குரு பெயர்ச்சி பலன் 2024: ரிஷப ராசிக்கு இடம் மாறும் குரு.. சித்திரை முதல் யாருக்கு பொற்காலம்
சென்னை: குரு பகவான் மேஷ ராசியில் உள்ள கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்து ரிஷப ராசியில் உள்ள கார்த்திகை நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகிறார். நிகழும் மங்களகரமான குரோதி ஆண்டில் சித்திரை 18ஆம் தேதி பகல் 1 மணி அளவில் குரு பகவான் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பகவானின் பார்வை கன்னி, விருச்சிகம், மகர ராசியின் மீது விழுகிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம் : குரு பகவான் ஜென்ம ராசியில் இருந்து விலகி இரண்டாம் வீடான தன, குடும்ப வாக்கு ஸ்தான இடத்திற்கு பெயர்ச்சி அடையப்போகிறார். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். வாக்கு பலிதம் ஏற்படும். திடீர் தனவரவு வர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சுபகாரியம் நிறைவேறும். தடைகள் நீங்கி திருமணம் சிறப்பாக நடைபெறும். கடன்கள் அத்தனையும் தீரும். குருவின் பார்வையால் உத்தியோக உயர்வு, புதிய தொழில் அமையும். வேலை விசயமாக எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொன்னையும் பொருளையும் அள்ளித்தரப்போகிறார் குருபகவான்.

ரிஷபம் : உங்கள் ராசிக்கு லாப ஸ்தான அதிபதி குருபகவான் ஓர் ஆண்டு காலம் உங்கள் ஜென்மத்தில் அமர்கிறார். பொதுவாக "ஜென்ம குரு வனத்தினிலே என்று சொல்வார்கள். ஆனாலும் உங்கள் ரிஷப இராசிக்கு குரு பகவான், 8 மற்றும்11 இடத்துக்கு அதிபதி. இவர் ஜென்மத்தில் அமர்ந்து கேதுவை பார்வையிடுவதால் நன்மையே செய்வார். வீடு நிலம் வாங்கும் யோகம் கைகூடி வரும். திருமணம் கைகூடி வரும். பிள்ளைகளால் நல்ல செய்தி தேடி வரும்.
கூட்டு தொழில் சிறப்படையும். தெய்வகாரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிநாடு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். உடல்நலனில் மட்டும் சற்று கவனம் தேவை. பணம் விசயத்தில் கவனம் தேவை. ஜாமீன் கையெழுத்து போடும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மிதுனம் : குரு பகவான் 12ஆம் வீடான விரைய ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு அமர்கிற இடம் உங்களுக்கு விரைய ஸ்தானம் என்றாலும் நன்மைதான் செய்யும். குரு உங்கள் ராசிக்கு 7 மற்றும் 10ஆம் இடத்துக்கு அதிபதி உங்கள் இராசிக்கு குரு கெட்டவன். 12ஆம் வீட்டில் மறைந்த குரு ராஜ யோகத்தை கொடுக்கப்போகிறார். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீடு வாங்கும் அமைப்பை குரு பகவான் ஏற்படுத்துவார். இதுநாள்வரை கடன் தொல்லையில் இருந்தவர்களுக்கு நிவர்த்தி கிடைக்கும்.
படித்து முடித்து விட்டு வெளிநாடு செல்ல வேலைக்கு காத்திருந்தவர்களுக்கு விசா கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சுபமாக முடியும் மாணவர்கள தேர்வில் வெற்றி பெறுவீர்கள். உடல்நலனில் இருந்த பிரச்னை குணமாகும். கணவன் மனைவி இடையே வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.
கடகம் : மே 1ஆம் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். நினைத்தது எல்லாம் நிறைவேறும். யோகங்கள் கைகூடி வரப்போகிறது. வெற்றி மீது வெற்றி வரப்போகிறது. குருவின் பார்வையால் தொட்டதெல்லாம் பொன்னாகும். எதையும் தைரியமாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடி வரும். எதையும் துணிந்து முடிவு செய்வீர்கள். லாப குரு தொழில் வியாபாரத்தில் லாபத்தை வாரி வழங்கப்போகிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications