு நினைத்த இடத்திற்கு இடமாற்றம் நடைபெறும். இந்த குரு பெயர்ச்சியினால் இன்பம் துன்பம் என மாறி மாறி வரும்.

கும்பம்:
வாழ்க்கையில் பட்ட சிரமங்கள் விலகி சுபிட்சம் நடைபெறப்போகிறது. தைரிய, வீரிய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பது நன்மை நடக்கிறது. இனி குரு பெயர்ச்சியால் அதிக நன்மைகள் நடைபெறப் போகிறது. மூன்றாம் வீட்டில் அமர்ந்து குரு உங்கள் ஏழாம் வீட்டையும் பாக்ய ஸ்தானம், லாப ஸ்தானத்தை பார்க்கிறார். திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். சிலருக்கு இரண்டாவது திருமணம் அமையும். திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டு விலகி இருந்தவர்கள் மீண்டும் ஓன்று சேருவார்கள். அற்புதமான குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது.
மீனம்:
உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் ராகு உடன் குரு இணைந்து பயணம் செய்கிறார். தன, வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உள்ள குருவினால் உங்கள் பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். பணவரவு அதிகமாகும். இழந்த செல்வாக்கை மீட்பீர்கள். அதிக யோகமான பலன்கள் நடைபெறும். ஏழரை சனியில் விரைய சனியாக இருந்தாலும் பிரச்சினையில்லை. கடன் தொல்லைகள் தீரும். குரு தனது ஏழாம்பார்வையாக உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டினை பார்க்கிறார். எட்டாம் வீட்டில் குரு பார்வை விழுவதால் கண்டங்கள் விலகும். பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் நீங்கும். தாலி பாக்கியத்தை கொடுப்பார். திருமணம் சுபகாரியம் புது முயற்சிகள் கைகூடும்.
பரிகாரம்:
பொதுவாக குரு கல்விக்கு உரிய கிரகமாகும். குருபெயர்ச்சியால் பாதிக்கப்படும் லக்னகாரர்கள், ராசிக்காரர்கள் பழைய பள்ளிகளை புதுப்பிக்க உதவலாம். ஏழை மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கலாம். அப்படி முடியாமல் போனால், பணம் வாங்காமல் டியூஷன் எடுக்கலாம். ஒருவர் கல்வி பெறுவதற்கு ஏதாவது ஒரு வகையில் உதவினால் அது குருவை மகிழ்ச்சியடையச் செய்யும். இந்த பரிகாரங்களை மனநிறைவுடன், உண்மையாகச் செய்யும் போது குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்கள், ஓரளவு பாதிப்பின்றித் தப்பலாம். நல்ல பலன்கள் பெறுபவர்கள் கூடுதலாக சில சலுகைகளை குருவிடம் இருந்து பெறலாம். திருமணம், புத்திரபாக்கியம் போன்ற வேண்டுதல்களுக்கு குரு பகவானை வணங்குவதற்கு திருச்செந்தூர் செல்வது சிறப்பைத் தரும்.












Click it and Unblock the Notifications