குரு பெயர்ச்சி பலன் 2023.. மேஷத்தில் வக்ரமடைந்த குரு.. 3 ராசிக்காரர்களுக்கு இனி பொற்காலம்
சென்னை: குரு பகவான் மேஷ ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்கிறார். வக்ரமடைந்த குருபகவானின் பார்வை, சிம்மம், துலாம், தனுசு ராசிக்காரர்கள் மீது விழுகிறது. வக்ரமடைந்த குருபகவான் யாருக்கெல்லாம் கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறார்? யாருக்கெல்லாம் பொற்காலமாக அமையப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்: சுப கிரகமான குரு பகவான் பொன்னவன் என்று அழைக்கப்படுகிறார். மேஷ ராசியில் குருவும் ராகுவும் சேர்ந்திருக்கின்றனர். பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் குரு பகவான் வக்ரமடைகிறார். அமோகமான நன்மையை தரப்போகிறது. ராசியில் ராகுவும் களத்திர ஸ்தானத்தில் கேதுவும் பயணம் செய்கின்றனர். குரு வக்ரமடையும் இந்த கால கட்டத்தில் நல்ல காரியத்தை சாதிக்கக்கூடிய ஆற்றலும் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குரு உங்களுக்கு பாக்யாதிபதி. மனதளவில் உற்சாகம் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல யோகம் கைகூடி வரும். திருமணம் சுப காரியம் கைகூடி வரும். தொழில் வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும். பிள்ளைகளின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். குழந்தைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். சுப காரியங்களுக்காக விரைய செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக சிந்தித்து சேமிப்பீர்கள். திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லையே என்று ஏங்கியவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். செல்வ வளம் அதிகரிக்கும். வியாழக்கிழமை குரு ஹோரையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே.. உங்களுக்கு அற்புதங்கள் நடைபெறப்போகிறது. மிகப்பெரிய செல்வ வளத்தையும் சந்தோஷத்தையும் தரப்போகிறது. டிசம்பர் மாதம் வரைக்கும் குரு பகவான் விரைய ஸ்தானத்தில் வக்ர நிலையில் பயணம் செய்வதால் திடீர் செலவுகள் அதிகரிக்கும். சுப செலவுகள் அதிகரிக்கும். மனக்கவலைகள் நீங்கும் மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புது வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு கை நிறைய சம்பளத்தில் புரமோசனும் கிடைக்கும். சிலருக்கு கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வெளிநாட்டு வாய்ப்புகளும் கைகூடி வரும். உடலில் இருந்த நோய்கள் குணமடையும். கடன் பிரச்சினைகள் நீங்கும். குரு தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்: குரு பகவான் லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் போது வக்ரமடைகிறார். குரு பகவான் பதினோராம் வீட்டில் வக்ரமடைவது உங்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். சந்தோஷத்தின் உச்சக்கட்டத்தில் இருப்பீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும். குரு பகவான் இயற்கையிலேயே சுப கிரகம் என்பதால் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் உங்களுக்கு நன்மைகளை செய்வார். நல்ல வேலை கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தான அதிபதி, களத்திர ஸ்தான அதிபதி குரு பகவான் மிகப்பெரிய யோகத்தையும் மேன்மைகளையும் தரப்போகிறார். சண்டை சச்சரவுகள் நீங்கும். நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். பிரச்சினைகள் நிவர்த்தியாகும். புரமோசன் கிடைக்கும். மன நிம்மதி அதிகரிக்கும். வேலை கிடைப்பதில் இருந்த தடைகள் நிவர்த்தியாகும். சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த சிக்கல்கள் நீங்கும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். அன்பும் ஆதரவும் தேடி வரும் உறவும் நட்பும் கூடி வரும். உங்களை விட்டு விலகிச்சென்றவர்கள் நெருங்கி வருவார்கள். தொழில் வியாபாரம் செழிப்படையும் இனி மிதுன ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக அமையப்போகிறது.












Click it and Unblock the Notifications