Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2024: குருவின் பொன்னான பார்வை.. 2024ல் கோடி நன்மைகளை பெறும் ராசிக்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள். 2024 ஆம் ஆண்டு மே மாதம் குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. குரு பகவானின் பயணம் மற்றும் பார்வையால் பலனடையப்போகும் ராசிக்காரர்கள் யார்? நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு குபேர யோகமும் கோடீஸ்வர யோகமும் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

குரு பகவான் தரும் யோகம்: பொன்னவன் என வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் கஷ்டம் வராது. குடும்பமும் நல்ல முறையில் இருக்கும். ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை வராது. எனவேதான் திருமணம், குழந்தை பாக்கியம், வேலையில் உயர்வு, வருமானத்தில் உயர்வு, நோய் நொடியற்ற வாழ்க்கை வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த குரு பெயர்ச்சியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

 Guru peyarchi palan 2024: Benefits of guru vision Kanni, Viruchigam, Makaram

கன்னி ராசி: அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் கன்னி ராசிக்கு 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்திற்கு செல்லப்போகிறார். மே 1ஆம் தேதி முதல் கன்னி ராசிக்காரர்களுக்கு தடைகள் விலகும் காலம் வந்து விட்டது. குருபகவான் உங்கள் ராசியை பார்வையிடுகிறார். கூடவே உங்கள் ராசிக்கு மூன்று மற்றும் ஐந்தாம் வீட்டையும் பார்வையிடுகிறார். அதிர்ஷ்டமும் நன்மைகளும் தேடி வரப்போகிறது.

ராஜயோக காலம்: ஒன்பதாம் வீட்டில் அமரப்போகும் குரு உங்கள் ராசியில் அமர்ந்துள்ள கேதுவை பார்வையிடப்போவதால் சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். 2025ஆம் ஆண்டு மே மாதம் வரைக்கும் ஓராண்டு காலத்திற்கு ராஜயோகம்தான். கடந்த ஓராண்டு காலமாக கடன்கள் நோய்களை அளித்து வந்த குரு இனி நோய்களை தீர்க்கப்போகிறார். கடன்களை அடைக்க வருமானத்தை தரப்போகிறார்.

நல்ல வேலை கிடைக்கும்: குரு பகவானின் பார்வை பலம் இருந்தால்தான் திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்க ராசியை குரு பார்ப்பதால் புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் அரவணைப்பு கிடைக்கும். தொழில் வளர்ச்சி அடையும். நட்புகள் தேடி வரும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் தீரும். குரு பார்வை மூன்றாம் வீட்டில் விழுகிறது. சகோதர சகோதரிகளுக்கு நன்மைகள் நடக்கும் திருமணம் நடைபெறும்.

வீடு தேடி வரும் யோகம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டை பார்வையிடுவதால் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்கு காத்திருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். மனதிற்கு பிடித்த வாழ்க்கைத்துணை அமையும். சொந்த வீடு கட்டுவீர்கள் சொத்து சுகம் வாங்கும் யோகம் வரும் உயர்பதவியில் உள்ளவர்களுக்கு அதிகார பலம் ஆளுமை புகழ் கீர்த்தியை தரும். உயர்ந்த அந்தஸ்தை தரும். அதிர்ஷ்டகரமான காலமாக 2024ஆம் ஆண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு அமையப்போகிறது.

விருச்சிகம்: குரு பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிரடியான யோகங்கள் தேடி வரப்போகிறது. குரு உங்கள் ராசியை தன்னுடைய ஏழாம் பார்வையால் நேரடியாக பார்க்கிறார். திடீர் மாற்றங்களை தரப்போகிறார் குரு பகவான். குருவின் பார்வை ராசிக்கு மூன்றாமிடத்தில் பதிகிறது. சகோதர சகோதரிகளிடம் இருந்த பிரச்சினைகள் தீரும். சந்தோசங்களையும் ஆதரவுகளையும் கொடுப்பார்கள்.

பொற்காலம்: 11ஆம் இடத்தில் குருவின் பார்வை பதிவதால் லாபங்கள் நிறைந்த ஆண்டாக அமையும். வருடம் முழுவதும் வருமானம் நிறைந்த ஆண்டாக அமையும். செய்யும் தொழிலில் லாபத்தை தரும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும், அறிவித்திறன் அதிகரிக்கும். சனி சிக்கல்களை உருவாக்கினாலும் குருவினால் பாதிப்புகள் குறையும். தொட்டதெல்லாம் பொன்னாகும் பொற்காலமாக விருச்சிக ராசிக்காரர்களுக்கு அமையப்போகிறது.

மகரம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி குல தெய்வ அருளை தரப்போகிறது. 5ஆம் வீட்டில் அமரப்போகும் குரு பகவான் உங்களுடைய ராசியை ஒன்பதாம் பார்வையாக பார்வையிடுவதால் மனதில் உள்ள எண்ணங்கள் ஆசைகள் நிறைவேறும். நீங்க ஆசைப்பட்டது எல்லாம் நிறைவேறும். குருவின் ஆதரவு அற்புதமாக இருக்கும். பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியங்கள் உங்களுக்கு நன்மையை தரப்போகிறது.

பரிபூரண ராஜயோகம்: குழந்தை இல்லையே என்று தவித்தவர்களுக்கு குரு இந்த முறை குழந்தை பாக்கியத்தை கொடுப்பார், திருமணத்தை நடத்தி கொடுப்பார். வெளிநாடு யோகத்தை கொடுப்பார். வேலை உயர்ந்த பதவி உயர்வோடு கூடிய வருமானம் கூடும். பரிபூரண ராஜயோகம் செயல்படப்போகிறது. குரு உங்களுடைய லாப ஸ்தானத்தை பார்வையிடுவதால் வருமானத்தில் லாபத்தை தருவார் நல்ல ஆளுமைத்தன்மையை தருவார். ஆற்றல் வாய்ந்த நேரம். புகழும் கீர்த்தியும் தேடி வரும். அப்பாவினால் சொத்துக்கள் கிடைக்கப்போகிறது அனுபவிக்கத் தயாராகுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+